அக்கா மகன் சொல்பேச்சு கேட்கமாட்டேன் என்கிறான், பள்ளியில் ஆசிரியருக்கு அவனைப்பிடிப்பதில்லை, கொடுக்கும் வீட்டுப்பாடங்களை சரியாகச் செய்வதில்லை..அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான்.. பள்ளியில் படிக்கும் சக மாணவன் அவனின் அப்பாவிடம் சொல்கிறான். அவனின் அப்பாவும் என் தம்பியும் நண்பர்கள். அவர் தம்பியிடம் சொல்ல, தம்பி என்னிடம் தொலைப்பேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி, உன் மகன் காலெஜ் லீவில் வீட்டிற்கு வந்தால் அவனை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றுகிறான், இவன் அவனுக்கு அண்ணன் தானே, காலெஜ் படிப்பவனும் பள்ளியில் பட்டிப்பவனும் ஒன்னா? நல்ல கோஸ் கிடைக்க அவன் பள்ளியில் நன்றாகப் படித்து நல்ல பெயர் எடுக்கவேண்டாமா..!!அறிவுரை கூறி கண்டிக்கச்சொல்லு, என்கிறான், இருவருக்கும் தாய் மாமனான என் தம்பி. நான் என் மவனிடம் அப்படியே சொல்கிறேன். என் மவன் அவனைச் சந்திக்கச்செல்லும் போது, இதை அவனிடம் சொல்கிறான்.. அக்கா மகன் பள்ளிக்குச் சென்று இந்த விவரத்தை குடும்பத்தில் போட்டுக்கொடுத்த நண்பரின் மகனை சில நண்பர்களுடன் வழிமறைத்து சட்டையைப்பிடித்து உலுக்கி, ஒழுங்கு மரியாதையா இரு..பிச்சி புடுவேன் பிச்சி என்றிருக்கிறான். அவன் அழுதுக்கொண்டே அவன் அப்பாவிடன் சென்றிருக்கிறான். விவரத்தை அறிந்த அவனின் அப்பா என் தம்பியிடன் முறையிட்டான். தம்பி எனக்கு அழைத்து விவரத்தைச் சொல்லி, என்ன நடக்கிறது..? தேவையா இது..! சொல்லிவை, என்றான். நான் என் மவனிடம் , ஐய்யா சண்டை வரும் போலிருக்கு என்ன சொன்னே நீ? என்றேன். உண்மையைச்சொன்னேன் (பாட்ஷா வசனம்) என்றான். மீண்டும் மகன் அக்கா மகனுக்கு இவ்விரத்தைச் சொல்ல, அவன், இரு இரு திங்கட்கிழமை வைச்சுக்கிறேன் அவனை என்கிறானாம்..
டேய் பசங்களா, ஆணியைப் புடுக்க வேண்டாம்.. பிஞ்சிடும் ஜாக்ரதை.. என்று சொர்ணக்கா லெவலில் ஒரு மிரட்டுப் போட்டுள்ளேன். பார்ப்போம் கதை மீண்டும் சுழல்கிறதா என்று...
டேய் பசங்களா, ஆணியைப் புடுக்க வேண்டாம்.. பிஞ்சிடும் ஜாக்ரதை.. என்று சொர்ணக்கா லெவலில் ஒரு மிரட்டுப் போட்டுள்ளேன். பார்ப்போம் கதை மீண்டும் சுழல்கிறதா என்று...