செவ்வாய், டிசம்பர் 13, 2011

i miss you

 இன்று, என் கைத்தொலைப்பேசியை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வேலைக்கு வந்து விட்டேன்.

பாதி வழியில்தான் நினைவுக்கு வந்தது. இருப்பிணும் தாமதமாகி விட்டதால், வாகனத்தை அலுவலகம் நேக்கிச் செலுத்தினேன்.

அலுவலகம் வந்தவுடன் வேலை ஆரம்பமாகிவிட்டது. ஜக்கர்த்தாவில் இருந்து வரவேண்டிய ஒரு முக்கிய ஷிப்மெண்ட் தாமதமாகவே, வந்தவுடனேயே அதையொட்டிய வேலைகள், அழைப்புகள், தொலைநகல், மின்மடல் என ஒரே போராட்டம்.

மதிய உணவிற்குப் பிறகு ஜாப்பானில் இருந்து ஒரு முக்கிய பிரமுகர் வருகை, அந்த ஷிப்மெண்டிற்கும் இந்த பிரமுகர் வருகைக்கும் சம்பந்தம் இருப்பதால் அனைவரும் ஆட்டமாய் ஆட்டம்!  இந்த பரபரப்பில் கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வந்ததை சுத்தமாக மறந்தே போனேன்.

மாலையில் எல்லா வேலைகளையும் முடித்த பிறகு, தொலைபேசியின் நினைவு வரவே... ஒரு முக்கியமான நண்பருக்கு அழைத்தேன்.

“டேய், இன்னைக்கு நான் கைத்தொலைபேசியை எடுத்து வரவில்லை, கூப்பிட்டியா?”

“ஆமாம், ஒரு இருபது முறை அழைத்திருப்பேன்!”

“அடப்பாவி, ஒரு முறை அழைத்தவுடன், போன் எடுக்கலன்னா, சும்மா இருக்க மாட்டியா?”

“ நீ, அப்போ அப்போ.. வைஃப்ரெஷனில் வைத்துவிடுவாய், அதான் மீண்டும் மீண்டும் அழைத்துப்பார்த்தேன்!”

“ சரி சரி.. போய்ப்பார்க்கிறேன்.. ம்ம்ம் ஏன் கூப்பிட்டாய்?”

“you are my friend, i miss you"..

"mmm..i miss you too, bye"

வீடு திரும்பியதும், கணவன் எனக்கு முன்னாலேயே வீட்டிற்கு வந்திருந்தார். அவரின் கையில் என் கைத்தொலைபேசி..

போச்சுடா என்றிருந்தது.

முக வாட்டத்துடன், கொஞ்சம் கடுமையான தொனியில், ”பாரு உன் போனை..தினமும் இப்படித்தானா?”

எனக்குத்தெரியும், இப்படி எதாவது ஏடாகூடமாக நடக்குமென்பதால்..

“ஏன் இப்போ என்ன குடி முழ்கிப்போச்சாம்...??” எரிச்சலில் நானும் கொஞ்சம் கடுமையாக.. எவ்வளவு நாள் தான் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதைப்போல் அலைவது..!

“ இந்தா நீயே பாரு.”

என் கைத்தொலைப்பேசி என்னிடம் வந்தது. ஒரு 20மிஸ்ட் கால்கள்.
9 எஸ் எம் எஸ்கள்.

 20miss calls
3shanthy
2selvi
1sugu
1renu
6thambi
2akka
1huby
2ravi
1parthi
1suba

9sms's
1.akka
where are you?

2. thambi
pls answer my calls

3. thambi
ma, where are you. i miss you

4. renu
hei pomple, kuppidu.

5. shanthy
akka romba busy ya? miss you

6. muru
vanakkam. a very interesting book launching in temple. u r cordially invited to attend n make the d function success. pls reply..01229337....

7. ravi
kaayam aarumvarai valikkum.. kaadhal sagumvarai valikkum.. natpu thaan irantha pinnum nilaikkum. i miss you.

8. malini
kovilukku polaama? 12discuss 1mtr.ll tel u ltr

9. ravi
neengal ninaikka marantha uravai naan irunthidalaam, aanaal naan yendrume maraka ninaikkaatha uravu neengal thaan. anbudan ungkal ravi.

”ஒண்ணுமில்லையே..ஏன்?”

”யார் ரவி?.. என்ன மிஸ் யூ வேண்டிக்கிடக்கு உன்னிடம்?” குரலில் கொஞ்சம் கடுமைதான்.

“அய்யோ அவனா? ஒரு யூனிவெர்சிட்டி ஸ்டூடண்ட், எங்க கம்பேனியில் தற்காலிக பணியாளரா வேலை செய்தான்.. கொஞ்சம் குறும்பு, நல்ல பையன், இதான் பிரச்சனையா உங்களுக்கு?” பதற்றத்தை மறைத்துகொண்டு பதிலளித்தேன்.

தேவையா இதெல்லாம் எனக்கு! என்னை நானே நொந்துகொண்டேன்.

“ம், எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும் தானே! இன்னும் என்ன இப்படிப்பட்ட மெஸெஜ்கள்?” கொஞ்சம் அமைதியானர்.

அப்பாடா என்றிருந்தது எனக்கு. கொஞ்ச நேரம் கழித்து, நந்தாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன்..

“நன்றி டா லூசு”.

மூன்று பெண்கள் சேர்ந்தால்.....!!!!????

இப்படித்தான் ஆரம்பிக்கும்

என் கணவரோடு தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன். 'நான் சிவனாகிறேன்.. ' படம் அவ்வளவாக பிரபலம் இல்லை, ஆனாலும் டீவியில் ஓடியது. அன்றைய பொழுதில் கொஞ்சம் ஓய்வாக இருந்தததால் ஒளிபரப்பாகிய அப்படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

கதை எப்படி?

சிகப்பு ரோஜாக்கள் மாதிரிதான். தவறான வழியில் செல்லும் பெண்களை வலையில் விழவைத்து பிறகு அவர்களைக் குத்திக் கொலை செய்யும் ஒர் படம். இருந்தாலும், சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இல்லை. அந்தப்படம் கிரேட் தான்.

சரி, அந்தப் படத்தை ஏன் இப்போது திடீரென்று நினைவுக்கூர்கிறாய்.?

படுக்கையறைக் காட்சிகள் அதிகமென்பதால் அது அவளைக் கவர்ந்திருக்கும். ரொமண்ட்ஸ் காட்சிகளை இப்படிப்பார்த்தால் தான் உண்டு, நிஜ வாழ்க்கையில் நடக்குமா!?.... ம்ம்ம்ம் எங்கே.!

ஏய் ஏய்ய்.. அணலாய் வருது மூச்சு.. பார்த்து.. ஆறின காப்பி கொத்திக்கப்போறது.!

அதுசரி. உனக்கு அந்த நிலையென்றால், எல்லோருக்கும் அப்படியா? படறப்பாடு, படுத்தறப் பாடு, நான்கு சுவர், கட்டில் மெத்தை அல்லவா பதில் சொல்லணும். அதுசரி, நீ ஏன் பெரு மூச்சு விடுகிறாய்? அவள் என்ன சொலல வருகிறாள் என்பதைக்கேட்டுத்தான் பார்ப்போமே! கதை ரொமெண்ட்ஸா?

இல்லை.., கதையை விடு.., அதில் ஒரு படுக்கையறைக் காட்சி வரும். அவன் அழைப்பான். அப்போது அவள், அவனை நிராகரிப்பாள்.. ஏனனென்றால், அவளுக்கு வெளி ஆண்களிடம் அதிக தொடர்பு இருக்கும். இதனால் கணவனின் ஆசைகளுக்கு அவளால் ஈடு கொடுக்க முடியாத கொடுமை...!

