எனக்கு எதிலாவது ஆர்வம், தேடல் இருந்தால், உடனே கூகுளுக்குச் சென்று அதையொட்டிய தகவல்களை ஏற்கனவே யாரோ ஒருவர் ஆய்வு செய்து திரட்டி வைத்திருப்பதைப் பார்த்து ஆறுதல் கொள்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை. எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை நேரிடையாகச் சந்தித்து, அதையொட்டி அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன நினைக்கின்றார்கள் என்பதனைத் தெரிந்து கொள்வதில்தான் அலாதி பிரியம். அதனால் தான் எங்கு சென்றாலும் யாராவது ஒருவரிடம் நான் எதையாவது பேசிக்கொண்டிருப்பேன். எல்லா இடங்களிலும் எனக்கு நண்பர்கள் மிக சுலபமாக கிடைத்து விடுவார்கள்.
ஆக, என் பதிவுகள் சில வேளைகளில் funny யாக இருக்கும். கண்டு கொள்ளாதீர்கள். தவறாக இருந்தால் திருத்தம் செய்யுங்கள் ஆனாலும் இது நிஜம்.
மாடலிங் துறையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என சில நண்பர்களிடம் விசாரித்தேன். நம்மவர்கள்தான் தெரியாதா!
*உடலைக்காட்டி சம்பாதிப்பது
*முட்டாள்கள் செய்யலாம்
*உடல் அழகை பேணிக்காப்பவர்கள், செய்யலாம்
*நமக்கு சரிப்பட்டு வராது - பாரம்பரியம் கலாச்சாரம்’னு ஒண்ணு இருக்கே.
*எனக்க்கு அந்த ஆசை இருந்தது, எங்கப்பா கொன்னுடுவேன்’னு சொன்னாரு, அதான் போகல.
*நல்ல பணம் சம்பாதிக்கலாம்
*நிறைய ரசிகர்களைப் பெறலாம்
*பிரபலமாகலாம்
*`என் மகளுக்கு ஆசை இருக்கு, என் மனைவி விடமாட்டாங்க. பெண்பிள்ளைகளை யாரும் கல்யாணம் கட்ட மாட்டார்கள் என்பாள்.’ இப்படி ஒருவர்.
இதையெல்லாம் தண்டி, ஒரே ஒரு சீனத்தோழி சொன்னாள்.
*``அது என்ன அவ்வளவு சுலபமான வேலையா.! அதனுள் எவ்வளவோ இருக்கின்றது கற்பதற்கு. எல்லோரும் சுலபமாகச் சொல்லலாம், அது, இது, அப்படி, இப்படின்னு ஆனால், அழகாக இருந்தால் மட்டும் நுழைந்து விட முடியுமா அந்தத் துறையில்? அதற்காகப் போடப்படும் உழைப்பு அவ்வளவு எளிதானதா? சின்ன குழந்தையிலிருந்து எவ்வளவு ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து, தியாகங்கள் செய்யவேண்டும் தெரியுமா!? `` என்றாள்
உண்மைதான், அந்த வேலை ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல என்பதனை, இரண்டு நாள்களுக்கு முன் எங்களின் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள, Touch Screen Monitor ஒன்றினை விளம்பரம் செய்ய, நேராக அந்த மாடலிங் நிறுவனமே இங்கே வந்திருந்தது, அங்கே விளம்பரப் புகைபடங்களுக்கு மாடல்கள் போஸ் கொடுத்ததைப்பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன், அந்தத் துறையின் இன்னல்களை.
