பத்திரிகை செய்திகளைக் கவனியுங்கள். பாரிசான் ஆட்சியின் தலைமையில் வருகின்ற செய்திகள் அவை.
உத்துசானில் - DAP, பாஸ் கட்சியை அடக்கி ஆளுகிறது.
சீனப்பத்திரிகைகளில் - பாஸ் கட்சி ஹூக்கும் ஹூடுட்’ஐ அமல்படுத்தவிருக்கிறது, சீனர்களுக்கு இதில் உடபாடில்லை. ஓரிரு சீனர்கள் பதாதைகள் ஏந்தி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதுபோல் காட்சிகொடுக்கின்ற புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
பிரித்த ஹாரியானில் - பி.கே.ஆர் கட்சி இந்தியர்களின் பொம்மை.
ஆங்கிலப்பத்திரிகையில் - பினாங்கில் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு வெடித்தது - எதிர்கட்சியின் சதி. வீட்டுவாசலில் நாய்குரைத்தால் கூட எதிர்கட்சி தலைவரின் சூழ்ச்சி என்கிறார்கள். (ஸ்டூப்பிட்)
பாரிசான் ஆட்சி மக்கள் அறிவாளி இல்லை என்று நினைக்கிறதா? அல்லது அறிவாளியாய் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறதா?
மின் ஊடகங்களில், எதிர்க்கட்சிக்கூட்டத்தில் முட்டிமோதி ஓரமாக மோட்டார் வாகனத்தில் அமர்ந்தவர்களை மட்டும் காட்டி, எதிர்கட்சி வேட்பாளர் பேசுகையில் மக்கள் யாரும் வரவில்லை என்கிறார்கள்.
தமிழ் வானொலி, உங்களின் பொது(ய்)தேர்தல் வானொலி என ஓயாமல் புருடா விட்டுக்கொண்டு, மன்னிப்பு மனிதனின் மாண்பு என்கிற குறுநாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
ம.இ.கா தலைவரோ, ஏற்கனவே எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகண்ட ஓர் தொகுதிக்குச் சென்று அமர்ந்துகொண்டு, தமிழர்களுக்கு அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கின்றார். சாவால்களைக் கண்டு நடுங்கும் இவர் ஒருவரே சாட்சி, நமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் லட்சணம்.
DAP ஆட்சியில் எதுவும் கிடக்கவில்லை என்று கூறிக்கொண்டு அக்கட்சியின் சில மகளிர் தலைவிகள் (பார்ப்பத்தற்கு கட்சித் தலைவர்கள் போலவே இல்லை, மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்பவர்க்ளைப் போலவே உள்ளனர்.) கட்சியின் அடையாள அட்டையினை வெட்டி எறிகிறார்கள். இச்சம்பவத்தை மலாய்ப்பத்திரிகைகளும், டீவி 3 வும் பிரமாண்டமாக தாங்கி வருகிறது. அங்கே தமிழர்களின் பிரச்சனைகள் லேசில் தலைக்காட்டாது. அவற்றை மூடுமந்திரம் செய்துவிடுவார்கள்.
பாரிசான் எல்லோரையும் விலைகொடுத்து வாங்குகிறது. பண அரசியலில் பேர்போனது பாரிசான் ஆட்சி.
பாரிசான் நம்மை 56 ஆண்டுகள் பின்னோக்கியே இழுத்துச்செல்கிறது. மக்கள் அறியாமையிலேயே உழலவேண்டுமென்கிற எண்ணம் கொளுந்துவிட்டு எரிகிறது பாரிசான் தலைவர்களிடத்தில்
என்னைக்கேட்டால், தேர்தல் முடியும்வரை எந்த வானொலி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளின் பக்கம் போகவேண்டாம்.