அடக் கடவுளே.. பிறகு?

பல ஆண்களின் தொடர்பு இருப்பதால்தான் ஒரு பெண் கணவனை படுக்கையறையில் மறுக்கிறாள் என்பது எவ்வளவு அபத்தமான சிந்தனை..!?

அதுவும் காரணமாக இருக்கலாம் என்பதைச் சொல்லியிருப்பார் டைரக்டர்.

நீ எல்லாத்தையும் நியாயப்படுத்து...! இருக்கலாம், ஆனால் அதுதான் காரணமாக இருக்குமென்று, நமது கணவன்மார்கள் நினைக்க ஆரம்பித்தால் என்னாவது நம் பொழப்பு? யோசிக்காமல் படம் எடுக்கிறார்கள்.. பெண்கள் என்றால், ’வா’ என்றவுடன் வந்து விட வேண்டுமா என்ன? அவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி யாராவது யோசிக்கின்றார்களா? பெரும்பாலும் ஆண்கள் இவைகளைக் கண்டுகொள்வதேயில்லை, அன்று முதல் இன்று வரை..

ஏன் இவ்வளவு ஆவேசம்? என்ன நடந்தது?

படம் முடிந்தவுடன்.. குழந்தைகளுக்குப் பால் கொடுத்துத் தூங்கவைத்து விட்டு,  மறுநாள் (இன்று) வேலைக்குச் செல்ல, துணிமணிகளையெல்லாம் அயர்ன் செய்து, மீதமுள்ள சாப்பாடுகளையெல்லாம் ஃபிட்ஜில் வைத்து.., பாத்திரங்களையெல்லாம் சுத்தம் செய்த பிறகு படுக்கச்சென்றால், மனுஷன் கொட்டக்கொட்ட முழிச்சுக்கிட்டு இருக்கார்...!

(சிரித்தவண்ணம்) ஏன்?

ம்ம்ம்ம்ம்..’வேணுமாம்’!

கொடுக்கவேண்டியதுதானே?

கணவன் வேணுமென்கிற போது, நிச்சயம் கொடுக்க வேண்டும், அது ஒரு பெண்ணின் பல கடமைகளில் ஒன்று என்கிறார்கள்.. திருமணத்தின் போது சொல்லப்படுகிற சமஸ்கிருத மந்திரத்தில் இதுவும் அர்த்தமாக இருக்குமாம்...

ஏய், நீ சும்மா இருக்க மாட்டே! எப்போது பார்த்தாலும் அவனுங்களுக்கே வக்காலத்து வாங்கு.! பெண்களின் உணர்வுகளை எவன் மதிக்கிறான். எல்லாக் காலகட்டத்திலும் இதே நிலைமைதான். ! சுபா நீ சொல்லு, அப்புறம் என்ன நடந்தது.?

என்னால் முடியாதுன்னு சொன்னேன்..

உடனே சொல்லியிருப்பானே.. நீ யாரையோ வைச்சுருக்கேன்னு..!!!

ஏய் விஜி, எப்படி நீ இவ்வளாவு கரெக்டா சொல்ற?

எல்லாம் அனுபவம் தான்..!

சரசு, இது எப்படி இருக்கு..? நீயும் உம்பங்கிற்கு எதாவது சொல்லேன், மௌனமாயிட்டே!?...

ஐயோ, என் கணவர் சொல்லிட்டார், என்னால முன்பு மாதிரி முடியல, ஆள விடுன்னுட்டார்..







வசம்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு
இன்று காலையில்
நான் பூசிக்கொண்ட ஒரு வாசனைத்திரவியம்
உன்னை என் முன்னே அழைத்து வந்தது
அது உனது வாசமல்ல
எனது வாசம்
நீ என்னுள் வசித்தபோது
நான் நேசித்து சுவாசித்த 
நறுமணம் அது.