சனி, மார்ச் 09, 2013

கருமூலம்

காலம் கடந்து
‘கரு’ நிற்பதில்லை
அது பிரசவித்து
பெரிதாகி
மனிதனாகி
மாண்டுபோகிறது

நிசப்தம்

படார் என்று
பக்கத்தில் விழுகிறது பாறாங்கல்
இதயம் நின்று..
பின் துடிக்கிறது

எழுதிப்பார்க்கிறேன்
உன் நினைவுகளை
பிழையில்லாமல் வருகிறது எழுத்து
கணினி என்னை ஏமாற்றுகிறது
சிலவேளைகளில் 
உன்னைப்போல்

தடார் என்று
கதவு சாத்திக்கொள்கிறது
இதயம் நின்று..
மீண்டும் துடிக்கிறது

தொடர்கிறது உன்நினைவுகள்
யாருமற்ற இந்த தனிமையில்

மீண்டும் ஒரு சத்தம் வரலாம்
துடிக்காமலும் போகலாம்
இந்த இதயம்..