திங்கள், ஜூலை 02, 2012

உடனே தோசை..

சமையல் குறிப்பு; 

சிலர் தோசை மாவு புள்ளித்தவுடன் தான் தோசை சுடுவார்கள். அதற்காக முதல் நாளே அரைத்துவைத்து மறுநாள்தான் சுடுவார்கள். 

உடனே அரைத்து உடனே புளித்து உடனே சுடவேண்டுமா? இதோ ஐடியா.. 

இதுபோன்ற ரகசிய சமையல் குறிப்புகளை பெரும்பாலும் பெண்கள் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள், ஆனால் நான் அப்படியல்ல.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

காலையில் அரிசியையும் உளுந்தையும் சுத்தமாக கழுவி, பழைய சோறு, கொஞ்சம் உப்பு, வெந்தயம் சேர்த்து சரியான அளவோடு நீர் விட்டு ஊறவைக்கவும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியதும், ஊற வைத்திருந்த அந்த கலவையே நுரை தள்ளிய நிலையில் இருக்கும். அதை அப்படியே கிரைண்டரில் அரைந்து வைத்து விட்டால், குளித்து விட்டு, குழம்பு வைப்பதற்குள் அது பதமாகி விடும். சுடச்சுட சுட்டு, மச்சானோடு சாப்பிடவும். 


ரெடிமெட் மாவு வாங்கி தோசை சுடுவதை தவிர்க்கவும்..

8 கருத்துகள்:

  1. சூப்பர் ஐடியா இப்பவே அம்மாட்ட ஓடிப்போய் சொல்லிட்டு வாரன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாலோ ஹாலோ.. அங்கே உள்ள பெண்களுக்குத்தெரியாததையா சொல்லிட்டேன்.. ஓவர் லா..

      நீக்கு
  2. ///மச்சானோடு///

    இது என்ன குழம்பு., நல்லா இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ சகோ.. ஆமாம் மொச்சை போட்டு வைக்கும் குழம்பு..

      நீக்கு
  3. நல்ல ஐடியாங்க சரியான நேரத்துல கொடுத்திருக்கீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலா சார்.. அப்போ கல்யாணத்திற்குப்பிறகு சமையல் ..ம்ம்ம் :( (எனக்கு அழுகை அழுகையா வருது)

      நீக்கு
    2. உங்களுக்கு எதுக்குங்க அழுகை வருது? சாப்பிட போகிறவங்கதானே அழனும்?

      நீக்கு