பெண்ணியம் என்றால் என்ன?
பெண்ணியம் என்கிற சொல்லின் அசல் என்ன.? பெண் + இயம்? இயம்புதல் - பேசுதல்? ஆக, பெண்கள் பேசும் அனைத்தும் பெண்ணியம்?
பெண்ணியம் என்றால் FEMINISM ஆங்கிலத்தில்
பெண்ணியம் - பெண்களின் அர்ப்பணிப்பில் உள்ளதா, அல்லது அடக்குமுறையில் உள்ளதா?
பெண்ணியம் என்ற வார்த்தையைக்கேட்டவுடன் உடனே நினைவுக்கு வருபவர்கள் யார்? ஏன்?
பெண்ணியம் என்கிற சொல் என்னமாதிரியான உளவியல் மாற்றங்களை உங்களுக்குள் கொண்டு வருகிறது? (பெண்ணாக இருந்தால்)
பெண்ணியம் என்கிற சொல் என்னமாதிரியான உளவியல் மாற்றங்களை உங்களுக்குள் கொண்டு வருகிறது? (ஆணாக இருந்தால்)
பெண்ணியம் என்பது, மிக உயந்த நிலையில் தெளிந்த புரிதலோடு பேசப்படுகிற விஷயமாம், சில பெண்கள் சொல்கிறார்கள்? அப்படியா, சொல்லவே இல்லை? ஆச்சிரியமா இருக்கு!
பெண்ணியத்தை சரியாகப்புரிந்துக்கொள்ளாத பெண்கள், பெண்ணியம் பேசுகிறேன் என்று இன்னமும் பெண்ணுரிமை பற்றியே பேசுவது ?
பெண்ணியம் பற்றிபேசும் போது, பெண்ணுக்கு சம உரிமை இல்லை என்று சொல்வது சரியான கூற்றா, இன்றைய காலகட்டத்தில்?
பெண்ணிய உணர்வு என்பது, நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், கலாச்சாரத்திற்குக் காலாச்சாரம், வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றதென்பதை ஏற்றுக்கொள்ளலாமா?
பெண்ணியம் என்பது, இஷ்டம்போல் ஆட்டம்போடும் சுதந்திரத்தில் உள்ளதா?
குடும்பச் சிக்கல்களை சமாளிக்கத் திறனற்று, உடனே விவாகத்து செய்து விட்டு, மறுமணம் செய்துக்கொள்ள நினைப்பது, பெண்ணுரிமையா/பெண்ணியமா?
ஒரு சில ஆண்களின் சுயநலன்களுக்காகவும் சுய இச்சைகளுக்காகவும், சில இடங்களில் பெண்களின் சம்மதத்துடன், சம்பந்தப்பட்ட ஆண்களின் ஆயுதமாக இந்த பெண்ணியம் பயன்படுகிறதென்பதை ஏற்றுக் கொள்ளலாமா?
எல்லாமும் எல்லோருக்கும் சமம்; என்கிற இக்காலகட்டத்தில் பெண்ணியம் என்கிற ஆயுதம், சுய விளம்பரத்திற்காகவே பயன்படுகிறதென்று சொன்னால், பெண்ணியவாதிகளுக்குக் கோபம் வருமா?
பெண்ணியவாதிகளின் இலக்கியம் எனப்பட்டது, பெண்கள் படும் அவஸ்தைகளைத்தான் சொல்லவேண்டுமா?
பெண்கள் மூலமாக வெளிப்படும், ஆண்களை மட்டம் தட்டுகிற அனைத்து சமாச்சாரமும் பெண்ணியமா?
கணவனின் அர்ப்பணிப்பு, தந்தையின் அர்ப்பணிப்பு, சகோதரனின் அர்ப்பணிப்பு, நண்பனின் அர்ப்பணிப்புகளைப் பற்றி ஒரு பெண் எழுதினால், அது பெண்ணிய இலக்கியமாகப் பார்க்கப்படுவதில்லையே, ஏன்? முதலில், இலக்கியத்துறையில் இந்த பேதமே கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.
பெண்ணிய கூறுகளை இவ்வாறு பிரிக்கலாமா?
1.ஆண்களின் அடக்குமுறை
2.சமூதாயம் ஒரு பெண்ணின் மேல் ஏற்றிவைக்க நினைக்கும் சுமைகள்
3. சம உரிமை
4. சமயப்பெயரால் நடத்தப்படும் பெண் இழிவுகள்
5. பெண்களின்பால் நடத்தப்படும் பாலியல் வன்முறைகள்
6. ஆணாதிக்கத்தால் நடைபெறுகிற குடும்ப வன்முறைகள்
7. பணியிட சலுகைகளில் பால் பிரிவினைகளுக்குள் ஏற்படுகிற பாராபட்சம்
இன்னும் சொல்லலாம் -
பொதுவாக பெண்களைப்பற்றி பேசுகிற அனைத்தும் பெண்ணியம் தான். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படிச்சொல்லித்திரியும் பெண்குல மாணிக்கங்களின் உள்நோக்கமும் வெங்காயமும் ஒன்றே.
பெண்ணியம் என்கிற சொல், பரவலாக பலரால் தினமும் பேசப்பட்டாலும், அதன் உள் அர்த்தம் இன்னமும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் பேசப்படுகிறதென்பதுதான் நிஜம். அதிலும் கோபக்கனலைக்கக்கி, பெண்களை பெண்களே சாடுவதென்பது அதை விட கொடுமை.
பாரதியார் இன்னமும் இருந்திருந்தால்...???
பெண்ணியம் - பெண்ணின் இயல்பாக மாறவேண்டும் - அதுவே ஓஷோ சொல்லும் பெண்ணியம்.