ஒரு முக்கோணம்
அதன் நடுவில் ஒற்றைக்கண்
கண் அசைந்து அசைந்து சவப்பெட்டியாகிறது
பெட்டியில் உள்ளே பிணம்
பிணம் எழுந்து நடக்கின்றது
அதை சிலர் துரத்துகின்றனர்
துரத்துபவர்கள் புள்ளிபோன்ற மனிதர்கள்
புழுக்கள் போல் நகர்கின்றனர்
ஓடுகிற பிணம் சக்கரமாகிறது
சக்கரம் வேகமாகச் சுழல்கிறது
நட்சத்திரங்களாகிறது
பிறகு சிதறி தூள் தூளாகிறது
ஒளிகள் கண்களைக் கூசச்செய்கின்றன
எல்லாமும் ஒன்றாகக் கலக்கின்றன
சிகப்பு மஞ்சள் என மாறி மாறி
அதன் பின் வெடிப்புகள் நிகழ்கின்றன
எல்லாம் மறைகின்றன
பிறகு நிசப்தம்
எங்கும் அமைதி
ஒன்றுமில்லா மஞ்சள் வானம்
அதில், அங்கே......!!!
என்னமோ தோன்ற.!?
கண்களும் திறந்துக்கொள்கின்றன
கண்முன்னே நிகழ்காலம்
அதன் நடுவில் ஒற்றைக்கண்
கண் அசைந்து அசைந்து சவப்பெட்டியாகிறது
பெட்டியில் உள்ளே பிணம்
பிணம் எழுந்து நடக்கின்றது
அதை சிலர் துரத்துகின்றனர்
துரத்துபவர்கள் புள்ளிபோன்ற மனிதர்கள்
புழுக்கள் போல் நகர்கின்றனர்
ஓடுகிற பிணம் சக்கரமாகிறது
சக்கரம் வேகமாகச் சுழல்கிறது
நட்சத்திரங்களாகிறது
பிறகு சிதறி தூள் தூளாகிறது
ஒளிகள் கண்களைக் கூசச்செய்கின்றன
எல்லாமும் ஒன்றாகக் கலக்கின்றன
சிகப்பு மஞ்சள் என மாறி மாறி
அதன் பின் வெடிப்புகள் நிகழ்கின்றன
எல்லாம் மறைகின்றன
பிறகு நிசப்தம்
எங்கும் அமைதி
ஒன்றுமில்லா மஞ்சள் வானம்
அதில், அங்கே......!!!
என்னமோ தோன்ற.!?
கண்களும் திறந்துக்கொள்கின்றன
கண்முன்னே நிகழ்காலம்
அருமை.#அதில், அங்கே......!!!
பதிலளிநீக்குஎன்னமோ தோன்ற.!?
கண்களும் திறந்துக்கொள்கின்றன
கண்முன்னே நிகழ்காலம்#
வலை மகுடமும் அருமை.#உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'#
சிறப்பான aakkam kanavu l karppanaiviriththu pookkalaay malarkirathu manam parappattum ......
பதிலளிநீக்குஅருமையான ஆக்கம்!
பதிலளிநீக்குவாழ்த்துகள்!!
பதிலளிநீக்கு