எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் திடிரென்று ஒரு தேடல் பிறந்தது. அலசலுக்குத் தயாரானேன்.
எனக்கு இருக்கின்ற ஒரு நல்ல பழக்கம், நான் எழுதி பிரசுரமான படைப்புகள், என்னைப்பற்றிய செய்திகள் எதேனும் பத்திரிகைகளில் அச்சாகி பிரசுரமாகியிருந்தால், அவற்றை உடனே கத்தரித்துச் சேகரித்து வைத்துக்கொள்வேன். சிலது தவறியிருக்கலாம், ஆனாலும் பெரும்பாலும் சேகரித்தே வைத்துள்ளேன். அப்படி சேகரித்து வைத்துள்ளதை, வகை வாரியாகப் பிரித்து இங்கே பதிவு செய்துள்ளேன். இது என்னைப்பற்றிய ஓர் அலசல்தான், தம்பட்டமெல்லாம் கிடையாது. மேலும் இந்த எண்ணிக்கை முற்றுப்புள்ளியும் அல்ல, இது தொடரும் வாழும் காலம் வரை. பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் வலைப்பூவில் எனது பதிவுகள் தொடரும். இத்துறையில் மட்டும் அலுக்காத நிலையில் ஆண்டவன் என்னைப் படைத்து விட்டான்.
எனது படைப்புகள் - (மன்னிக்கவும் வருடம் மற்றும் தேதிகள் தெரியவில்லை, படைப்புகளில் அதை எழுதிவைக்கத் தவறிவிட்டேன்)
சிறுகதைகள்
1. பூஜைக்கு வந்த மலர்
2. கதை சொன்ன கன்னி - தூதன் இதழ்
3. அண்டை வீட்டுக்காரர் - மக்கள் ஓசை
4. நினைக்கத்தெரிந்த மனமே - தமிழ் நேசன்
5. சாந்தியிடம் சாந்தி - மக்கள் ஓசை
6. சகிப்புத்தன்மை - மலேசிய நண்பன்
7. கரிசனம் - மக்கள் ஓசை
8. கதவைத்திற... மலேசிய நண்பன்
9. பாலிக் கம்போங் - தீபாவளி சிறுகதை - மக்கள் ஓசை
10. பரீட்சைக்கு படிக்க்ணும் - மக்கள் ஓசை
11. அவர்களுக்கு வயதானால் - மலேசிய நண்பன்.
12. தோள் கண்டேன் - தென்றல் வார இதழ்
13. இயந்திர வாழ்வுதான் - நம்நாடு
14. இப்போ என்ன? - மின்னல்
15. அந்த தோட்டக்காரி - தமிழ் நேசன்
16. தீபாவளி சிந்தனை - மலேசிய நண்பன்
17. கொஞ்ச நேரம் நில்லு - மக்கள் ஓசை
18. ஆபிஸ் - மக்கள் ஓசை
19. உன் குரல் கேட்டால் - மின்னல்
குட்டிக்கதைகள்/ நிமிடக்கதைகள்/கடுகுக்கதைகள்
1.மூடுவிழா விற்பனை - மக்கள் ஓசை
2.மாற்றம் - மக்கள் ஓசை
3.பேச்சுக்கலை - தென்றல்
4. முடியாது - மக்கள் ஓசை
5. தாய் அன்பு - மக்கள் ஓசை
6. ஒப்பிடாதிங்க -தென்றல்
7. வார் ரொட்டி - தென்றல்
8. கலர்கலராய் கனவு - தென்றல்
9. என்னங்கடா சேவை - தென்றல்
10. ராங் நம்பர் - நிமிடக்கதை தென்றல்
11. அது - மலேசிய நண்பன்
12.சினிமாவில் என் நகைச்சுவை - தென்றல்
13.மகனோடு வாழ்க்கை - தென்றல்
14.மூன்றாவது எறும்பு - தென்றல்
15.சைக்கிள் கேப் - தென்றல்
16.நீண்ட ஆயுசு - தென்றல்
17.அந்த ஒன்னுதான் - தென்றல்
18. நானிருக்கேன் கவலைப்படாதே - தென்றல்
19. எனக்குள் சில ரகசியங்கள் - தினக்குரல்
20. ஐ மிஸ் யூ - மின்னல்
21. நகவெட்டி - தென்றல்
22. மின் குழல் - தென்றல்
23. மூன்று பெண்கள் சேர்ந்தால் - தென்றல்
கட்டுரைகள்
1. இது பெண்களுக்காக - மகளிர் கட்டுரை - தென்றல்
2. அழகிற்கு அழகூட்டுவது எப்படி? - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
3. ஆள்பாதி ஆடை பாதி - மகளிர் கட்டுரை. - மலேசிய நண்பன்
4. பண்பாட்டு கூறுகளும் நாமும் - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
5. செய்துதான் பாருங்களேன் - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
6. இலக்கியச்சோலை - விமர்சனக் கட்டுரை - தமிழ் நேசன்
7. மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்- மலர் மாத இதழ்
8. முருங்கை’னா சும்மாவா - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
9. இரவிந்திரநாத் தாகூர் கவிதைகள் - அறிமுகக் கட்டுரை - தென்றல்
10.பிரபலமாகிப்போன சொல் வழக்கங்கள் - தினக்குரல்
11. இயம்பிட வார்த்தைகள் இல்லா சுயம்பு லிங்கம் - பயணக்கட்டுரை மக்கள் ஓசை
12. கலகலக்கவைத்த கலைஞன் கோயாமணியம் (குடும்ப உறுப்பினர் மறைவு) - இரங்கல் செய்தி - மக்கள் ஓசை
13. கெல்லி ஸ்மித் - கனவுக்கோட்டை - பயண அனுபவக்கட்டுரை - தமிழ் நேசன்
14. இலக்கியவானில் ஒரு நிலா - இரங்கல் செய்தி - தமிழ் நேசன்
15. சின்ன நடிகவேள் மரணம் (ரகுவரன்) - இரங்கல் கட்டுரை - தமிழ் நேசன்
16. இறையன்பு ஓர் அறிமுகம் - தமிழ் நேசன்
தொகுப்பு பதிவுகள்
1.ஓஷோவின் தேன் துளிகள் - மக்கள் ஓசை
2. ஓஷோவின் பார்வையில் - மக்கள் ஓசை
3. ஓஷோவின் தேன் துளிகள் - தென்றல்
4. ஒஷோ ஒர் அறிமுகம் - தத்துவக்கட்டுரை தென்றல்
சிறுகதை விமர்சனம்
1.முதியோர் எண்ண ஓட்டம் - தமிழ் நேசன்
2. இலக்கிய உலகம் உருப்பட்ட மாதிரிதான் - மலேசிய நண்பன்
3. வெற்றி பெற்ற படைப்பு - தமிழ் நேசன்
4. நல்ல சிறுகதை `துணைவி’ - தமிழ் நேசன்
5. சிறுகதைகளுக்குச் சன்மானம்- மலேசிய நண்பன்
6. போலி முகமூடிகள் - தென்றல்
7. படைப்பின் வெற்றி - தென்றல்
8.அனுபவ எழுத்தாளரின் சிறுகதையா? - மக்கள் ஓசை
9.கணேசன் அப்பா ஆமை மண்டோர்- தமிழ் நேசன்
10.தொட்டுப்பார்க்கவா? - மக்கள் ஓசை
11.கவராத சிறுகதை - மக்கள் ஓசை
12. இலக்கிய பணியும் வானொலி அறிவிப்பும் -மக்கள் ஓசை
13. சிறுகதை திறனாய்வு - மக்கள் ஓசை
14. நகைச்சுவை கலந்த போதனை - மலேசிய நண்பன்
15. பழுதான விதை - மலேசிய நண்பன்
கவிதைகள்
1.குழந்தை- மக்கள் ஓசை
2.தழும்பு - தமிழ் நேசன்
3.அனுபவம் - தமிழ் நேசன்
4. பிரிவு,காதல், இதயம் - மக்கள் ஓசை
5. புரியவில்லை - தென்றல்
6. தாய்,ரம்மியம்,காதல் - மக்கள் ஓசை
7. மனசாட்சி - தென்றல்
8. முடியவில்லை - மக்கள் ஓசை
9. மனிதன் இல்லை, பயமும் இல்லை - மக்கள் ஓசை
10.கருணை காட்டு - மக்கள் ஓசை
11.ஏன் பெற்றாய்? - தமிழ் நேசன்
12.எனக்கு ஒன்று - மக்கள் ஓசை
13.அகத்தின் அழகு - செம்பருத்தி
14.பெண்ணுரிமை - தென்றல்
15.மனசு - நயனம்
16.விவாகரத்து - நயனம்
17.கருவறை - செம்பருத்தி
18.நிலையில்லா வாழ்வு - நயனம்
19.அன்னை - தென்றல்
20.பூஜிக்கிறேன் - நயனம்
21.ஈகோ -தமிழ் நேசன்
22. படிக்காமல் - செம்பருத்தி
23. மாற்றம் - நயனம்
24.சொன்னதும் செய்ததும் - தென்றல்
25.புதுமைப்பெண் - தென்றல்
26.மனித மனங்கள் - நயனம்
27.பெண்மை - மக்கள் ஓசை
28.தூறல்கள் - மின்னல்
29.மெய்காதல் - தென்றல்
30.காதல் ஆராய்ச்சி - தென்றல்
31.நவம்பரில் நாங்கள் - தென்றல்
32.தந்தையே தியாகி - மக்கள் ஓசை
33.ஆஸ்கார் விருது - மக்கள் ஓசை
34. இப்படிச்செய்ய எப்படியம்மா மனசு வந்தது! - தென்றல்
35.அன்னையின் தியாகம் - தமிழ் நேசன்
36.கண்ணீரில் கரை சேர்ந்தேன் - தமிழ் நேசன்
தீபாவளி மலருக்கான எனது பங்களிப்பு
1.தீபாவளி பரிசு - தமிழ் நேசன்
2.ஷோப்பிங் ரகளை - மக்கள் ஓசை
3.விடிந்தால் தீபாவளி - தமிழ் நேசன்
4.தீபஒளியும் தீபாவளி மலரும் - மக்கள் ஓசை
5.கேள்வி பதில் - தீபாவளி கலாட்டா - தென்றல்
6.மறக்கமுடியாத தீபாவளி - தமிழ் நேசன்
7.இதுவே இன்பத் தீபாவளி - மலேசிய நண்பன்
8. மீண்டும் வருமா அந்த நாள் - மலேசிய நண்பன்
9.தீபாவளி விருந்திற்குப் போகலாம் வாங்க - தீபாவளி கலாட்டா - தென்றல்
வாசகர் களம்
1.ஓஷோவின் நூல்கள் ஒர் அறிமுகம் - தமிழ் நேசன்
2. என்னைக் கவர்ந்த பாடகர்- ஏசுதாஸ் - தமிழ் நேசன்
3. உள்ளூர் பாடகர் திலிப்வர்மன் - தமிழ் நேசன்
4.நெஞ்சைக்கவர்ந்த டி.எம்.எஸ் - தமிழ் நேசன்
5.என்னைக் கவர்ந்த குற்றவியல் துறை - தமிழ் நேசன்
6. கன்னிமாடம் நாவல் விமர்சனம் - தமிழ் நேசன்
7. வட்டிமுதலைகளிடம் கடன் பெறுவது சிறப்பா? - தமிழ் நேசன்
8. என்னைக்கவர்ந்த புதிய பாடல்கள் - தமிழ் நேசன்
9. இன்றைய திரைப்படங்கள் கவர்கின்றனவா? - தமிழ் நேசன்
10.சினிமா ஒரு விழிப்புணர்வு மையம் - தமிழ் நேசன்
11. நம் நாட்டில் மொழி கலப்பு தவிர்க்கவியலாது - மலேசிய நண்பன்
12.அழகான கவிதைவரிகள் பழைய பாடல்கள் - தமிழ் நேசன்
13.கலாச்சார சீரழிவிற்கு மனமே காரணம் - தமிழ் நேசன் (50வெள்ளி பரிசு பெற்ற கட்டுரை)
14.புதுத்தெம்பை தருபவை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நூல்கள் - தமிழ் நேசன்
தொடர்கள் (மலேசிய நண்பன்)...
ஓஷோவைப் பற்றிய ஆன்மிகத் தேடலில் நான், தொடராக பதினைந்து வாரங்கள் பல எதிர்ப்புக்குரல்களைக் கடந்து வந்த கட்டுரைகள் இவை.:-
1ஓஷோவின் வாழ்வியல் உண்மை
2.எறும்புகள் தற்கொலை செய்து கொள்வதில்லை
3.காயம் பட்ட மக்களை காமம் காயப்படுத்தி விட்டது
4.நிரந்தரமான நிரந்தரம் வாழ்க்கை
5. கோபம் பலமா?பவீனமா?
6.கட்டொழுங்கு இல்லையென்றால் விழிப்புணர்வு வராது
7. கடையைப்பாருங்கள் வீடு சரியாகிவிடும்
8.அழகே நீ யார்?
9.பெண்ணை நேசி, ஆராயாதே
10.காதலே தெய்வீகக் காதலே
11.அன்பு,நேசம்,காதல் - நேசிக்கத்தெரியாதவர்களின் வாழ்க்கை
12.எல்லோருமே உயிர்த்தன்மையுள்ள மனிதர்களா?
13.ஓஷோவின் பார்வையில், அறிவுப்பூர்வமும் உணர்ச்சிப்பூர்வமும்
14. அன்பின் நிலை இரண்டு
15. மனம் என்று ஒன்றுமில்லை
மலர் மாத இதழில் .
1. மூடப்பழக்கவழக்கங்களும் விஞ்ஞான விளக்கங்களும் - ஆய்வுத் தொடர்
சர்ச்சைக்குள்ளான எதிர்வினைப் பதிவுகள்
1.விமர்சனத்திற்குக் கிடைத்த பரிசு - மலேசிய நண்பன்
2. மின்னலே ஓ மின்னலே - (ஆசிரியரின் திட்டுதலோடு) தென்றல்
3. குண்டுச்சட்டி நிருபர்கள் - தென்றல்
4. குறைகளைச் சுட்டுங்கள்- வெட்டிவேலை வேண்டாமே - மக்கள் ஓசை
5. தெளிவில்லாத அச்சும் கோணல் முகங்களும் - பத்திரிகை தரம் குறித்து எனது குமுறல் - மக்கள் ஓசை
6. தனித்துவாழும் தாய்மார்களுக்கு மாநகர் வீடு கிடையாதா? - மக்கள் ஓசை
7. சிந்திக்கவைக்கும் படைப்பாளன் தானே எழுத்தாளன் - எதிரொலி தென்றல்
8. ஆண்களே காரணம்- தென்றல்
9.பெண்கள் பேருக்காக எழுதுகிறார்களா? - எதிரொலி தென்றல்
10. கிண்ணம் பாதி காலியா அல்லது பாதி நிறைந்துள்ளதா? - கண்டனக்கடிதம் - மலேசிய நண்பன்
11.எழுத்தின் விவேகம் - எதிரொலி தென்றல்
12. ஆதாரமேயில்லா பழிச்சொல் - எதிரொலி தென்றல்
13. இனி வேகாது இந்த பருப்பெல்லாம் - எதிரொலி தென்றல்
14. காழ்புணர்ச்சியை அடையாளங்காண்க - மலேசிய நண்பன்
15. மொழிபெயர்ப்பில் அசலைப்படித்துவிட்டு கருத்து கூறுவதே சிறப்பு - மலேசிய நண்பன்
16. நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்போம் - மலேசிய நண்பன்
17. வானொலி பெயரைப் பயன்படுத்தி லாபம் தேடும் அறிவிப்பாளர்கள் - மலேசிய நண்பன்
18. பெண்ணுரிமையும் சுதந்திரமும் - மலேசிய நண்பன்
19.தமிழை பிடித்துக்கொண்டு தமிழ் மரபை புறக்கணிப்பவர்கள் - மக்கள் ஓசை
20.யார் எழுத்தாளர்? - மக்கள் ஓசை
21.இதுதானா அரசியல்? - தென்றல்
22.பெண்களை இழிவு செய்யாதே (வானொலி நிகழ்ச்சி) - மலேசிய நண்பன்
23. வானொலிநாடகங்களும் நடக்கும் கூத்துகளும் - தினக்குரல்
24.இலக்கியமும் குழாயடி சண்டையும் - தென்றல்
25.எனது பதிவுகளில் வசீகரம் அதிகம் - எதிரொலி தென்றல்
26.சரக்கே இல்லாத கோணாங்கிகள் - எதிரொலி தென்றல்
27.கவிதை கருவிற்கா பஞ்சம்? பெண்களை ஏலம் போடுகிறார்கள் - எதிரொலி தென்றல்
28.மனம் நிறைய அழுக்கு - குமுறல் கட்டுரை - தென்றல்
நேர்காணல்
1.ஷா ஆலம் விஜயாவுடன் ஒரு நேர்காணல் - தென்றல்
2.புனைவுகள் ஆய்வுகளின்றி படைக்கப்படுகிறதா? விஜயாவுடன் ஒரு நேர்காணல் - தினக்குரல்
3.முழுமை பெறாத சிற்பங்கள் - விஜயாவிடம் ஒரு விளக்கம் - நேர்காணல் மலர் இதழ்
ஏணைய இதழ்களில் என் பங்கேற்புகள்
அதீதம் - தமிழ்நாட்டு இணைய இதழ்
வல்லினம் - இணைய இதழ்
மௌனம் - கவிதை மாத இதழ்
The Malay Mail -
பட்டியலில் இடம்பெறாத இன்னும் நூற்றுக்கணக்கான விமர்சன, பாராட்டு, வாசகர் கடிதங்களும்.. சேகரிக்காமலும், தொலைந்துபோன பதிவுகளும், சேகரித்து வைத்து, என்னை நோக்கி வந்துள்ள மிக மோசமான விமர்சனங்களும், அற்புதமான பாராட்டுகளும் இதில் அடங்கா.
நன்றி வாசித்தமைக்கு.....
அன்புடன் - ஸ்ரீவிஜி
ஸ்ஸ்ஸ்ஸப்பா..இம்புட்டு பதிவு பத்திரிகைகளில் பிரசுரம் ஆகிருக்கா..இப்போவே கண்ணை கட்டுதே :) :)
பதிலளிநீக்குஅப்ப நானெல்லாம் பதிவரே இல்லைன்னு சொல்லுங்க!
தம்பி, உங்களின் ஒரு பதிவு நூறு பதிவுகளுக்குச்சமம். அற்புத ஆய்வாளர் நீங்க. தன்னடக்கமாக என்னைச் சொல்வது எனக்குப்பெருமையே. :)
நீக்குபட்டியல் ரொம்ப பெரிசா இருக்கே..ஒவ்வொண்ணா பகிர்ந்து கொள்ளுங்க..
பதிலளிநீக்குநிச்சயமாக சார். முயல்கிறேன். நன்றி வாசிப்பிற்கும் கருத்திற்கும்
நீக்குஎவ்ளோ சாதனை செய்திருக்கிறீர்கள். நினைக்கவே (படிக்கவே) மலைப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள் தோழி!
பதிலளிநீக்குநன்றி சகோ. சாதனை அப்படியெல்லாம் இல்லை. வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி
நீக்குவாழ்த்துகள் :-)
பதிலளிநீக்குராம்... :))
நீக்குநல்ல தொகுப்பு... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபலரிடம் இதுமாதிரி தொகுப்புகள் இருக்காது இல்லே.! எனக்கே ஆச்சிரியமாக இருக்கு, பத்திரப்படுத்தி வைக்கின்ற எனது இந்த பழக்கம். நன்றி சார்.
நீக்குபடைப்பாளி என்பது நீங்கள் தான்.
பதிலளிநீக்குநான் எழுதியவைகளைச் சேகரித்து வைக்கவே இல்லையே
என்று உங்கள் பதிவைக் கண்டதும் தான் யோசிக்கிறேன்.
வாழ்த்துக்கள் தோழி.
மேலும் மேலும் எழுதி புகழ்பெறுக!
நன்றி தோழி, உங்களின் உற்சாக வாழ்த்தில் மகிழ்கிறேன். பெரிய இழப்பு தோழி சேகரிக்காமல் விட்டிருந்தால். நான், பத்திரிகையில் பிரசுரமான எனது படைப்புகளை, உடனே வெட்டி, ஒரு கைப்பிடி தோள்பை வைத்துள்ளேன், அதில் தூக்கிப்போட்டுவிடுவேன். உடனே ஒரு கேள்வி வரும், பத்திகையை இப்படி வெட்டி நாசம் செய்தால், வீட்டில் மற்றவர்கள் படிக்க மாட்டார்களா? என.! எந்த காலத்தில், பக்கத்தில் உள்ளவர்களுக்கு நமது மதிப்பு தெரியப்போகிறது.! சொன்னாலும் படிக்கமாட்டார்கள், அதனால் அவர்கள் வாசிப்பார்களா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், உடனே கத்தரிக்கோல் வைத்துவிடுவேன். இன்னொரு பழக்கமும் உண்டு தோழி எனக்கு, யாரிடமும் என் படைப்பு வந்துள்ளது, வாசித்தீர்களா என இதுவரையிலும் கேட்டதில்லை.! வலைப்பூவிற்கு வந்ததிலிருந்து, புரிந்துணர்வுள்ள சில நண்பர்களுக்கு லிங்க் அனுப்புவேன். கமெண்ட் வந்தால், மகிழ்ச்சி, இல்லையேல் அதுவும் பிரச்சனையில்லை.
நீக்குவருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
யப்பா...........இம்புட்டு விசயத்த சாதிச்சிப்போட்டு கம்முன்னு இருக்கிறயளே இது உங்களுக்கே நல்லா தெரியுதா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் இன்னுமின்னும் நிறைய எழுதுவதற்கும் சாதனைகள் படைப்பதற்கும்
நன்றி நன்றி.. வயதில் ரொம்ப சிறியவர், ஆனால் பெரிய மனசு குருவி.
நீக்குஇனி எங்கே.. பத்திரிகைகலின் பக்கமே போகக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.
யாருக்கும் எதுவும் தேவையில்லை அங்கே. அவர்களின் படைப்புகள் வந்தால் எல்லோரும் பாராட்டவேண்டுமென்று மட்டுமே எதிர்ப்பார்க்கிறார்கள். விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளாமல், புனைப்பெயர்களில் வந்தாவது தாறுமாறாக திட்டிச்செல்கிறார்கள். இந்த அவலம் வயது ஆக ஆக சோர்வைத்தருகிறது.
அப்படியே விலகிவிடவேண்டியதுதான்.. :)
பத்திகைகளின்// எழுத்துப்பிழை. டைப்பிங் எரர். சாரி.
நீக்குஅட....ஆச்சர்யமா இருக்கு....வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி கோவை..
நீக்குஎனது பதுவுகளிலே, அதிகமான ஆட்கள் வந்து பார்த்துச்சென்ற பதிவு இதுதான்.. கிட்டத்தட்ட 200பேர். எப்படி? யார் இதை கூகுளில் சேர் செய்தது? எனக்குப் பார்க்கதெரியல.. நீங்களே சொல்லுங்க..ப்ளீஸ்.
பதிலளிநீக்குபடைப்புகளின் பட்டியல் ஒரு வருட டைரி போல் உள்ளதே.
பதிலளிநீக்குமிக ஆச்சரியமே//
நன்றி ஜாலீலா. வருக புதிய நட்பே.
நீக்குமலைத்துவிட்டேன் விஜி., சொல்லவார்த்தைகள் இல்லை. வாழ்ழ்த்துகள். எனது நூற்றுக்கணக்கான படைப்புகளை முழுமையாக நான் சேகரிக்கவில்லையே என வருந்துகிறேன்.உங்களுடைய இந்த தூரநோக்கு சிந்தனை பலருக்கு ஒரு பாடம். இனிவரும் காலங்களில் நிச்சயமாக அனைத்துப் படைப்புகளையும் சேகரித்து வைப்பதற்கு இது ஒரு தூண்டுதல் அல்லவா? எனக்கும்கூட...
பதிலளிநீக்குநன்றி பாலன் சார். வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும்.. உற்சாகமாகவே இருக்கின்றது உங்களின் வாசகம்.
நீக்கு:)akkaa..................... kalkkaringgaa.... ithil; silavatrathaithaan padiththiruppathaay ninaippu.....
பதிலளிநீக்குஅப்பாடா தம்பிக்கு இப்போவாவது வந்து பார்க்கத்தோணுச்சே. :P
நீக்குakkaa.... ithil sivatrathaithaan padiththirukkiReen naan... :)
பதிலளிநீக்குஅப்படியா தம்பி..? நான் எல்லாவற்றையும் படித்துள்ளேன். நன்றி வருகைக்கும் பொறுமையான வாசிப்பிற்கும். அடிக்கடி வருக,
நீக்குஅடேங்கப்பா , இதை பட்டியல் போட 24 மணீ நேரம் ஆகி இருக்குமே? ;-))
பதிலளிநீக்கு>>Your comment will be visible after approval.
பதிலளிநீக்குபிரபலம்னா இப்படித்தான் போல ;-))
lollu hahaha
நீக்குஇல்லை மெதுமெதுவாக ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். நன்றி கடி மன்னா.
பதிலளிநீக்குஇவ்வளவு எழுதியிருக்கீங்க... உங்களைப்பத்தி தெரியாம இருந்துட்டேனே...
பதிலளிநீக்குயாருங்க நீங்க?
பெர்ர்ரீரீய எலக்கியவாந்தி.. :P @karthik
நீக்குநன்றி வருகைக்கும் கருத்திற்கும்.