இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.
ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.
அதற்காக http://vallinam.com.my/version2/?p=789 தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்’ என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.
இருந்தபோதிலும் படைப்பு மண்டையைக் குடையவே ஆரம்பித்தது.நவீன் சொல்லியிருக்கின்ற கருத்துக்களை அனைத்தும் அருமை. அப்படிப்பார்க்கையில் ஒரு படைப்பாளியாகப்பட்டவன், நவீன் சொல்லியிருக்கின்ற அனைத்து இலக்கியங்களையும் வாசித்தாலேயொழிய தெரிந்திருந்தாலேயொழிய இக்கருத்தையொட்டிய செம்மையான படைப்பினை சீர்த்தூக்கிப் பார்த்து வழங்க இயலாது என்று சொன்னால் அது மிகையல்ல.
அப்படி எந்த ஒரு பரந்த வாசிப்பு அனுபவமும் இல்லாமல் இதுபோன்றதொரு கருவைத்தொட்டு படைப்பினைப் படைக்கப்படுகிறபோது அது வெறும் வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே பரிணமிக்குமே தவிர நுண்ணறிவு சமாச்சாரங்கள் அங்கே ஒருபோதும் இருக்காது. இக்கதையில் வரும் சில இடங்களின் சம்பவங்களில் எனது வாசிப்பு அனுபவமும் அப்படித்தான் இருந்தது.
ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.
எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்…
ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.
இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.