செவ்வாய், அக்டோபர் 01, 2013

மாதவிடாய்

மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு பெண் சுறுசுறுப்பாக களையாகவே இருப்பாள். மெனொபோஸ் (MENOPAUSE) ஆனவுடன் சில உபாதைகள் வரும் இருப்பினும் தகுந்த பராமரிப்பு விழிப்புணர்வு இருந்துவிட்டால் அதையும் சரி செய்யலாம்.

உடம்பிலிருந்து வேர்வைமலம்சிறுநீர் வெளியாவதைப்போல் இதுவும் உடலிலிருந்து வெளியேறும் ஓர் கழிவுதான்.

மாதத்திற்கு ஒருமுறைபெண் கர்ப்பம் தரிக்கும்  காலகட்டத்தைத் தவிர்த்து  மற்ற அனைத்து மாதங்களிலும் மாதவிடாய் கண்டிப்பாக வரவேண்டும். அப்படியில்லையேல் உடலில் எதோ சிக்கல் உள்ளதென்றும் அல்லது மெனோபொஸ் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தப்படும். சிலருக்கு நாற்பது வயது வந்தவுடன் மெனொபோஸ் அறிகுறிகள் தென்படத்துவங்கிவிடும். ஒன்றும் பிரச்சனையில்லை. மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் என்பது சமாளிக்கக்கூடியதே.

அதுவரையில் மாதவிடாய் காலகட்டத்தின் போது சில வேதனைகளைப் பெண்ணாகப்பட்டவள் அனுபவித்தே ஆகவேண்டும். இதை எதற்காக வேதனை என்கிறோம் என்றால்மாதவிலக்கின் போது பெண்களின் உடல்களில் ஏற்படுகிற வலி உபாதைகளைச் சொல்லி மாளாது. இது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடலாம். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கின்ற வேதனைகள் அனைத்தும் ஒரே மாதிரியானதுவே.

மாதம் ஒருமுறை வெளியேறுகிற  இந்தக் குருதிப்போக்கின் போதுசில பெண்கள் வேலைக்கு விடுப்பு எடுத்து ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். சில பெண்கள் எதாவதொரு தைலத்தைக்கொண்டு உடல் முழுக்கப்பூசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் தூங்கிக்கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சில பெண்கள் வாந்தி எடுப்பார்கள். சிலர் வலிபொறுக்கமுடியாமல் கதறி அழுவார்கள். குறிப்பாக; ஆரம்ப காலகட்ட மாதவிடாய் என்பது கன்னிப்பெண்களைப் பாடாய்படுத்தி விடும். நாங்களெல்லாம் சுவரில் குத்திக்கொண்டும் தரையில் புரண்டுகொண்டு அழுது வடிந்த காட்சிகளைக் கண்டுஉடன்பிறப்புகளே அரண்டுபோயிருக்கின்றனர்.

மாதவிடாயின் போது ஏற்படுகிற வலியினைப் போக்குவதற்கு சிலர் வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பார்கள். எல்லாக் காலகட்டத்திலும்  தமது கைப்பையிலேயே தயார் நிலையில் வாங்கி   வைத்திருப்பார்கள் இம்மாத்திரைகளை. மாதவிடாய் வருகிறது என்கிற அறிகுறிகள் தென்படத்துவங்கியவுடன் மாத்திரைகளை விழுங்கிக்கொள்வார்கள். மாத்திரைகள் கொஞ்சம் கேட்கும், வலி முற்றாக நீங்கிவிடுமென்பதெல்லாம் சும்மா.!

வலி எப்படி இருக்கும்?

சரிஇதன் வலி எப்படி இருக்கும்?  சில ஆண்கள் நினைப்பார்கள்வலி வலி என்கிறார்களேஅந்த வலி எப்படித்தான் இருக்கும்?

அடிவயிற்றில் இரண்டு கைகளைக்கொண்டு உள்ளே இருக்கின்ற கர்ப்பப்பையை பலங்கொண்டு யாரோ சதா பிசைவதுபோலவே இருக்கும் அதன் வலி. வலி விட்டு விட்டு வரும். கொஞ்ச நேர அமைதிக்குப்பிறகு மீண்டும் வலி ஆரம்பமாகும். மாதவிடாயின் போது முதல் இரண்டு நாள்கள் இவ்வலி இதே அளவில் தொடரும்.

திருமணமாகி குழந்தைகளுக்குத் தாயான பிறகு பெண்களுக்கு அவ்வலி கொஞ்சம் குறையலாம். இருப்பினும், ஆளுக்கு ஆள் மாறுபட்ட நிலையிலேயே இவ்வலியினை எதிர்நோக்கியே ஆகவேண்டிய கட்டாயநிலையில் சில பெண்கள்.

வயதுக்கு வருதல்..!

சினிமாவில் காட்டுவதைப்போல்பூப்பெய்திய மறுநொடிஅப்பெண்குழந்தை வயிற்றைப்பிடித்துக்கொண்டு கதறுவாள்பிறகு மொட்டுவிரிகிற மலர் ஒன்றினைக்காட்டுவார்கள். அதன்பின் தாய்மாமன் மச்சான் எல்லாம் தென்னை ஓலைகளைக் கொண்டுவந்து குடிசை எல்லாம் போட்டு விஷேசமெல்லாம் நடைபெறும். (நம்மவர்கள் மட்டும்தான் இன்னமும்..)

இது அப்பட்டமான கட்டுக்கதை. முதன் முதலில் வயதிற்கு வருகிறஅதாவது ஆரம்ப இரத்தப்போக்கு ஏற்படுகிறபோதுபெண்பிள்ளைகளுக்கு வயிற்றுவலி எல்லாம் இருக்காது. எதோ ஒரு திரவம் வழவழவென சுறந்திருப்பதை அவள் உணர்வாள்ஒன்றும் அறியாத பெண் என்றால் உடைகளை எல்லாம் இரத்தப்போக்கினால் உழப்பிக்கொண்டு என்ன ஏது என்று தெரியாமல் மிரண்டுபோவாள். விவரமறிந்த பெண் என்றால்காதும் காதும் வைத்தாட்போல் தாயிடம் சொல்லி அடுத்தக்கட்ட நிகழ்விற்குத்தயாராவாள்.

அதன்பின்ஒரிரு மாதங்கள் கழித்து மாதவிலக்கு ஏற்படுகையில் வலி ஆரம்பமாகும். லேசாகத்தான் வலிக்கும்மாதங்கள் செல்லச்செல்ல பிடுங்கி எடுத்துவிடும் வலி. கை கால்கள் எல்லாம் நடுங்கும். முகம் வெளிறிப்போகும். மயக்கம் வரும்வாந்திவரும். எதிலுமே நாட்டமில்லாத நிலை ஏற்படும். சில பெண்கள் உணவு கூட எடுக்க `மூட்’ இல்லாமல் நாள் முழுக்க பட்டினியாகவே கிடப்பார்கள். சரியான உணவுமுறை இல்லாதவர்களுக்கு முகமெல்லாம் முகப்பருக்களால் நிறைந்துவிடும். தூய்மை பேணாத பெண் என்றால் உடலில் இருந்து துர்வாடை வேறு வீசும். இதுபோன்ற காலகட்டத்தில் பெண்கள் குறைந்தது  இரண்டு மூன்று முறையாவது குளித்துவிடுவது நல்லது.

மாதவிலக்கு என்றால்?

அதுசரிஏன் மாதவிடாய் வருகிறதுசில ஆண்களுக்கு இதில் இருக்கின்ற ஆர்வமும் ஆய்வுமனப்பான்மையும் பல பெண்களிடம் இருப்பதில்லை. பலர் இதுகுறித்த சந்தேகங்களுக்கு விடைகாணாமலேயே இருந்து விடுகிறார்கள். உடலில் சேர்கிற அசுத்தம் இரத்தத்தின் வழி வெளியேறுகிறதென்று சொல்லி மழுப்பிவிடும் பெண்கள்தான் அதிகம்இன்னமும்.

சித்தர்கள் இராச்சியம் - தோழியின் ப்ளாக்கில் படித்த தகவலை உங்களிடமும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையையும் அதனைப் பாதுகாக்க வேண்டி உருவான நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழி குருதிப்போக்கு ஏற்படுவதையே மாதவிலக்கு என்கிறோம். இத்தகைய போக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப்பொருத்து மூன்று அல்லது ஏழு நாட்கள் வரை தொடரும். சுருங்கக்கூரின் - பெண்ணின் சூலகத்தில் உருவாகின்ற கருமுட்டையானது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த நிலையில் கருப்பையில் வந்து சேர்கிறது. இவ்வாறு வந்துசேர்கிற கருமுட்டையை பாதுகாக்கவேண்டி கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையினை பாதுகாக்கிறது. மேலும் கருவறைக்குள் அவைகள் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்கு தேவையான குருதியை நிரப்பிவைக்கிறது. இக்காலகட்டத்தில் கருதரிப்பு நிகழாவிட்டால் அந்த கருமுட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக வெளியேறுகிறது. (நன்றி தோழி)

இதுதான் மாதவிடாய். இதைத்தீட்டாகவும்இதனால் கோவிலுக்குச்செல்லக்கூடாது எனவும்நல்ல காரியங்கள் நடைபெறுகிறபோது கலந்துகொள்ளக்கூடாது எனவும்நாயிற்கு சோறு போடக்கூடாது எனவும்துளசி பூ போன்றவற்றில் கைப்படக்கூடாது பறிக்கக்கூடாது எனவும்.. புதிதாகப் பிறந்த குழந்தையை தூக்கக்கூடாது கொஞ்சக்கூடாது எனவும்..... வயதுக்கு வந்த நாளை குறித்துவைத்துக்கொண்டு பஞ்சாங்கம் ஜாதகமெல்லாம் பார்ப்பது எனவும்... இன்னும் இன்னும்..!! நம் இனத்தில் தான் இத்தனை அக்கப்போர்கள். உதிரப்போக்குவை தீட்டு என்றும் வீட்டிற்கு தள்ளி நில்லுதல் என்றும்வயதுக்கு வந்த நாள் சரியில்லை என்று சொல்லி பரிகாரம் செய்வது என தொடர் கூத்துகள் தான் எத்தனை எத்தனை.!  

நாகரீகம் வளராத காலகட்டத்தில் தூய்மை கருதி அப்படிச்சொல்லியிருக்கலாம் இருப்பினும் தற்போதைய சூழல் என்பது பலவித வடிவங்களின் `சனிட்டரிபேட்கள் (SANITARY PADS) தயாராகி இருக்கின்ற காலத்தில் வாழ்கின்ற நாம் இன்னமும் தீட்டு லொட்டு என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

`PAD' பயன்பாடு இல்லாத காலகட்டம்.!

முன்பெல்லாம்முப்பது வருடத்திற்கு பிந்திய காலகட்டத்தில், sanitary pad பரவலான பயன்பாட்டில் இல்லை. இல்லை என்பதைவிட நடுத்தரவர்கத்துப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு  ஏற்படுகிற போது  பெரும்பாலும் கிழிந்த பழைய துணிகளைத்தான் பயன்படுத்துவது வழக்கம். குடும்பத்தில் ஐந்தாறு பெண்கள் இருந்து விட்டால் மாதமுழுக்க அந்தக் கிழிந்த துணிகள் கொடியில் உலர்ந்தமேனியாகவே இருக்கும் ஒரு வித கவுச்சி வாடையை வீசிக்கொண்டு.

முன்பு நாங்கள் வசித்த இடம் ஒரு புறம்போக்கு வரிசை வீடமைப்புப் பகுதி (கம்பம்). அங்கே வீட்டுக்குவீடு கழிவறை வசதி எல்லாம் கிடையாது.  இரண்டிற்குச் செல்லவேண்டுமென்றால் பொதுக்கழிவறைக்குத்தான் செல்லவேண்டும்தான். மாதவிடாய் காலகட்டத்தின் போது இரவு நேரங்களின் தீராத வயிற்றுவலியின் காரணத்தால் கழிவறை செல்லவேண்டும் போல் இருக்கின்ற தருணத்தில் நாங்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. இரவில் இருளில் எங்கே வாளியைத்தூக்கிக்கொண்டு பொதுகழிவறைக்களுக்குச் செல்வது.!நீர் வசதிவேறு இருக்காதா...! அந்த அசிங்கமான சுழலை நினைத்துப்பார்ப்பதற்கே கூசுகின்ற வேளையில் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை..!!

தூய்மை பேணுதல்..

