வெள்ளி, டிசம்பர் 02, 2011

இப்படியுமா?

எங்களின் அலுவலகம், ஒரு சேல்ஸ் அண்ட் செர்வீஸ் செண்டர். அங்கு தினமும் பல விதமான மனிதர்கள் வருகை புரிவார்கள். ஒவ்வொருவரும் ஒரு விதம். பயங்கர காமெடியன்களையும் சந்திக்கலாம். இன்று ஒரு குடும்பம் (கணவன் மனைவி)  வந்திருந்தது.

தமது பழுதடைந்த பொருளை, பழுது பார்க்கக்கொடுத்து விட்டு, நான் இருக்கும் முன் பக்க அறைக்கு வந்து உட்கார்ந்துக்கொண்டார்கள்.

அங்கு தான் பல வசதிகள் இருக்கும், குடிக்க நீர், பெரிய தொலைகாட்சியில் சினிமா படம், நல்ல வசதியான சோஃபா செஃட்டுகள், பளிங்கு போல் பெரிய மேஜை, அதன் மேல் அலங்கரிக்கப்பட்ட பூ.. சுற்றுச்சுவரிலும் பெரிய பெரிய போஸ்டர்கள், அதன் உள் அழகான விளக்குகள்,  தலைவர்களின் புகைப்படங்கள் என மிக அழகாக, சுத்தமாக அதே வேளையில் சுகமான நறுமணத்துடன் (என் பெர்ஃப்யூம்)   மிகரம்மியமாக இருக்கும் அச்சூழல். அங்கே ஒரு விதமான அமைதி நிலவுவதால், அங்கு வந்து அமர்ந்துகொள்ள பலருக்குப்பிடிக்கும்.


அங்கே வி.ஐ.பிக்கள் அமர்ந்து சிறிய மீட்டிங் போட்டு பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்கிற பயிற்சியிற்குக் கூட என்னையும் என் சக ஊழியரையும் அனுப்பி வைத்திருக்கிறது எங்களின் நிறுவனம்.

அப்படியிருக்கையில், இன்று ஒரு தம்பதியர் அங்கே வந்து அமர்ந்துக்கொண்டு, சாப்பாட்டு நேரமாதலால், (லே கார்டன் ரேஞ்சுக்கு)அடுக்கடுக்காக உணவுகளை பதார்த்தங்களோடு கொண்டுவந்து,  அவைகளை அந்த பளிங்குபோன்ற மேஜையின் மேல் வைத்து, கையோடு கொண்டுவந்த துணி, பேக் முதலானவற்றை ஒரு ஓரமாக கடாசிவிட்டு, மங்கு, கரண்டி (சீனர்கள், உண்ணும் போது பயன்படுத்துபவை) போன்றவற்றை உருட்டிக்கொண்டு (க்லிங், மங்.. சொங்) என்கிற சத்தங்களோடு ஒரு விருந்தை நடத்திக்கொண்டிருந்தார்கள்..!!

இதை நான் கவனிக்க வில்லை. ஒரு முக்கியமான மெயில் அடித்தாகிய பிறகு அதனின் பிழைத்திருத்தங்களைச் சரி செய்துகொண்டிருந்தேன்.

@#%^& என்ன ஒரு மாதிரியான மூலிகை வாசம் வருகிறதே!?  என நான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தலையை உயர்த்தி எட்டிப்பார்த்தால்.. இருவரும் ‘’மச்சான் உனக்குக் கொஞ்சம், இந்தா புள்ள உனக்கும் கொஞ்சம்’’ என்கிற பாவனையில், பந்திபோஜனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பார்த்தவுடன் நடுங்கியே போனேன்.  பெரிய அதிகாரிகள் யாராவது தற்செயலாக கீழே வந்து, இக்காட்சியைக் காண நேர்ந்தால், என்ன ஆவறது, என் கதை.!?  கந்தல்தான் போங்க..

உடனே அவர்களிடம் சென்று,  ஆண்டி இது கண்டீன் அல்ல, இங்கு உணவுகள் உண்ணக்கூடாது, தயவுசெய்து அப்புரப்படுத்துங்கள். என்றேன். (கஸ்டமர்களிடம் பணிவாக பேசவேண்டும், பயிற்சியில் போதிக்கப்பட்டது(!) எவ்வளவு கோபமாக இருந்தாலும். )

என்னை மேலும் கீழும் நோக்கிய அந்தப் பெண்மணி, அவருக்கு உடம்பு சரியில்லை, வெளி உணவு உடம்பிற்கு ஆகாது, கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள், முடித்துவிடுகிறோம், என்றார்.

பிறகு என்ன செய்வது. காத்திருந்தேன். முடித்து விட்டு,  பாத்திரங்களையெல்லாம் ’கடமுடா, கடமுடா’ என்கிற சத்ததுடன் கழுவ எடுத்துச்சென்றார். அவன் குச்சியில் பற்களைக் குடைந்துக் கொண்டிருந்தான்.

அவள் பாத்திரங்களையெல்லாம் கழுவிக்கொண்டு வருவதற்குள் எனது பொறுமை சோதனைக்குள்ளானது, மணி சரியாக 12.45ஐ நெருங்கிக்கொண்டிருந்தது, எல்லா பெரிய `தலை’களும் கீழே இறங்கும் நேரமது, மனது திக் திக் என்றது. (திகில்).

அவள் ஆடி அசைந்து வந்தாள், முகத்தைக் கடு கடுவென வைத்துக்கொண்டு, சீக்கிரம் சுத்தம் செய்து கொடுக்க முடியுமா? என்று கொஞ்சம் எரிச்சலாக சத்தம் போட்டு விட்டேன்.  அந்த மேஜை முழுக்க அவர்களின் பொருட்கள் தான். எடுத்தாள், அடுக்கினாள், வைத்தாள் பேக்’கைத் தூக்குகிறாள்,,,,, மேலிருந்து எங்க அழகு மன்மத போஸ், மெதுவாகக் கீழே இறங்கி வந்தார்..

இடம் சுத்தமானது. ஆனாலும்... சி.சி.டீவியில் பார்த்திருப்பாரோ!!?  பார்த்தால் என்ன.! சோறு, மங்கு கரண்டி எல்லாம் தெரியாது, மனிதர்கள் மட்டுமே தெரிவார்கள், என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். !!

( ஆமாம், சீனர்கள் (சென் செயி) சமையலின் மணம் இருக்கே..வாயில் நீர்.. ஹம்ம்ம்ம் எனக்கும் கடுமையான பசி வந்து விட்டது)

4 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்,என்னவோன்னு நினச்சேன்???

    பதிலளிநீக்கு
  2. நல்ல வசன அமைப்பு ...................படித்தேன் ரசித்தேன் (@#%^& என்ன ஒரு மாதிரியான மூலிகை வாசம் ).........ரொம்ப பிடித்தது

    பதிலளிநீக்கு
  3. அதுதான் செங் செய்’யின் மணம்.. நன்றி ஜாபீர்

    பதிலளிநீக்கு