புதன், டிசம்பர் 28, 2011

கோபம் இருக்கு

எனக்கும் கோபம் வரும்...

குதூகலித்து மகிழ்ச்சியாக
இருக்கும்
பக்கத்து வீட்டுக்காரர்
மீதும்..

என்னைப் பற்றி
இல்லாது பொல்லாதெல்லாம் பேசும்
மாமியார் நாத்தனார்
மீதும்..

புதுப்புடவை நகைகள்
வாங்கும்
கொழுந்தன் பொண்டாட்டி
மீதும்..

வைர மூக்குத்தி
வாங்கித்தர தாமதிக்கும்
கணவன் மீதும்..

சீரியலில் வரும்
கதாநாயகியைச் சூழ்ந்து
கொட்டமடிக்கும் வில்லிகளின்
மீதும்..

எனது அறிவுரைகளைக்
கேட்டுப் பின்பற்றாத
நண்பர்கள் மீதும்..

முகத்தைக் கருமையாக்கி
சுட்டெரிக்கும் சூரியன்
மீதும்..

ஷாப்பிங் செல்ல இயலாமல்
விடாது பெய்யும்
மழையின் மீதும்..

முகச் சுருக்கங்களையும்
நரைமுடியையும்
வெட்ட வெளிச்சமாகக் காட்டும்
என் கண்ணாடி
மீதும்..

என் வருகையின் போது
உடனே சிகப்பாகும்
சமிஃக்ஞை விளக்கின் (traffc lights)
மீதும்..

தெருவில் அசிங்கமாக
உலாவும் சொரிநாய்
மீதும்..

தலைக்கு மேல்
சதா கரையும் காகங்களின்
மீதும்..

போகிற போக்கில்
என் காலை மோதுகிற
மேஜை நாட்காலி
மீதும்..

தொலைப்பேசி அழைப்பில்
சொல்லப்படும் எண்களைக்
குறிந்து வைக்க
பேனா காகிதம் கிடைக்காத போது
உலகத்தின் மீதும்..

இயலாமையை மறைக்க
வார்த்தைகளைத் தேடி
தினறும் போது
தாய் மொழியின் மீதும்..

என்னை மட்டும்
வாழ்வைக்காமல்
சதா சோதிக்கும்
இறைவன் மீதும்..

உங்களின் ஆதரவு வேண்டி
நான் போடும் பதிவுகளை
கண்டுங்காணாமல் போகும்
உங்களின் மீதும்..

கடுங்கோபம் வரும்
எனக்கும்.....!!!!

நானும் எழுதலாம்..
படைப்பாளியாகலாம்..
எழுத்தாளர்களுக்குக் கோபம்
அவசியமென்கிறார் சுஜாதா.

(எழுதுவதற்குக் கோபம் வேண்டும், என்கிற சுஜாதவின் வரியைப் படித்தவுடன், நான் பட்டியலிட்ட எனது கோபங்கள் இவை..)1 கருத்து:

  1. இயலாமையை மறைக்க
    வார்த்தைகளைத் தேடி
    தினறும் போது
    தாய் மொழியின் மீதும்../// இது வரைக்கும் இந்த வரிகள் தான் அருமையாய் இருக்கு...வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு