தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு அற்புதமான மொழிமாற்றுச் சிறுகதையை பாராட்டி எழுதினேன், அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாசகர் என்னைத் திட்டித்தீர்த்தார் - அவருக்கு நான் எழுதிய கண்டனக் கடிதம்.
ரசனை என்பது தன்னால் வருவது, வற்புறுத்தி வருவதல்ல. ஈடுபாடு என்பது பிறர் சொல்லக் கேட்டு வருவதல்ல.
கலைகளில் ஈடுபாடு கொள்ளும்போது, நம்மையறியாமலேயே ஏதோ ஒன்று உள்ளுக்குள் மலர வேண்டும். கண்கள் அகல விரிய வேண்டும், உள் மனம் ஆஹா என்று சொல்வதை, இதயமும் லப்டப் லப்டப் என ஆமோதிக்க வேண்டும்.
ஒரு படைப்பிற்குச் சொந்தக்காரர், உள்ளூரா, வெளியூரா, பக்கத்து வீட்டுக்காரரா, தெரிந்தவரா, நெருங்கிய நண்பரா, வேண்டப்பட்டவரா, உறவுக்காரரா, நம்மை ஏற்கனவே புகழ்ந்து தள்ளியவரா, என்பதையெல்லாம் பார்த்து விட்டு விமர்சனம் செய்தால், நிச்சயம் அதில் ஒரு போலித்தனம் இருக்கும். அது இலக்கிய உலகிற்குச் சமாதி கட்டும் ஒரு செயற்கைச் செய்கை.
இதைப் பற்றி ஆசிரியர் கூட பல சந்தர்ப்பங்களில் தமது கேள்வி பதில் அங்கத்தில் வெளிப்படையான ஆதங்கத்தைச் சொல்லிய வண்ணமாக இருந்து வந்துள்ளார்..!
இன்னொரு கிறுக்குத்தனமான கேள்வியையும் அந்த வாசகர் நம் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதாவது ‘அயல் நாடுகளுக்குப் போய் சேருமா, உங்களின் இந்த ஆஹா ஓஹோ புராணம்?’ என்று.
நண்பரே, இலக்கிய விமர்சனம் என்பது சம்பந்தப்பட்ட படைப்பாளிகளுக்குப் போய் சேர்கிறதா என்பதை விட, அவை உங்களின் ஆழ்மனதை உலுக்கியதா என்பதுதான் இங்கே கேள்வி. பெரும்பாலான நமது விமர்சனங்களில் எதிர்ப்பார்ப்புகளே விஞ்சி நிற்பதால்தான், பலரால் வெளிப்படையான, உண்மையான, நேர்மையான விமர்சனங்களை நெற்றியில் அடித்தாற்போல் சொல்ல முடியாமல், பூசிமொழுகி வார்த்தை ஜாலம் செய்து கொண்டிருக்கின்றோம்.
உண்மைக்கு அரிதாரம் தேவையில்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எதையும் நன்கு ஆராயாமல் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும். உங்களுடைய ஆதங்கம் ஒரு குப்பை.
நன்றி தென்றல்.. 2007

இலக்கிய உலகிற்குச் சமாதி கட்டும் ஒரு செயற்கைச் செய்கை.
பதிலளிநீக்கு@சின்னப்பயல் :))) நன்றி
பதிலளிநீக்குநான் எப்போதும் உள்ளூர் எழுத்துகளை ஆதரிப்பதில்லையாம். அதான் கோபம் அவர்களுக்கு. இன்னமும் திட்டிக்கொண்டிருப்பார்கள், நான் தமிழ் நாட்டு எழுத்துகளைப் பாராட்டிப் பேசினால்..
பதிலளிநீக்கு