புதன், ஏப்ரல் 25, 2012

தலைவலி போ(பே)ய்

தலைவலி தலைவலி
தினமும் தலைவலி
தலையில் எந்த பக்கம் வலி
என்பது கூட தெரியாமல்
ஒருபக்கம் இல்லையேல்
இருபக்கமும் வலி
நடுமண்டையிலும்..வலி

எட்டு என்ன, ஒன்பது மணிநேரம்
தூங்கிப்பார்த்தேன்
தலைவலி விட்டபாடில்லை

சும்மா கணினியை விரைக்காதே
அறிவுரை வழங்கப்பட்டது
ஒரு நாள் முழுக்க
கணினியையும் தொலைக்காட்சியையும் கூட
பார்க்கவேயில்லை
தலைவலி தலைவலி

பளிச் விளக்கு வெளிச்சம் கூட
தலைவலிதான்
ஆலோசனைகள் குவிந்தன
இருட்டில் கிடந்துப்பார்த்தேன்
குறைந்தபாடில்லை

அதிக உஷ்ணமும் ஒரு காரணம்
வெயில் படாமல் உள்ளே இருந்துப்பார்த்தேன்
தலைவலி விடவில்லை

குளிரால் கூட இருக்கலாம்
ஏர்கோண்ட் பயன்பாட்டைத் தவிர்த்தேன்
தலைவலி காலையிலும் மாலையிலும்
தொடர்ந்தபடியாக

காப்பி.. டீ.. மசாலா,காரம்
தூரவிலகினேன்
அப்பவும் தலைவலிதான்

இரைச்சல் கூட தலைவலியாம்
சத்தமில்லாத இடத்திலும்
பதுங்கிப்பார்த்தேன்
ம்ஹும் விட்டபாடில்லை

இரத்த கொதிப்பின் ஆரம்பமோ!?
உடனே முழுபரிசோதனைக்கு
சென்று வந்தேன்
எல்லாமே நார்மல்தான்.
தலைவலி மட்டும் அப்நார்மலாக..

இப்போ மூக்கின் மேல் ஒரு கண்ணாடி
தூரப்பார்வைக்கும்
கிட்டப்பார்வைக்கும் ஒரே லென்ஸில்

தலைவலி போய்
புருவத்தில் வலி
இமைகள் வலி
கண்ணின் கருவிழி வலி
கடவாய்ப்பல் வலி
கண்ணாடி அழுத்துகிற மூக்கில்
ஒருவித நெருடல் வலி
கண்ணாடியை பிடித்துக்கொள்கிற
காதுமடல்களின் பின்புறம் வலி
நெற்றிப்பொட்டில்
அருவருக்கும் ஒருவித வலி
பிடரியில் வலி
நடுமுதுகில் ஒருவித வலி
வாந்தி வருவதைப் போல்
வயிற்றிலும் வலி
நெஞ்சுவலி என
பலவித வலிகள்

இயற்கையே தேவலாம்...
தலைவலிபோல்



17 கருத்துகள்:

  1. SUVAIYAYANE NAGAICHUVAIMIKKE INTHE KAVITHAIYAI PADITHALE POTHUM.. THALAIVALIYELLAAM ODIPOGUM VIJAYA...DR.G.JOHNSON.

    பதிலளிநீக்கு
  2. Than noiku thaane marunthu endru valluvar sonnathu iuththan...UNGAL thslaivalikku matrunthu ungalidame ullathu........
    Dr.G.Johnson...

    பதிலளிநீக்கு
  3. அது என்ன மருந்து? மருத்துவருக்குத் தெரியாத மருந்து.!? :) வாசிப்பிற்கும் வருகைக்கும் நன்றி டாக்டர்

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு தலைவலியோடு.....தலைவலி சொல்லும் கவிதை....

    பதிலளிநீக்கு
  5. @மனசாட்சி... சகோ..இதைப்படித்தவுடன் உங்களுக்கு தலை வலிக்கவில்லையே!? :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவலியை பேய்ன்னு படித்ததும் என் வீட்டு மாகாராணி அம்மணி ஞாபகம் தான் வந்தது

      நீக்கு
    2. மனசாட்சி, எப்படி உங்கள மாதிரி, பின்னூட்டமிடுபவர்களுக்கு, அவர்களின் பின்னூட்டட்த்தின் கீழே பதில் சொல்வது.? :( நான் இன்னும் சரியாக இந்த ப்ளாக் பயன்பாட்டைக் கற்கவில்லை.

      நீக்கு
    3. அவுங்க தலைவலி நேரில் பார்த்தவன் ஆச்சே., தலைப்பும் விரிவான கவிதையும் அம்மணியுடன் ஷேர் பண்ணினேன் - ஆமான்னு சொன்னங்க

      நீக்கு
    4. பின்னுட்டத்துக்கு கீழே பதில் கொடுத்துள்ளீர்களே

      நீக்கு
    5. மனசாட்சி அப்படியா..சரி நன்றிங்க சகோ. சந்தோசம்

      நீக்கு
  6. IRUNOKKU IVALUNKANN ULLATHU ; ORUNOKKU
    NOINOKKUONDRU ANNOI MARUNTHU...KURAL 1091...
    Ivaludaiya mai theettiya kangalil ullathu iruvagaipatta nokkamagum; oru nokkam noi seiyum nokkam; matrondru annoyiku msarunthagum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேயப்பா.. குறள் விளக்கமெல்லாம் தூள். ஹஹஹ

      நீக்கு
    2. நன்றிங்க டாக்டர். தொடர் ஆதரவிற்கு

      நீக்கு
  7. இப்படித்தான் இருக்கிறான் மனிதன். ஒரு அசௌகரியத்தை போக்குவதாக நினைத்துக்கொண்டு, பல இன்னலகளை தருவித்துக்கொள்கிறார். சரியா புரிஞ்சுக்கிட்டேனா?

    பதிலளிநீக்கு
  8. சமத்து பாலா. அதே அதே. நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

    பதிலளிநீக்கு
  9. தலை வலி போய் திருகு வலி !!!!! ?????

    பதிலளிநீக்கு