ஒட்டாத போது
ஓயாமல் வருகிறாய்
ஒட்டியவுடன்
ஓடிவிடுகிறாய்சரி, எட்டிச்செல்லலாம்
என்றால்
இதயவாசலை
மீண்டும் தட்டிச்செல்கிறாய்
தட்டும் போதெல்லாம்
திறந்துக் கொ(ல்)ள்கிறது
பூட்டப்படாத என் வாசல்
சாவியை நான்
பூட்டும்வரை
உன் தட்டலுக்கு
திறக்கும் என் வாசல்