செவ்வாய், மார்ச் 05, 2013

மண்ணே உரமாக..

செடிகளுக்கு உரமிட்டேன்.

`என்ன செய்கிறாய் அக்கா, காலையிலேயே?’ கேட்டாள் வேலைக்காரி.

`உரமிடுகிறேன்..’

`அப்படியென்றால்?’

` பலவித கழிவுகளால் செய்யப்பட்ட பொருள் இது. சந்தையில் விற்பார்கள். ஒரு பாக்கெட் மூன்று ரிங்கிட் விதம்.. செடிகளுக்குப் போட்டால், செடிகள் செழிப்பாக வளரும்..’

`ஓ... எங்க ஊரில் (இந்தோனீசியாவில் ஒரு குக்கிராமம்) இப்படியெல்லாம் செய்யாமலேயே, செடிகள் செழிப்பாக வளரும்.’