சனி, ஆகஸ்ட் 11, 2012

ஒலிம்பிக்'கில் பதக்கம்

மலேசியா - மூவின நாடு. எங்கள் நாடு.

இந்நாடு மிக சிறிய நாடு. உலக வரைப்படத்தைப் பார்த்தீர்களென்றால், ஒரு புள்ளிதான். ஆனாலும் வளமான நாடு.

பசி பஞ்சம் என்பது இல்லை எங்கள் ஊரில்.. எல்லோரும் ஓரளவு வசதியானவர்களே. ஏழைகள் இல்லை என்று நான் சொன்னால், தமிழர்களின் ஏழ்மை நிலையைக்காட்டி, அரசியல் நடத்துகிற கும்பல், இக்கருத்தின் மீது கோபம் கொள்ளலாம்.

இல்லையேல், இந்தோனீசியர்கள், பங்களாதேசிகள், தமிழ்நாட்டுக்காரர்கள் என, பலர் பலவிதமான வேலைகளைச் செய்து, லட்ச லட்சமாக பணங்களை அவர்களின்  வங்கிகளில் குவித்துக்கொண்டிருப்பது எப்படி சாத்தியம்!?.

அவர்கள் செய்யும் போது, உள்ளூர்வாசிகள் ஏழைகள் என்றால், லாஜிக் இடிக்கிறதுதானே.! சரி, நான் சொல்லவந்தது இதைப்பற்றியல்ல; இது, உலகப் பிரச்ச்சனை. விஷயத்திற்கு வருவோம்.



இந்த சிறிய நாடு தற்போது உலகளவில் பேசப்படுகிறது என்றால் அதற்குக்காரணம் லண்டன் ஒலிம்பிக்கில் நாங்கள் பெற்ற இரண்டு பதக்கங்கள்தான். ஒன்று வெள்ளி மற்றொன்று வெங்கலம்.

எங்களின் நாட்டுக்கொடி உலகரங்கில் பறக்கும் போது, ஒவ்வொரு மலேசியரும் தமது இருக்கையிலிருந்து எழுந்து நின்றோம். அவ்வளவு பெருமை.

அதுவும் லீ சோங் வே, பூபந்து அரங்கில் பரபரப்பாக விளையாடிய போது, மொழி, இன, மத வேற்றுமைகளை மறந்து எல்லோர் வீட்டிலும் பிராத்தனைகள் நடைப்பெற்றது, என்கிற செய்தி நிஜமாலுமே கண்ணீரை வரவழைத்தது. இந்நிகழ்வை ஒவ்வொரு மலேசியரும் கண்டு களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மறுநாள், பட்டி தொட்டியெல்லாம் இதே பேச்சுகள்தான். எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச்செய்தி இதுதான்.

`ச்சே, ஆரம்பத்தில் அவர்தான் லீடிங்’, `புள்ளிகள் மிக நெருக்கமாக..’, `கிட்ட கிட்ட வந்துக்கொண்டே இருந்தார்..’, `ஐசே, தவறவிட்டாச்சே..’, `அடுத்த ஒலிம்பிக்கில், இவருக்கு வயதாகிடுமே.. இவரைப்போலவே, யார் வருவாரோ..!?’, `இவர் மாதிரி விளையாட இன்னொருவர் பிறக்கனும்..’, `என்னமாய் விளையாடுகிறார்!!’,  `காலில் அடிப்பட்டு, தேறி வந்து, நமக்கு இரண்டாவது இடம் வாங்கிக்கொடுத்ததே, பெரிய விஷயம்..’, `படு டென்ஷனா இருந்தது, பார்ப்பதற்கு..’, `நிச்சயம் தங்கமெடுப்பார் என நம்பினேன்.. பரவாயில்லை..!!’ என, இன்னமும் பல குரல்கள், குமுறல்களாக வெளிப்பட்டவண்ணமாகத்தான் இருக்கின்றது.

இதிலிருந்து விடுபாடத நிலையில், இன்னொரு இன்ப அதிர்ச்ச்சி எங்களுக்கு, ஒலிம்பிக்கில் முதல் சாதனை, நாட்டின் முதல் பெண்மணி பதக்கம் வென்றுள்ளார்.  பண்டேலேலா ரினொங், ஒலிம்பிக்கில், நீரில் குதிக்கும் சாகசப் போட்டியில், மூன்றாவது நிலையில் வென்று வெங்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துவிட்டார். தலைவர்கள் நெஞ்சு நிமிர்ந்து நிற்கின்றார்கள். உலக அரங்கில் எங்களின் கொடி மீண்டும் பறக்கின்றது.



பத்திரிக்கைகளிலும், ஊடகச்செய்திகளிலும் வர்ணனைகள், பாராட்டுகள் குவிகின்றன. இன்றைய முன்னணி ஆங்கிலப் பத்திரிகையில் முதல் மூன்று பக்கங்கள் இந்த செய்திகள்தாம்.

வீரர்கள் ஊர் திரும்பியவுடன், ரொக்கம், பரிசுப்பொருட்கள் விருந்து நிகழ்வுகள் என இன்னும் அதிகமான சிறப்புகள் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பது, பலரை உற்சாகமூட்டுகிறது.

அடுத்த பிரேசில் ஓலிம்பிக்கில் நிச்சயம் நாங்கள் தங்கம் வெல்வோம். இந்த விஷயத்தில் நாம் ஒன்று பட்டு, ஒரே சிந்தனையில் இருந்தோமென்றால், `பாசிடீவ் வைப்ரேஷன்’ மூலமாக, நிச்சயம் வெல்வோம். 


ஒரே மலேசியா. மலேசியா போலேக். 

SATU MALAYSIA... MALAYSIA BOLEH.  


#இதையொட்டிய ஒரு கொசுறு தகவல் : இன்றைய பத்திரிகையில் வந்தது.

நேற்றைய முகநூலில் ஒரு பதிவாம்; 

‘I dare to cut my genetals if Pandelela wins tonight’ - பண்டேலேலா ரெனொங் பதக்கம் வென்றால், நான், எனது பிறப்புருப்பை அறுத்துக்கொள்கிறேன், என அரிக்கை விட்டுள்ளார் ஒருவர். அந்த பெண்மணி வென்றவுடன், அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.

இப்போது பலர், அவனைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள், அரிவாளோடு.#







அதே அர்த்தம் தான்

புகை

கையில் சிகரெட்
காற்று
வாங்கப்போகிறார்கள்

%%%%%

தீக்கதிர் குமரேசன் அசக்..

கையில் சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்
புகையைக் கொடுக்க.

%%%%%%

கையில் சிகரெட்
வெளியே விடுவது புகை
காற்று வாங்கப்போகிறார்கள்..!

%%%%%%

கையில் சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்
காற்றெல்லாம் புகை..!

%%%%%%

ஆறாம் விரலாய்
சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்..!

%%%%%%

காற்று வாங்கப்போகிறார்கள்
காற்றோடு வருகிறது புகை
கையில் சிகரெட்..!

%%%%%%

கையில் சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்
பின்னாலே வருகிறது நோய்...!

%%%%%%%

காற்றை மாசு படுத்துகிறார்கள்
கையில் சிகரெட்’டோடு
காற்று வாங்கப்போகிறவர்கள்...!

%%%%%%%

கையில் சிகரெட்
கல்லரையை அழைத்துக்கொண்டு
காற்று வாங்கப்போகிறார்கள்...!

%%%%%%%

கையில் நோய்
புகையை கக்கிக்கொடு
காற்று வாங்கப்போகிறார்கள்...!

%%%%%%%

புகையை சுவாசித்துக்கொண்டு
காற்று வாங்கப்போகிறார்கள்
கையில் சிகரெட்...!

%%%%%