என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.
நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.
இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..
என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா?
மறந்து விடவும்.
என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம்,
எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..
ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள்,
கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.
நான் மறுபிறவி எடுக்கப்போகிறேன்,
எழுத்தால்,சொற்களால்..
என்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல்...
ஒக்கே சகோ
பதிலளிநீக்குபுதுசா திறக்க போற பிளாக்கு டீடைல்ஸ் மற்றும் முகநூல் ஐடி...எனக்கு மெயில் பண்ணவும் ப்ளீஸ்
டீடெயிலு தருவேன் கணிப்பாக..
நீக்குathu sari...!
பதிலளிநீக்குநன்றி சீனி
நீக்கு