காலையிலிருந்து மாலை வரை நடைப்பெற்றது விளம்பரப் புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள். மதிய உணவின் போது, உணவுகள் உள்ளேயே வழங்கப்பட்டதால், அந்த வேலைகளில் என் பங்குமிருப்பதால் எனக்கும் அன்று அங்கேயே உணவு வழங்கப்பட்டது. உணவை சுவைத்துக்கொண்டே அவர்களுடன் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
அதாவது, புகைப்படம் எடுக்கத் தயாராகும் போது, அந்த அழகிகளின் கால்களிலும் க்ரீம் மற்றும் பவுடுண்டேஷன் போடப்பட்டது. தலை முதல் கால்கள் வரை ஒப்பனைகள் போடப்பட்டது. வரும்போது சாதரணமாக வந்தவர்கள், ஒப்பனைகளுக்குப்பிறகு ரதிகளானார்கள். ஒரு அறையையே அவர்களின் ஒப்பனைகளுக்காக ஒதுக்கித்தந்திருந்தார்கள் எங்களின் நிறுவனத்தார்கள்.
அந்த அறையில், உடைகள் காலணிகள் என அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கே வந்து தான் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டார்கள். உடைகள் மிகவும் கச்சிதமான உடைகள்தான், ஆனால் காலணிகள் பல வர்ணத்தில் மிக உயரமானதாக இருந்தது. அநேகமாக மாடலிங் துறைக்கு, ஆடைகளின் அளவிற்குத் தகுந்தாட்போல் மாடல்கள் இருக்கவேண்டும் போலிருக்கிறது. அதனால்தான் எல்லா ஆடைகளும் எல்லோரும் போடும்படி இருந்தது. காலணிகளும் கூட.
அங்கே வந்தவர்களில், முகங்கள் மட்டும்தான் வேறு, மற்றபடி உடலமைப்பு, உயரமெல்லாம் ஒரே மாதிரி, ஒரே அளவுதான். (எந்த அளவுகோளின்படி தேர்ந்தெடுத்திருப்பார்களோ தெரியவில்லை!)
அதாவது மாடலிங் துறையில் ஈடுபடுபவர்களின் கால்கள் மிக அழகாக இருக்கவேண்டுமாம். உயரமாக இருந்து, அழகாக இருந்து, உடல் மெலிந்து, அழகான உடலமைப்பு இருந்தாலும் கால்கள் அழகாக இல்லையென்றால் மாடலிங் துறையிலிருந்து விலக்கப்படுவார்களாம்.
அலங்கரிக்கப்பட்ட பெண்கள், தயார் நிலையில் அந்த Monitor ரின் அருகில் வந்து நிற்கும்போது, ஒரு முழுமையான அழகு அவர்களிடம் தென்பட்டது.
நான் விசாரித்த போது எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களில், எம்மாதிரியான கால்களைக்கொண்டவர்கள் இந்த மாடலிங் துறைக்கு வரத்தகுதியற்றவர்கள் என்பதனைச் சொல்லி, அதையும் நிவர்த்தி செய்யலாம், சிறுவயதிலிருந்து சில உடற் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், என்பதனையும் சொன்னார்கள். (அதிகம் பேசவில்லை தான், இருப்பினும் அவர்களிடம் பேசியதிலிருந்து நான் உள்வாங்கியவை)
எம்மாதிரியான கால் வடிவங்களைக் கொண்டவர்கள் மாடலிங் துறையில் நுழைவது கஷடம் என்பதைப் பார்ப்போம்.
1. O Shape Legs
2. X Shape Legs
3. The leg with chubby ankles
4. Short legs
5. The leg with thick calves
6. The leg with cellulite
7. The leg with thick thighs
இவைகளை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டு, அதை நிவர்த்தி செய்ய சில வழிமுறைகளை பயிற்சிகளின் மூலம் விடாமல் கடைப்பிடித்து வந்தால், கால்கள் சரியான நிலைக்கு வரலாம், இந்த மாடலிங் துறையில் மின்னலாம்.
இவ்வளவு அழகாக இருப்பது, சில ஜடப்பொருள்களை விளம்பரம் செய்வதற்காகத்தான் என்பதுவே சுவாரஸ்யம் இங்கே.
very interesting field....