எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருப்பதைக் கண் கூடாகக் காணலாம். ஆனால் நகைச்சுவை செய்வதில் மட்டும் ஆண்கள் தான் முன்னிலையில்.
ஆண்களுடைய நகைச்சுவைகள் கவர்வதைப்போல் பெண்களின் நகைச்சுவைகள் கவர்வதில்லை. நகைச்சுவைப் படங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, பெண்களின் body language தான் சிரிக்கவைக்குமேயொழிய அவர்களின் வசனம் அவ்வளவாக சிரிக்கவைக்காது. அப்படியே அவர்களின் வசனம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும்,அது ஒரு ஆண் எழுதிய நகைச்சுவை வசனமாகத்தான் இருக்கும். குறிப்பாக மகளிர் மட்டும் திரைப்படம், ஊர்வசியின் போடி லங்குவேஜ் தான் காப்பாற்றியது அப்படத்தை.
மனோரமா கூட, நகைச்சுவையை விட நவரச நடிப்பில் தான் முத்திரை பதித்தார். மனோரமாவின் நகைச்சுவை அறவே பிடிக்காது எனக்கு.
கோவை சரளா சொல்லவே வேண்டாம், பேசுகிற பாணியே ரசிக்கமுடியாது. கணவனை எட்டி உதைத்து சிரிக்கவைப்பார்.
ஆனால் என்.எஸ்.கே, தங்கவேலு முதல் நாகேஷ், கவுண்டமணி, விவேக் வடிவேலு சந்தானம் வரை எப்போதுமே ஆண்கள் தான் இந்த நகைச்சுவைத் துறையில் மிளிர்கின்றனர்.
நகைச்சுவைக் கதைகள் என்று வரும்போது, தங்கவேலு எப்படிப்பண்ணினார், கவுண்டமணி சொன்னார் பாருங்க, நாகேஷ் இல்லேன்னா.. விவேக் என, சொல்லிச் சொல்லி சிரிப்போம் ஆனால் பெண்கள் பேசிய நகைச்சுவை வசனங்களை குறிப்பிட்டு யாருமே பேசுவதில்லை.. நான் கேள்விப்பட்டவரை.
நண்பர்கள் கூட; பல பெண்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆண்களாக இருப்பதற்கு இந்த நகைச்சுவை உணர்வுதான் முக்கிய காரணம். இந்த உணர்வு இல்லையென்றால் பெண்களை நெருங்கவே முடியாது. ஏன் இவளுக்கு ஆண்கள்தான் நிறைய நண்பர்க்ள் என் சிலர் நினைக்கலாம் .. எல்லாம் நகைச்சுவை உணர்வேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்! ஒரு பெண்ணிற்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்களேயென்றால் அவள் எப்போதும் சிரித்துக்கொண்டேதான் இருப்பாள். பெண்களின் இந்த ரசனை உணர்வை மெருகேற்றுவதற்காகவே சில ஆண்கள் தமது நகைச்சுவை உணர்வை அதிகமாக வளர்த்துக்கொள்வார்கள்.
ஆண்களின் நகைச்சுவை உணர்வின் மர்மத்தை ஆராயனும். எல்லா இனத்திலும் இதுதான்.!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக