வெள்ளி, ஜூலை 13, 2012

ரிக்‌ஷாக்காரன்





பார்த்ததில் ரசித்தது - சீனாவில் ரிக்‌ஷாக்காரன்

நன்றி-  பாலகோபாலன் நம்பியார்

வலி உள்ள ஓவியம்

ஒரு சிறிய செம்மண் மேடு
வரிசையாக சில மரங்கள்
ஒரே ஒரு மரத்தின் நிழல் மட்டும்
கருமையாகவும் அடர்த்தியாகவும்
அங்கே ஒரு பழைய தகரப்பீப்பாய்
அதனுள் ஆணிகள் அடிக்கப்பட்டு
சிமெண்ட்'யில் நனைந்து காய்ந்துப்போன ஒரு கட்டை
அருகில் பழுதான டையர்
நிழலில் சிதறிக்கிடக்கின்ற சருகுகள்
காற்றில் அவை நகர்கின்றன
எனக்குள் எட்டிப்பார்க்கும்
எதோ ஒரு பழைய நினவு
இதுவரைதான் ஓவியம்
என் வலி அதில் இல்லை..

%%%%%%%

உனக்காக...

அதிகமான வரிகளை எழுதி

அதை பல மாதிரியாகச் சுருக்கி
இன்னும் இன்னும் குறைத்து
அங்கும் இங்கும் வெட்டி
மீண்டும் எழுதிப் பார்த்து 
ஆறை நான்காக்கி 
நாலில் இருந்து 
நாலும் தெரிய எழுதிய போது..
குழப்பம் தீர்ந்தபாடில்லை - 
உனக்கு பிடிக்காமல் போய்விட்டால்..!!?