திங்கள், ஆகஸ்ட் 06, 2012

பாலும் வேண்டாம்

எனக்கு, நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை. 

அடிக்கடி வயிற்றில் காற்று புகுந்து வயிறு அப்படியே உப்பிக்கொள்ளும். தர்மசங்கடமாக இருக்கும். சாப்பிட்டாலும் பிரச்சனை சாப்பிடாவிட்டாலும் பிரச்சனை. எப்போதும் பெரிய பெரிய ஏப்பம் வந்துக்கொண்டே இருக்கும். கம்பனி கிளினிக்குச் சென்றால், அதே கேஸ் ஸ்ட்ரீக் மருந்து மாத்திரைகள். வாழ்க்கையே வெறுத்துப்போனது.

சனிக்கிழமை ஒரு அற்புதமான கைராசிக்கார அலோபதி மருத்துவரை சந்தித்தேன். 
முழுமையான மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு - பிரச்சனை என்ன என்பதனையும் சொல்லி- இனி நான்....

புகை பிடிக்கக்கூடாது
மதுபானங்களைத் தொடக்கூடாது

முக்கியமான ஒன்று -

பால் மற்றும் பால் பலகாரங்களைச் சாப்பிடக்கூடாது.

ஆச்சிரியம் - இரண்டு நாட்களாக நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன் - பால் பொருட்களைச் சாப்பிடாமல்.
வெறும் கருப்பு காப்பிதான்.



முகநூலில் பதிவேற்றினேன் இதை...

(பால் என்பது தனது கன்றுக்குட்டிக்காகத் தாய் மாடு சுரப்பது. அதைக் கறந்து மனிதர்களின் அன்றாட உணவாக்கியதும், அது மிகப் பெரியதொரு தொழிலாக்கப்பட்டிருப்பதும் இப்போதைக்குத் திருதத முடியாத கொடுமை. காபி, டீ ஆகியவற்றைக் கண்டுபிடித்த நாடுகளிலும், அவை ப
ரவியுள்ள பெரும்பாலான நாடுகளிலும் பால் கலப்பின்றிதான் எடுததுக்கொள்கிறார்கள். நம்ம சனங்கள்தான் பால் கலந்து ப ருகுகிற பழக்கத்தைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில் கருப்புக் காபியும் டீயும் பல மருத்துவ பலன்களை அளிக்க வல்லவை. அவற்றில் பால் கலக்கப்படும்போது அந்த பலன்கள் எல்லாம் அடிபட்டுவிடுகின்றன...  தீக்கதிர் - குமரேசன் அசக் அவர்களின்   பின்னூட்டம் இது - )