யாருக்கும் தெரியாமல் ஒருவரிடமும் சொல்லாமல் உனக்கும் தெரிவுபடுத்தாமல், உனக்கு ஒரு பரிசு வாங்கித்தர எண்ணியுள்ளேன். சரி,எப்படி யாருக்கும் தெரியாமல், இந்த வேலையைச் செய்வது?
கடைக்குச் செல்வேன், உனக்கு எது பிடிக்குமென்று எனக்குத் தெரியும் என்பதால், அதை எடுப்பேன் பணம் கொடுப்பேன். இது முழுக்க முழுக்க எனது கட்டுப்பாட்டில்தான். நான் உழைப்பதால் யாரிடமும் கையேந்தும் நிலை எனக்கு இருந்ததில்லை.
வாங்கி வந்தவுடன், அதை அழகாக பேக்கிங் செய்யவேண்டும்.! எப்படிச் செய்வது? வீட்டிலா? முடியுமா? மனம், சித்தம், புத்தி எல்லாம் இறைவனை நினைக்கவேண்டுமோ இல்லையோ, அவரையே நினைக்கவேண்டுமென்று நினைக்கிற ஒரு சர்வதிகாரியிடம் செல்லுபடியாகுமா நமது நியாயங்கள்.!?
ஒரு பெண்ணாக இருப்பதால், வேறொரு ஆணுக்கு அனுப்பப்படுகிற பரிசுப்பொருட்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிற குடும்ப உறுப்பினர்கள் கிடைக்கப்பெறுகிற அளவிற்கு பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா, நம் சமூகத்தில்? மூன்று முடிச்சு தாலிக்கயிறு தூக்குக் கயிறாய் மாறிவிடாதா.! அவருடைய பெண் தோழிகளுக்கு நான் எல்லாம் செய்ய வேண்டும், பெண் என்பதால் பெண் மூலமாக மறைமுக தூது அனுப்பலாம், திறந்த மனதோடு. செய்தும் உள்ளேன். ஆனால் எனக்கு என்று வரும் போது, அது அவலமாகும் அவமானமாகும்..!
சரி, அதையும் வெகு சாமர்த்தியமாக செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவள் தான் நான். எவ்வளவோ விஷயங்களை மறைத்து மறைத்து செய்தாகி விட்டது, இனி என்ன??
அடுத்தது என்ன? உனது முகவரி என்னிடமில்லை. கேட்கத் தோன்றவில்லை, இப்போது கூட உடனே உன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துக் கேட்கலாம் தான்.! கேட்டால், ஏன்? எதற்கு? என்பாய். திடீரென்று கேட்பதால் நான் என்னமோ உனக்கு வாங்கி அனுப்பப்போகிறேன் என்பதை நீ யூகிப்பாய், இதை ரகசியமாக வைத்திருக்க நினைக்கும் எனக்கு அதில் சுவாரஸ்யமில்லாமல் போய் விடுமே..! .
அடுத்த வாரம் என் தோழி ஒருவள், நீ வசிக்கும் இடத்திற்குத்தான் சுற்றுலா செல்லவிருக்கிறாள். எனக்குள் பொறி தட்டியது. அவளிடம் கொடுத்து விடலாமா? போஸ்டல் சார்ஜ் செலவு மிச்சம்...!
சில வேளைகளில், நாம் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை விட, அவற்றை நாம் அனுப்பிவைப்பதற்கு செய்யப்படுகிற செலவு அதிகமாகவே இருக்கும். அதற்கு அந்த அத்தியாவசியப் பொருட்களை இரண்டாக வாங்கி அனுப்பி விடலாம், நீண்ட நாள் நீ அதை உபயோகப்படுத்தி பயன்பெறலாம். நாடு விட்டு நாடு எடுத்துச்செல்லும் கடுகிற்குக்கூட அதிக விலை, போஸ்டல் சார்ஜில்.
சரி, அவளிடம் எப்படிச் சொல்வது?
அப்படியே அவளிடம் அதைக்கொடுத்து அனுப்பினாலும், அதை வாங்கிச் செல்ல, உனது சேவகனையல்லவா நான் தொடர்பு கொள்ளவேண்டும்! அவன் உடனே ஓடோடி வந்துவிடுவான் சேவகம் செய்ய, சர்ப்ரைஸ்சாக உன்னிடம் ஒப்படைப்பான், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால், இவள்...!!? எல்லாம் நல்லபடி நடக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, எதாவதொரு சந்தர்ப்பத்தில் நட்பில் சின்ன விரிசல் என்று வந்துவிட்டால், சமயம் பார்த்து போட்டுக்கொடுத்து விட்டால்..! அனுபவப்பட்டுள்ளேன்..
