இவர்கள்தான் எங்களைப்பெற்று வளர்த்த புண்ணியவான்கள்.
தாய், அமிர்தம் பிள்ளை, தந்தை காளியண்ணன்@ காளிமுத்து.
இவர்களின் திருமணம் வெகுவிமர்சையாகவே நடைப்பெற்றது. அம்மா அணிந்திருக்கும் இந்தப் புடவை அப்போதே அதிக விலையாம். அப்பா இறக்கும்வரை பத்திரமாக வைத்திருந்து, அவருடனேயே அனுப்பி வைத்தார். எங்கள் கண்பட அந்த புடவை அவரின் பிரேதத்தில் போர்த்தப்பட்டது.
திருமணம் செய்யும் போது, அம்மாவிற்கு வயது பதினாறு. முகத்தைப்பாருங்கள் (ஆமாம், எங்களுக்கு வேற வேலையில்லையா’ன்னு கேட்கப்படாது) பால் வடியும் முகம். அப்பாவிற்கு வயது இருபத்தியேழு. ஆ..பொண்ணு மைனர்.. பதினோரு வயது வித்தியாசத்தில், சின்ன பொண்ணை.. ! அப்பா படித்தவர். அப்போதே மலேசியாவில் பிரபலமான ஒரு கம்பனியில் டிரைவர் வேலையில் இருந்தவர். ஓரளவு படித்தவர்களுக்குத்தான் அங்கே வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளம் ஆனாலும் பணக்காரர்களாக முடியாத வறுமைதான்.
ada..
பதிலளிநீக்குஎன்ன ஆச்சிரியம்.. நன்றி
நீக்குஆமாம்,அதுவும் அப்பா படு ஹேண்ட்சம்!
பதிலளிநீக்குஉலகம் தெரியா பெண்ணாக அம்மா..
நீக்குஅழகான போட்டோ.
பதிலளிநீக்குபாதுகாப்பாக வைத்திருங்கள்.
நிச்சயமாக சே.குமார். பாதுகாத்து வைத்திருக்கின்றோம். நிறைய படங்கள் காணாமல் போய்விட்டது. வருத்தப்படுகின்றோம் ஏன் முறையாக பாதுகாக்கவில்லை என்று. நன்றி
நீக்குகருப்பு வெள்ளை புகைப்படம் கண்களை அள்ளுகிறது.
பதிலளிநீக்குஎன்னிடமும் இதுபோன்ற என் பெற்றோரின் பழைய கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று உள்ளது. அதை எப்போதும் என்னுடனேயே வைத்திருப்பேன் .. :)
சகோ, இதை தங்கை, போனில் ஸ்னப் செய்துள்ளார். நேரில் பார்த்தால், இன்னும் தெளிவாக அழகாக இருக்கும். ஃப்ரேம் போட்ட பெரிய புகைப்படம். சிறிய புகைப்படம்தான், நவீன தொழில் நுட்பத்தால், பெரிதாக்கி மீண்டும் புதுப்பித்து வைத்திருக்கின்றோம். உங்க பெற்றோரும் கருப்பு வெள்ளை காலம் தானா! மகிழ்ச்சி.
நீக்கு