முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களின் நேர காலமில்லாமல் கொட்டமடித்து விட்டு, 24மணி நேரமும் ஸ்டேடஸ், கமெண்ட்ஸ், லைக்ஸ் என ஜாலம் காட்டிவிட்டு, ஊர்கதை பேசிவிட்டு, மணிக்கணக்காக வெட்டியா பொழுதைக் கழித்து விட்டு, ஜொள்ளு விட்டு, மயங்கி மொக்கையாக மாறி, போடுவதற்கு ஒன்றுமேயில்லாமல், யாராலோ முகத்திரை கிழிக்கப்பட்டு, தாம் நினைத்தபடி எதுவும் நடவாத போது, ஒரு வித விரக்தியின் விளிம்பிலும், வெறுப்பின் உச்சத்திலும் இருந்துகொண்டு விலகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தத்தளிக்கும் மனநோயாளிகள்...,
அங்கே நெட், வலைத்தளங்கள், பேஸ் புக், இணைய இதழ், குகூள் என, எதோ ஒரு உன்னதத் தேடலில் இருக்கும் நம்மைப் பார்த்து, அறிவுரை மழை பொழிதால், அரை விடனும் போல் இருக்குமா இல்லையா?
அறிவுரையோடு இருந்தாலும் பரவாயில்லை, என் கணவருக்குப் பிடிக்கவில்லை! மாமியாரைக் கவனிக்கனும்! பிள்ளைகள் தான் நமக்கு முக்கியம்! வீட்டு வேலைகள் செய்யாமல் பொம்பளைங்க இங்கேயே குடியாய் இருப்பதை நினைக்கும் போது அருவருப்புதான்! நான் உருப்படியான வருமானம் வரும் தேடலில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன்! பின்னல் தையல் என என்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன்! எதாவது தன்முனைப்புப் பயிற்சியில் என்னை நிரப்பிக்கொள்ளப்போகிறேன்..! மனிதனாகப் பிறந்தவர்கள் பயன் உள்ளவர்களாக வாழ்ந்துச் சாகவேண்டும்! வெற்றியைதேட வேண்டாம், அது உன் காலடியில் கிடக்கிறது!!!! (ஷப்ப்ப்பா) என் தத்துவமெல்லாம் சொன்னால் சும்மா விடலாமா?
எதோ ஒரு தன்முனைப்பு சொற்பொழிவில் கலந்துகொண்டு, மறுநாள் திடுத்திப்பென.. மந்திரிச்சு விட்ட மங்கம்மாக்களாய், புனித ஆத்மாக்களாய் மாறி, காலகாலமாக தன்னம்பிக்கையோடு இருப்பவர்களிடம், இதுபோன்ற அறிவுரைகளை வாரி வழங்க நினைத்தால், பாச்சா பலிக்குமா என்ன.!? பாவம், இல்லை..இல்லை பரிதாபப் பிறவிகள்.
சரி, பிடிக்கவில்லை, மனநெருடலைத்தருகிறது, போதும் பட்டதெல்லாம் இனி இது வேண்டாம், எல்லாம் நல்ல அனுபவம், இதுவும் வேணும் இன்னமும் வேணும், சருக்கல் எல்லாம் பாடமாக, வருங்காலத்தில் இந்தப் பாடம் நல்ல வழிகாட்டி, இருந்த வரை கொட்டம் கும்மி கொண்டாடம் என வெளிப்படையாகக் கூறி, ஏற்றுக்கொள்கிற பக்குவம் என்றுதான் வருமோ நம்ம பெண்களுக்கு?
இப்படிச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆரம்பத்தில் சுத்தமாக மறந்து விட்ட மாமி, கணவன், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள், ஆன்மிக வாழ்வு.. (எனக்கு இப்போதெல்லாம் கடுங்கோபத்தைத் தருவது, இந்த, நான் ஒரு ஆன்மிகவாதி, என்கிற வார்த்தையே, எனோ தெரியவில்லை) என எப்படி இப்படித்திடீரென பொங்கியவண்ணம்.. (டவுட்டு) . எல்லாம் ஒரு பாதுகாப்பிற்க்காகத்தான் எனபதுதான் நன்றாகத் தெரிகிறதே!. உணர்வுகளை அழகாக மறைத்துவிட்டோமென்று மகிழவேண்டாமே.. புரியும் ஒரு சிலருக்கு, நமது அறியாமை.
சிலர், சில பல வேளைகளில் விரக்தியின் விளிம்பில் இருப்பதற்கு இந்த அறியாமையே மூலக்காரணம். யார்தான் தவறு செய்யவில்லை? யார் தான் உத்தமர்கள்? யார் தான் திருட்டுத்தனம் செய்யவில்லை? யாரிடம்தான் கள்ளத்தனமில்லை? யார்தான் அவமானப்படவில்லை? யார் தான் ஹெங்கி பங்கி வேலைகளுக்கெல்லாம் ஆசைப் படவில்லை? யாருக்குத்தான் காதலில்லை? யாருக்குத்தான் காமமில்லை?? இப்படி இன்னும் பல யாருக்குத்தான்.. என, அடுக்கிக்கொண்டே போகலாம்...
உலகின் நிலை இப்படியாக இருக்கும் பட்சத்தில், ஏன் நாம் நமது உணர்வுகளுக்கு மட்டும் வர்ணம்பூசி, பூதக்கண்ணாடிக்கொண்டு பார்த்து, மனம் வெதும்பி புத்தராக மாற நினைத்து, போதனையில் பல்டி அடிக்கவேண்டும்?! அசிங்கமாக இல்லையா!? வெளியே வாங்கப்ப்பா செல்லங்களா.!
சொல் புத்தியும் இல்லாமல், சொந்த புத்தியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக இருந்தால், யார் காப்பாற்றுவது.!? எவ்வள்வு பெரிய குருவிடம் பயிற்சிப் பெற்றாலும், மாற முடியுமென்கிற நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி?.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக