செவ்வாய், ஏப்ரல் 03, 2012

மழைக்காப்பி

ஒரு ஆசை
அதற்குத் தோதாக
லேசான மழை

எட்டிப்பார்த்தேன்
சாரல் நனைத்தது
மின்சார கதவுதனை

என் பிம்பம்
எனக்கே தெரிந்தது
நிழலாக..
அதுவும் நனைந்தது
மழையில்

திடீர் யோசனை
வென்டிங் மிஷின் வெளியே
காசு போட்டு
காப்பியை எடுத்தேன்

காப்பியுடன்
கையை வெளியே நீட்டினேன்
டிக் டிக் டிக்..
மழைத்துளிகள் கலந்தன

காப்பியில் விழுத்த
மழைத்துளியும் காப்பியாய்
தெறித்தன..
காப்பி வெதுவெதுப்பானது

இன்று,  இப்போ
ஆபிஸில நான்...
மழைக்காப்பி குடித்துக்கொண்டு...!