இந்த சனிட்டரிபேட்ஐ குப்பையில் வீசுகிற வேலைகளை பல பெண்கள் சரியாகவே செய்வதில்லை. முறையாக வீசுவதற்கு அலுவலக கழிவறைகளில் அதற்கென்று இருக்கின்ற ரசாயணக் கூடங்களில்   அவைகளைப்போடாமல்கழிவறை குழியினுக்குள் போட்டுவிட்டு `ப்ளஷ்’ செய்துவிடுகிறார்கள். இதனால் எவ்வளவு பெரிய பாதிப்புகளையும் தூய்மைக்கேடுகளையும் சந்திக்கநேரும் என்கிற தெளிவே இல்லாமல் இருப்பவர்கள் இன்னமு இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம் வீட்டில் பெண்கள் யாராவது வந்து தங்கிக்கொள்கிற சூழல் ஏற்பட்டுவிட்டால்ஒவ்வொருவருக்கும் இதைப்பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். ஒரு நாளைக்கு எத்தனை முறை PADகளை மாற்றவேண்டும். மாற்றாமல் காலையில் போடுவதை மாலை வரை பயன்படுத்திக்கொண்டிருந்தால்பிறப்பு உறுப்புகளில் தொற்றிக்கொள்ளும் கிருமிகள் அங்கே தோல்வியாதியினைக் கொண்டுவரும் போன்ற தகவல்களையெல்லாம் சொல்லிக்கொடுத்துள்ளேன். எப்படி தூய்மைப்படுத்தி பொட்டலங்கட்டி குப்பையில் வீசுவது, போன்ற விவரங்களை `டெமோ’ செய்கிற வேலைகளையெல்லாம் பொதுச்சேவையாக நான் செய்துள்ளேன். சில பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அவைகளைக் கண்ட கண்ட இடங்களில் வீசி பழக்கப்படுத்தியிருப்பதால்அவர்களும் இந்த மதவிடாய் `PADஐ இஷடம்போல் பக்கத்துவீட்டு கொல்லைப்புறத்தில் வீசிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஏற்கனவே என் வீட்டில் தங்கியிருந்த ஒர் இளம்பெண்தமது மாதவிடாய் பஞ்சுவைகழிவறையில் போட்டு ப்ளஷ் செய்துவிட்டு கமுக்கமாக இருந்துஅவளின் பயிற்சி காலகட்டம் (ஒரு வேலையின் பயிற்சிற்காக என் வீட்டில் கொஞ்ச காலம் தங்கியிருந்தாள்..) முடிந்தபின்பு மூட்டையைக்கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

ஒரு நாள் வீட்டில் வெள்ளம். கழிவறை மலமெல்லாம் மிதந்து சமையலறை பக்கம் வரத்துவங்கிவிட்டது. என்ன பிரச்சனையாக இருக்குமென்றுகழிவறை சுத்தம் செய்கிறவர்களை அழைத்து சரிசெய்யச்சொல்லும் போதுதான் தெரிந்தததுஉள்ளே அவ்வளவு PADகள் அடைத்துக்கொண்டுள்ளன என்று.! தமது உதிரப்போக்கு பஞ்சுவை தாமே கையில் ஏந்தி தூய்மைப் படுத்துவதற்கு அருவருப்பு கொண்டு சுலபமாக அவைகளைக் கழிவறையில் வீசிச் சென்றுள்ளாள் அப்பெண்.

இன்னமும் இதுபோன்ற பொறுப்பற்ற பெண்பிள்ளைகள் இருக்கவே செய்கிறார்கள். என்ன செய்ய.?

சிலர் குப்பைக்கூடங்களில் கூட இவைகளைச் சரியாகப்போடாமல் பூனை நாய்கள் அவைகளை வெளியே இழுத்து அசிங்கப்படுத்தி விடுகிற நிலை ஏற்படுவதையும் காணலாம். கோழிகளும் அவைகளைக் கொத்திக்கொண்டிருக்கும். !


SANITARY PAD எத்தனை வகைகள் உள்ளன என்பது பற்றித் தெரியுமா உங்களுக்குஎனக்குத்தெரிந்த சில:-

* சாதா PAD
* மருந்து வைத்து கிருமிகளை அழிக்கவல்ல PAD.
* மிக நீளமான PAD.
* மிக மெலிதான PAD. போட்டதே தெரியாமல் இருப்பதைபோல்     இருக்கும். அதிகவிலையுள்ள பெட் இது.
 * இரவு வேளைகளில் மட்டும் பயன்படுத்தும் PAD.
 * மிக மலிவான PAD.
 * நமது நடுவிரல் அளவில் உள்ள PAD. ஐஸ்கிரீம் குச்சிபோல்  இருக்கும். பிறப்பு உறுப்புக்குள்ளே நுழைத்துக்கொள்வது. (விடாமல்  கொஞ்சம் கொஞ்சமாக உதிரப்போக்கு உள்ளவர்கள் பயன் படுத்தும் PAD இது.)
 * உள்ளாடைகள் (underwear) பயன்படுத்தாமல் போட்டுக்கொள்கிற PAD  (இடுப்பில் வைத்துக் கட்டிக்கொள்வார்கள்.) குழந்தை பெற்ற தாய்மார்கள் பயன்படுத்தும் PAD இது.

அனுபவம்...!

பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தின் போது ஏற்படுகிற அனுபவங்களைத்தொகுத்தால் ஒரு மாபெரும் பொக்கிஷ ஏடு ஒன்றினைத்தயாரித்துவிடலாம். சுவாரஸ்யமான தகவல்களைப் பலரிடமிருந்து பெறலாம். ஆட்சேபனை இல்லாமல் பகிரநேர்ந்தால்...!

எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று. தமிழ்நாடு பயணத்தின்போது ஒருமுறை எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. காலநேரம் நெருங்காத பட்சத்தில் நானும் தயார் நிலையில் இல்லாததால்முக்கியமான பொருளான PADஐ எடுத்துவைக்கத்தவறிவிட்டேன்.

பிரயாண அலைச்சலில் போகிற இடமெல்லாம் உடலின் ஏற்பட்ட குலுங்கலின் காரணமாக பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே எனக்கு மாதப்போக்கு வந்துவிட்டது.

காரில் பயணம் செய்துகொண்டிருக்கும்போதுயாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாமல் காரைக் கடையோறங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு நானே இறங்கி கடைக்காரர்களிடம், PAD இருக்கா?’ என்றேன். நான் என்ன கேட்கிறேன் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் தெரியாததுபோல் இருக்கின்றார்களாஅல்லது நிஜமாலுமே(!) தெரியாது என்பதால்தான் முழிக்கின்றார்களாஎன எனக்கே சந்தேகம் வரும் வகையில் அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கத்துவங்கிவிட்டார்கள்.! என்னங்க இதுஅக்கா தங்களைகளோடு பிறக்கவில்லையா என்னஇதுபற்றி ஒன்றுமே தெரியாத நிலையிலா இருப்பார்கள். சில கடைக்காரர்களிடம் இப்பொருள் விற்பனைக்கு இல்லைவே இல்லை. சில கடைக்காரர்களுக்கு `அது’ என்னவென்றே தெரியவில்லை. சிலர்நான் எதோ அசிங்கமான வார்த்தையை அவர்களிடம் பேசிவிட்டதைப்போல்என்னை முறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர், `போம்மா எங்கே வந்து என்ன கேட்பதென்றே தெரியவில்லை உனக்கு’ என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிட்டார்கள்.

வயிற்றுவலி ஒருபக்கம்பொருள் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் ஒருபக்கம். போட்டிருக்கின்ற ஆடையெல்லாம் வீணாகிவிடுமோ என்கிற கலக்கம் ஒருபக்கம்.. நம் நாட்டின் (மலேசிய) பெருமையை அன்றுதான் உணர்ந்தேன். இங்கே திரும்புகிற திசையெல்லாம் வெகு சுலபமாக கிடைக்ககூடிய ஒரு பொருளைத் தேடிதிருவண்ணாமலை வரை அலைந்தேன். வேறுவழி இல்லாமல்ஓட்டுனர் அண்ணனிடம் தகவலைச் சொல்லிய பின்அவர் ஒரு கடையின் வாசலின் நிறுத்தி இங்கே கேட்டுப்பார் கிடைக்கலாம் என்றார். நானும் கடையில் நுழைந்து அங்கே கல்லாவில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் திருதிருவென விழித்துவிட்டு அருகில் நின்ற பெண்ணை அழைத்தார். அப்பெண் என்னைத் தனியாக அழைத்துச்சென்று, `என்னக்கா நீங்கஇதைப்போய் அவரிடம் கேட்டுக்கிட்டு. உங்களுக்கு வெட்கமே இல்லையா.என்று சொல்லிஒரு காகிதத்தை எடுத்துஅதை அதில் வைத்து பிரியாணியைப் பொட்டலங்கட்டுவதைப்போல் பொட்டலங்கட்டி என்னிடம் கொடுத்தார்..... ஷப்ப்ப்ப்பா எனக்கு மயக்கமே வந்துவிட்டது. இன்னும் வளரணும் நம் சமூதாயம்.

பெண்களின் மாதவிடாயை ஏன் இப்படி மூடிமறைத்து தகிடதத்தோம் வேலை செய்கிறார்கள் என்றுதான் புரியவேயில்லை. கழிவறை செல்கிறோம்அங்கே சில ஆண்கள்தானே பெண்களிடமும் வசூல் செய்துகொண்டு வழிவிடுகிறார்கள். அதுபோல் மாதவிடாயும் ஒரு கழிவுதானேபிறகெதற்கு இவ்வளவு அலைக்கழிப்புகள் என்பதுதான் எனக்கு இன்னமும் வியப்பு.!

ஓஷோ சொல்கிறார்பெண்களைப் புரிந்துகொள்ள முயலாதேஅவளைக் காதலி.

காதலிக்க எல்லாம் வேண்டாமுங்க. அட்லீஸ்அவளின் தர்மசங்கட சூழலை அறிந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான்.   

23 கருத்துகள்:

 1. விரிவான விளக்கங்கள்... சொன்னவிதமும் அருமை...

  பதிலளிநீக்கு
 2. Excellent article Viji! Iam proud of You! even a lady doctor has not explained well as you said! bravo!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செல்வா. பாராட்டுதலுக்கு அல்ல. வாசித்து கருத்திட்டமைக்கு. :)

   நீக்கு
 3. Feeling proudஇதற்கு முன்னால் இப்படி ஒரு article நான் படித்தது இல்லை , வலிகலின் வழிகல் சமுதாயமும் மக்களும் விழிப்புணர்ச்சியாக இருக்க வேண்டும் ( இதற்கு இந்த article உதவும் ) மிக்க நன்றி இந்த பதிவை சில முகநூல் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 4. இதற்கு முன்னால் இப்படி ஒரு article நான் படித்தது இல்லை , வலிகலின் வழிகல் சமுதாயமும் மக்களும் விழிப்புணர்ச்சியாக இருக்க வேண்டும் ( இதற்கு இந்த article உதவும் ) மிக்க நன்றி இந்த பதிவை சில முகநூல் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். Feeling Proud

  பதிலளிநீக்கு
 5. என் மனைவி சசியும் இந்த பதிவை படித்து விட்டார்...

  பதிலளிநீக்கு
 6. Feeling proudஇதற்கு முன்னால் இப்படி ஒரு article நான் படித்தது இல்லை , வலிகலின் வழிகல் சமுதாயமும் மக்களும் விழிப்புணர்ச்சியாக இருக்க வேண்டும் ( இதற்கு இந்த article உதவும் ) மிக்க நன்றி இந்த பதிவை கூகுள் ப்ளஸ் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ. நீங்கள் வந்து வாசித்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி.

   நீக்கு
 7. மிக உபயோகமான பதிவு. மிக்க நன்றி. இதனை என்னுடைய மனைவி மகளுடன் பகிரவுள்ளேன். அலுவலகத்தில், தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு HR department மூலமாக தெரிவிக்கப்போகிறேன். இந்தக்கட்டுரையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த திரு.ஜோதிஜி அவர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. குறிப்பாக பெண்களே படிக்கவேண்டிய பகிர்வுங்க.. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. வலைச்சரம் மூலமாக தங்களது வலைப்பூவினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. படித்ததில் பிடித்தது. அருமையான கட்டுரை. நன்றி. வாழ்த்துகள்.

  சு. துளசிதாஸ்,
  மலேசியா தேசிய பல்கலைகழகம் ,
  மலேசியா.

  பதிலளிநீக்கு