திங்கள், ஜூலை 02, 2012

உடனே தோசை..

சமையல் குறிப்பு; 

சிலர் தோசை மாவு புள்ளித்தவுடன் தான் தோசை சுடுவார்கள். அதற்காக முதல் நாளே அரைத்துவைத்து மறுநாள்தான் சுடுவார்கள். 

உடனே அரைத்து உடனே புளித்து உடனே சுடவேண்டுமா? இதோ ஐடியா.. 

இதுபோன்ற ரகசிய சமையல் குறிப்புகளை பெரும்பாலும் பெண்கள் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள், ஆனால் நான் அப்படியல்ல.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

காலையில் அரிசியையும் உளுந்தையும் சுத்தமாக கழுவி, பழைய சோறு, கொஞ்சம் உப்பு, வெந்தயம் சேர்த்து சரியான அளவோடு நீர் விட்டு ஊறவைக்கவும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியதும், ஊற வைத்திருந்த அந்த கலவையே நுரை தள்ளிய நிலையில் இருக்கும். அதை அப்படியே கிரைண்டரில் அரைந்து வைத்து விட்டால், குளித்து விட்டு, குழம்பு வைப்பதற்குள் அது பதமாகி விடும். சுடச்சுட சுட்டு, மச்சானோடு சாப்பிடவும். 


ரெடிமெட் மாவு வாங்கி தோசை சுடுவதை தவிர்க்கவும்..

Clown

வட்டமான
சதுரமான
முக்கோண வடிவில்
முட்டை வடிவில்
உர் ரென்றும்
சிரிப்பும்
புன்னகையும்
ஏளனமும்
அலட்சியமும்
கோபமாக
கோரமாக
பலமுகங்கள்
நம்மைச்சுற்றி
கோமாளி
முகமூடியோடு



மறந்துவிடவும்


என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.

நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.

இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..

என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா?
மறந்து விடவும்.

என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம்,
எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..

ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள்,
கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.

நான் மறுபிறவி எடுக்கப்போகிறேன்,
எழுத்தால்,சொற்களால்..
என்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல்...

எப்போதாவது

நீருக்குள் நான் இட்ட செடி
புதிதாக ஒரு வேர் விட்ட போது.

பிடித்தவர்களின் அழைப்பு
வரும் போது..

நல்ல கவிதை வரிகள்
மனதைத் தொடும் போது..

எனக்குப் பிடித்த பாடல்
வானொலியில் ஒலிக்கும் போது..

ஒரு பூ
என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போது

தொலைக்காட்சியில் இருவர்
ஆரத்தழுவி முகம் புதைக்கும் போது

காலைவேளையில்
குருவிகள் பேசும்போது

உனது
குட் மார்னிங் வரும் போது

இதில் எதாவதொன்று
தினமும் நிகழும் போது

நான் உன்னை நினைப்பேன்
எப்போதாவது..




பேசுகிறேன் பேசுகிறேன்


எங்கு இருந்தாலும்
ஜடப்பொருள்களிடம்
பேசுவதே வழக்கமாகிவிட்டது-

கடைக்குச் சென்றால்;
அந்தப் பொருளோடு

வீட்டில் இருந்தால்;
பானை சட்டி, விளக்குமாறோடு

ஆபிஸில் இருந்தால்
காகிதங்களோடு கடிதங்களோடு

காரில் சென்றால்;
முன்னே பின்னே போகிற வாகனங்களோடு


பூஜையில் இருந்தால்;
சிலையாக இருக்கும் கடவுளோடு

இப்போ கணினியின் முன்
உன்னோடு..!

விளிம்பினிலே...

படிப்பதற்கே பொழுதில்லை
பாதிப்பொழுது பணியிடத்தில்
மிதிப்பொழுத்து குடும்ப சிக்கலில்
பார்வையெல்லாம் பெருமூச்சாய்..
நிறைவேறா ஆசைகள் ஒரு பக்கம்
சினிமா காட்டும் புதுமைப் பெண்களிடம்
சில குறிப்பு..
இயக்குனர்கள் சொன்ன வசனங்கள் சில
பக்கத்து வீட்டுப்பாட்டியிடம் சில கதை
கொஞ்சம் ஊர்கதை
தத்துவங்கள் சில
அறிவுரைகள் பல
ஆங்காங்கே திருக்குறளையும்
சேர்த்துக்கொள்ளலாம்..
கால்களில் சக்கரங்கள்...
செயற்கை இறக்கைகளோடு
மிதமிஞ்சிய கற்பனையில்
இலக்கியவானில் மிதந்துகொண்டிருக்கும்
தொடர்கதை பாவைகள்
விட்டுச்செல்கின்றனர்
எச்சங்களை மிச்சமாய்..