திங்கள், மே 07, 2012

என் குரல்

எதிர்வினை

என்னை நான்
வெறுக்கின்ற போதெல்லாம்
உன் முகம் தான்
முன்னே வந்து போகும்
உனக்காக நான்,
திருத்திக்கொள்கிறேன்
எனக்கு பிடித்ததை மட்டுமே
செய்வதை..!

துளிர்

உன் ஞாபகமே
வேண்டாமென்று
நான் வீசியெறிந்த
செடி ஒன்று
மீண்டும் துளிர் விடுகிறது
என் மனதில்
உன் நினைவுகள் போல்..