இங்கு தலை போகிற அளவிற்கு எந்தத் தவறும் நடக்கவில்லைதான், இருப்பினும் திரித்துக் கூறுகிற போது, என்னிடம் ஏன் ஒரு வார்த்தைச் சொல்லவில்லை? என்கிற அர்த்தமற்ற கேள்விக்கு எத்தனை ஆண்டுகள்தான் பதில் சொல்லிக்கொண்டிருப்பது!?
மேலும், அவள் எனக்குத்தோழிதான். அதற்கு முன்பு அவளின் கணவனும் இவருக்கு நல்ல நண்பர்.. எதாவதொரு சந்தர்ப்பத்தில் விஷயம் தெரியவந்தால், வில்லங்கமாகிவிடுமே.! மேலும் உன் சேவகனுக்கும் இதுபற்றி தெரிய வரும்போது, அது ரகசியமல்லவே....
உனக்கு ஒரு பரிசை வாங்கி வைத்துக்கொண்டு, நான் இப்படியெல்லாம் புலம்பிக்கொண்டு மனவுளைச்சலில் உழல்கிறேன், என்பது உனக்குத் தெரியவந்தால்.. நிச்சயமாக உனக்குக் கோபம் வரும். உன் கோபத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நான் உன்னிடம் கேட்டேனா? என்று கூட நீ சினங்கொள்வாய்.. உனது கோபம் என்னை சாகடிக்கும்.. வேண்டாம் சொல்ல மாட்டேன்.
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிய வேண்டுமென்றால், முகவரி கேட்டு போஸ்டல் மூலமாக அனுப்புவதுவே முறை. கொஞ்சம் செலவாகும், பரவாயில்லை, செலவை விட, மனவுளைச்சல் கொடியது.
எனக்கு உனது முகவரி வேண்டும்..

சகோ, பாலாவின் பக்கங்கள் மூலமாகதான் முதல் முறையாக தங்களது வலைக்கு வருகிறேன்..அதற்கு முதலில் மன்னிப்பு.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு சகோ, அருமையாக எழுதுகிறீர்கள்,,இனி நானும் தங்களது வாசகன்/மிக்க நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
@குமரன். எதுக்கு மன்னிப்பு எல்லாம்..? மலாய்’ல எனக்குப்பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇனி நானும் தங்களது வாசகன்// நானும் வாசகிதான்.
பாலாவின் பக்கங்கள் மூலமாகத்தான் நானும் உங்களைச் சந்தித்தேன் உடனே உங்களின் வலைப்பூவிற்குச் சென்றேன், வாசித்தேன். சில பதிவுகள் மட்டுமே இருந்தது. அதுவும் உலக சினிமா பற்றியதாகவே.
நீங்களும் மலேசியா தானா ?? இது தெரியாம போச்சே..வாழ்த்துக்கள்..மலேசியாவில் பதிவர்களை அதிகம் பார்த்தது இல்லை நான்..தங்களது எழுத்து தரம் வசீகரிக்ககூடிய வண்ணம் அமைந்துள்ளது..
பதிலளிநீக்குஎனக்கு சினிமா மீதான பார்வைகளும் ஆர்வங்களும் அதிகம்,,அதனை பதிவு செய்து நல்ல அறிமுகத்தை வழங்குவதே பிளாக் தொடங்கியதன் நோக்கம்..நன்றி.
மலேசியர்தான். முகநூல் நண்பர்களின் கைவண்ணத்தில் என் வலைப்பூ. எனக்கும் இதில் ஈடுபாடு இல்லைதான் ஆரம்பத்தில் பிறகு தான் புரிந்துக்கொண்டேன்,இது ஒரு அரிய நூல்நிலையம மற்றும் தகவல் பெட்டகமென்று. பிடித்துக்கொண்டேன்.
பதிலளிநீக்குமாணவப் பருவத்திலேயே இவ்வ்ளவு பக்குவம் குமரன் உங்களுக்கு அதுவும் 19வயதில். வாழ்த்துகள்
தங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள் என்னையும் வாழ்த்தியதில் மகிழ்கிறேன்..பதிவுலகம் தகவல் களஞ்சியம்..மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்களது இனிய பணி மென்மேலும் தொடரட்டும்.
@நன்றி
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு உங்கள் புதிய வாசகனாக தற்பொழுது என்னையும் அடையாளப்படுத்துகிறேன்
பதிலளிநீக்கு@சிட்டுக்குருவி நன்றி வருகைக்கு. பெரிய ஆளாக நிறைய பதிவுகள் எழுதிவிட்டு,எவ்வளவு தன்னடக்கம்.
பதிலளிநீக்குஇதை எந்த மாதிரிங்க எடுத்துக்கிறது, புலம்பலா? இல்லை ஆதங்கமா?
பதிலளிநீக்கு@பாலா வருடலான கோரிக்கை
பதிலளிநீக்கு