எனது இன்றைய உணவு Shepherd Pie. என் தோழி செய்து அனுப்பியிருந்தாள்.
இதுவரையிலும் சாப்பிட்டதில்லை. இன்றுதான் முதல் முறையாக சாப்பிட்டுப்பார்த்தேன்.
அது ஆஸ்ரேலியாவின் ஏழைகளின் உணவாம். தோழிதான் சொன்னாள். ஆனால் இங்கு மலேசியாவில் அதன் விலை அதிகம். பொதுவாக வெஸ்டன் கஃப்பேக்களில் விற்கப்படும் உணவு அது.
“சாப்பிடல. தொலைச்சுப்புடுவேன் மவளே’’ என்கிற மிரட்டல் உத்தரவு வேறு.
மிக மிக ஆரோக்கியமான உணவு அது. ( எனக்குத்தான் பிடிக்கவில்லை. இறங்க மாட்டேன் என்கிறது). முதல் முறையாதலால் இந்த சிக்கல் போலும். பழகப்பழக சரியாயிடும்.
இதற்குத் தேவையான பொருட்கள்
கோழி இறைச்சியை எலும்பு இல்லாமல் பிரித்து, கொந்திகொள்ளவும்
பெரிய வெங்காயம் - நறுக்கிக்கொள்ளவும்
கொஞ்சம் சோளமாவு
மெஷ் பெட்டேட்டோ செய்ய:-
உருலைக்கிழங்கை கொஞ்சம் உப்புடன் நன்கு வேகவைத்து, மாவுபோல் இடித்துக்கொள்ளவும் (mash mixer) இருந்தால் இன்னும் சுலபமாம். கொஞ்சம் பட்டர் அல்லது பால் சுவைக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.
உப்பு,
ஆலிவ் ஆயில். (அதில் தான் எல்லா சமையலும் செய்வாள் என் தோழி)
செய்யும் முறை:-
சட்டியில் எண்ணெய் ஊற்றி
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும், பிறகு சோளமாவு. சோளமாவைப்போட்டவுடன் கொஞ்சம் கட்டியாக வரும் அப்போது கோழியையும் சேர்த்து கிண்ட வேண்டும், கோழியில் உள்ள நீர் வெளியாகி கட்டியான அந்த திரவத்தை மிருதுவாக்கும் அதனால் நீர் உற்றத்தேவையில்லை. லேசாக வெந்தவுடன் வெள்ளைமெளுகுத்தூள் தூவி ஆற விட்டு, மஷ் செய்த உருலைக்கிழங்கை அலுமினியம் தட்டில் வைத்து, இந்தக் கோழிக்கலவையை அதன் மேல் வைத்து, அந்த உருலைக்கிழங்கால் நாலாப்பகமும் மூடிவிடும் படி செய்து, அஃவனில் வைத்து, ஃப்ரௌனாக வரும் வரை கிரில்ல் செய்யவும். (ufff)
அஃவன் இல்லதவர்கள், அலுமினிய ஃபோயிலில்(foil) சுருட்டி, விறகு அடுப்பில் போடலாம்! (இது என் ஐடியா)
சுடச்சுட சாப்பிட அருமையாம், அதுவும் வெளியே மழை பெய்துக்கொண்டிருக்கும் போது, ஜன்னல் ஓரமாக அந்த மழையை ரசித்துக்கொண்டு ஒரு கருப்புக்காப்பியை சுவைத்த வண்ணமாக சாப்பிட்டால் சும்மா அப்படித்தான் இருக்குமாம் ( :P)
கவனத்தில் கொள்ளவும் இது ஏழைகளின் உணவு (ஐரோப்பாவில்)
shepherd - என்றால் ஆட்டிடையன், கால்நடை மேய்ப்பாளன் - ஏழை
pie - என்றால், ஒரு வகை உணவு.
shepherd pie என்றால் ஆட்டிடையன், கால்நடை மேய்ப்பாளன் உண்ணும் உணவு.
இதை நிறைய வழிகளில் செய்துப்பார்க்கலாம், நம்ம இட்லி பலமாதிரியாக மாறியது போல்.
எனக்குக்கிடைத்தது இந்த ஒரு குறிப்புதான். வேறுமாதிரி கிடைத்தாலும் தொடர்ந்து பகிரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக