ஞாயிறு, ஜூலை 29, 2012

பற்றுதல்கள்

சிலர்
வாசனைப்பொருட்களின் மீது பைத்தியமாக இருப்பார்கள்
நமக்கு அருமையான மணம் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
செடிகளின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குப் பூக்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
சாமி பைத்தியமாக இருப்பார்கள்
கோவிலுக்குச்செல்லும் போதெல்லாம் நமக்கும் பிரசாதம் வீடு தேடி சுலபமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
உணவுப் பதார்த்தங்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்..
நமக்கு அதில் பாதி பலகாரங்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
துணிமணி ஆடை அணிகலன்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்.
அவகளால்தான் ஏழைகளுக்கு இலவசமாக விலையுயர்ந்த ஆடைகள் கிடைக்கின்றன.

சிலர்
எழுத்துப்பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குக் கருத்துகள் எல்லாம் இலவசமாகக் உடனே கிடைத்து விடும்.

எதிலாவது பைத்தியமாக இருக்கனும், அப்போதுதான் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

பைத்தியங்கள் தான் நல்லவர்கள்.
பற்றுப் பைத்தியங்களை கிண்டல் கேலி செய்யாதீர்கள் அவர்களால்தான் பலர் வாழ்கிறார்கள்.

இப்படிக்கு,
window shopper
விஜி.

6 கருத்துகள்:

  1. சகோ நன்றி
    ஏன்ன்னு விளக்கம் வேணாமுன்னு....ம்,

    பைத்தியங்கள் தான் நல்லவர்கள் கரைக்ட்டா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் உள்ளது, நீங்கள் சொன்னதால் இங்கே கொண்டுவந்தேன்.. :) நன்றி சகோ

      நீக்கு
  2. ---
    சிலர்
    எழுத்துப்பைத்தியமாக இருப்பார்கள்
    நமக்குக் கருத்துகள் எல்லாம் இலவசமாகக் உடனே கிடைத்து விடும்.
    ---

    அருமையான சிந்தனை!

    பதிலளிநீக்கு
  3. எதிலாவது பைத்தியமாக இருக்கனும், அப்போதுதான் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

    பைத்தியங்கள் தான் நல்லவர்கள்.
    பற்றுப் பைத்தியங்களை கிண்டல் கேலி செய்யாதீர்கள் அவர்களால்தான் பலர் வாழ்கிறார்கள்//

    இதைப் படிக்கும் பதிவர்கள் எல்லாம்
    காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்
    தொடர் சிந்தனை பிரமிப்பூட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இதைப் படிக்கும் பதிவர்கள் எல்லாம்
    காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்
    தொடர் சிந்தனை பிரமிப்பூட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு