செவ்வாய், டிசம்பர் 13, 2011

மூன்று பெண்கள் சேர்ந்தால்.....!!!!????

இப்படித்தான் ஆரம்பிக்கும்

என் கணவரோடு தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன். 'நான் சிவனாகிறேன்.. ' படம் அவ்வளவாக பிரபலம் இல்லை, ஆனாலும் டீவியில் ஓடியது. அன்றைய பொழுதில் கொஞ்சம் ஓய்வாக இருந்தததால் ஒளிபரப்பாகிய அப்படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

கதை எப்படி?

சிகப்பு ரோஜாக்கள் மாதிரிதான். தவறான வழியில் செல்லும் பெண்களை வலையில் விழவைத்து பிறகு அவர்களைக் குத்திக் கொலை செய்யும் ஒர் படம். இருந்தாலும், சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இல்லை. அந்தப்படம் கிரேட் தான்.

சரி, அந்தப் படத்தை ஏன் இப்போது திடீரென்று நினைவுக்கூர்கிறாய்.?

படுக்கையறைக் காட்சிகள் அதிகமென்பதால் அது அவளைக் கவர்ந்திருக்கும். ரொமண்ட்ஸ் காட்சிகளை இப்படிப்பார்த்தால் தான் உண்டு, நிஜ வாழ்க்கையில் நடக்குமா!?.... ம்ம்ம்ம் எங்கே.!

ஏய் ஏய்ய்.. அணலாய் வருது மூச்சு.. பார்த்து.. ஆறின காப்பி கொத்திக்கப்போறது.!

அதுசரி. உனக்கு அந்த நிலையென்றால், எல்லோருக்கும் அப்படியா? படறப்பாடு, படுத்தறப் பாடு, நான்கு சுவர், கட்டில் மெத்தை அல்லவா பதில் சொல்லணும். அதுசரி, நீ ஏன் பெரு மூச்சு விடுகிறாய்? அவள் என்ன சொலல வருகிறாள் என்பதைக்கேட்டுத்தான் பார்ப்போமே! கதை ரொமெண்ட்ஸா?

இல்லை.., கதையை விடு.., அதில் ஒரு படுக்கையறைக் காட்சி வரும். அவன் அழைப்பான். அப்போது அவள், அவனை நிராகரிப்பாள்.. ஏனனென்றால், அவளுக்கு வெளி ஆண்களிடம் அதிக தொடர்பு இருக்கும். இதனால் கணவனின் ஆசைகளுக்கு அவளால் ஈடு கொடுக்க முடியாத கொடுமை...!

அடக் கடவுளே.. பிறகு?

பல ஆண்களின் தொடர்பு இருப்பதால்தான் ஒரு பெண் கணவனை படுக்கையறையில் மறுக்கிறாள் என்பது எவ்வளவு அபத்தமான சிந்தனை..!?

அதுவும் காரணமாக இருக்கலாம் என்பதைச் சொல்லியிருப்பார் டைரக்டர்.

நீ எல்லாத்தையும் நியாயப்படுத்து...! இருக்கலாம், ஆனால் அதுதான் காரணமாக இருக்குமென்று, நமது கணவன்மார்கள் நினைக்க ஆரம்பித்தால் என்னாவது நம் பொழப்பு? யோசிக்காமல் படம் எடுக்கிறார்கள்.. பெண்கள் என்றால், ’வா’ என்றவுடன் வந்து விட வேண்டுமா என்ன? அவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி யாராவது யோசிக்கின்றார்களா? பெரும்பாலும் ஆண்கள் இவைகளைக் கண்டுகொள்வதேயில்லை, அன்று முதல் இன்று வரை..

ஏன் இவ்வளவு ஆவேசம்? என்ன நடந்தது?

படம் முடிந்தவுடன்.. குழந்தைகளுக்குப் பால் கொடுத்துத் தூங்கவைத்து விட்டு,  மறுநாள் (இன்று) வேலைக்குச் செல்ல, துணிமணிகளையெல்லாம் அயர்ன் செய்து, மீதமுள்ள சாப்பாடுகளையெல்லாம் ஃபிட்ஜில் வைத்து.., பாத்திரங்களையெல்லாம் சுத்தம் செய்த பிறகு படுக்கச்சென்றால், மனுஷன் கொட்டக்கொட்ட முழிச்சுக்கிட்டு இருக்கார்...!

(சிரித்தவண்ணம்) ஏன்?

ம்ம்ம்ம்ம்..’வேணுமாம்’!

கொடுக்கவேண்டியதுதானே?

கணவன் வேணுமென்கிற போது, நிச்சயம் கொடுக்க வேண்டும், அது ஒரு பெண்ணின் பல கடமைகளில் ஒன்று என்கிறார்கள்.. திருமணத்தின் போது சொல்லப்படுகிற சமஸ்கிருத மந்திரத்தில் இதுவும் அர்த்தமாக இருக்குமாம்...

ஏய், நீ சும்மா இருக்க மாட்டே! எப்போது பார்த்தாலும் அவனுங்களுக்கே வக்காலத்து வாங்கு.! பெண்களின் உணர்வுகளை எவன் மதிக்கிறான். எல்லாக் காலகட்டத்திலும் இதே நிலைமைதான். ! சுபா நீ சொல்லு, அப்புறம் என்ன நடந்தது.?

என்னால் முடியாதுன்னு சொன்னேன்..

உடனே சொல்லியிருப்பானே.. நீ யாரையோ வைச்சுருக்கேன்னு..!!!

ஏய் விஜி, எப்படி நீ இவ்வளாவு கரெக்டா சொல்ற?

எல்லாம் அனுபவம் தான்..!

சரசு, இது எப்படி இருக்கு..? நீயும் உம்பங்கிற்கு எதாவது சொல்லேன், மௌனமாயிட்டே!?...

ஐயோ, என் கணவர் சொல்லிட்டார், என்னால முன்பு மாதிரி முடியல, ஆள விடுன்னுட்டார்..







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக