வியாழன், மார்ச் 07, 2013

‘செஞ்சி வைச்சுட்டாங்க’

புருஷன் வேறு பெண் தேடிக்கொண்டால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வீட்டில் குழந்தைக்கு சுகமில்லை என்றால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
மனைவி நோயாளியாயிட்டால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
இடி விழுந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வீட்டின் முன் தேங்காய் விழுந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கைகால்கள் குடைச்சல் வந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கண்ணாடி உடைந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பொண்டாட்டி ஓடிப்போனால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
எடுக்கற சம்பளத்தில் சமாளிக்கமுடியலன்னா
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வாந்தி எடுத்தா
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பக்கத்துவீட்டுக்காரர்கள் பேசவில்லை என்றால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
சத்தமாக குறட்டை விட்டால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வயிற்றில் கட்டி வந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வாகனம் எதிலாவது மோதினால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பைத்தியம் பிடித்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கிறுக்கு பிடித்தாலும்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கட்டையில் போனாலும்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’

யாரோ ரொம்ப `ப்ரீயா’ இருக்காங்க
செஞ்சி செஞ்சி வைக்க..!!

அதுசரி
‘செஞ்சி வைச்சுட்டாங்க’ என்றால் என்ன?
சத்தியமா தெரியாதுங்க.. !