ஞாயிறு, டிசம்பர் 04, 2011

அ-லய்ப்பு

பெண்களுக்கு...

ஒரு லய்ப்பு 
ஒரு அழைப்பு
’’அம்மா’’
குழந்தை...

ஒரு லய்ப்பு
ஒரு அழைப்பு
’’டார்லிங்’’
டார்லிங்..

ஒரு லய்ப்பு
ஒரு அழைப்பு
’’எங்ங்கோ’’
பக்கத்துவீட்டுக்காரங்க...

ஒரு லய்ப்பு
ஒரு அழைப்பு
’’ட்ரிங்ங் ட்ரிங்ங்’’
தொலைபேசி....

ஒரு லய்ப்பு
தோசையும்
கருப்பானது
காப்பியும் ஆறிப்போனது

இன்று காலையிலிருந்து எதிலுமே
லய்க்க முடியாத நிலை
இது தொடரும்..இரவு வரை.
வேலையிடமே தேவலை..