வெள்ளி, ஜூலை 06, 2012

சந்தித்தால்....

காதலிக்கவில்லை

கையெழுத்து அழகாக இல்லை,
சர்வ நிச்சயமாக சொல்லலாம்
அவன் யாரையும் காதலிக்கவில்லை.

%%%%

ஆய்வுக்கூடம்

ஒரு நேர சமையலுக்கு எவ்வளவு ஆய்வு..
இரால் ஆய்ந்தேன்
கீரை ஆய்ந்தேன்
கறிவேப்பில்லை ஆய்ந்தேன்
வெங்காயம் ஆய்ந்தேன்
பூண்டு ஆய்ந்தேன்
சமையல் கூடம்
ஆய்வுக்கூடமே..

%%%%%%

ஜி

உயிர் என்றால் - உயிர்
மெய் என்றால் - உடல்
இரண்டும் சேர்ந்தால்
ஜி..

%%%%%%

வெள்ளை கலாச்சாரம்

மின்சாரத்தடை
மெழுவர்த்தி ஏற்றினேன்
மின்சாரம் வந்தது
மெழுவர்த்தியை ஊதி அணைத்தேன்
பழக்கதோஷத்தில்
கைகளைத்தட்டினாள் குழந்தை.

%%%%%%

சுய நினைவு

கடைக்குப்போனேன்
பொருள் வாங்கினேன்
பர்சை பாக்கெட்டில் வைத்தேன்
பாக்கெட்டில் இருந்து எடுத்து
ஹேன்பெக்கில் வைத்தேன்
இவை எல்லாம் சுய நினைவோடுதான் நிகழ்ந்தது
இருப்பினும் மீண்டும் ஒருமுறை
ஹென்பெக்கில் பர்ஸ் உள்ளதா என 
சரி பார்க்கச்சொல்கிறது மனசு....

%%%%%%

எனக்குமானவன்

உனக்குள் வைக்கப்பட்ட திறமைகள்
நான் தலையசைத்து 
ரசிப்பதற்காகவே..

%%%%%

அழியும் சேகரிப்புகள்

நமது சேகரிப்பை,
நமது யூகத்தை,
நமது பின்பற்றலை,
நமது தேடலை,
நமது நியாயங்களை,
நமது கூர்மையை,
நமது கணிப்பை ,
நமது பார்வையை,
நமது திறமையை,
நமது சிறப்புகளை
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் 
யாரோ ஒருவர்
சர்வசாதணரமாக
உடைத்துக்கொண்டே இருக்கின்றார்..
ஆதாரத்தோடு.!

%%%%%%%

தமிழ்தான்

என் உழைப்பில்,
நான் சம்பாதித்த பணத்தை,
அவர் கொடுக்கச் சொன்னார்
என்றால்தான்
வாங்கிக் கொள்கிறார்
அம்மா. 

%%%%%%%

பட்டு

உள் சொட்டுகள் கூட
பட்டுவிடுகின்றன
வெயில் வெளியேதான் அடிக்கிறது.!?

%%%%%

நோய் தன்மை

தன்னாலே சரியாகிப் போகிற
வியாதிகளுக்குத்தான்
நாம் மருந்து எடுத்துக்கொண்டிருக்கின்றோம் -
தினமும்.

%%%%%%


உன்
விழியும்
என்
`வாலும்’
சந்தித்தால்?

%%%%%%