ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

விளங்குமா இலக்கிய உலகம்..


எங்க ஊர் பத்திரிகைகளை இப்போதுதான் படித்து முடித்தேன்.

சென்ற வாரப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு போட்டிக்கதை - காப்பி என்று நாடு முழுக்க உள்ள வாசகர்களால் நிறுபனமாகி விட்டது. readers digest யில் வந்த பிரபலமான உண்மைக் கதை அது.

கதை தேர்வுக்குழு அக்கதையை, போட்டியில் இருந்து நிராகரித்தும் விட்டார்கள். ஸ்டோரி ஓவர். ஆனால் இன்று பத்திரிகையில் ஒரு பிரபலமான, தமிழில் பாண்டித்துவம் வாய்ந்த ஒரு பட்டதாரி ஆசிரியை, பிரபல எழுத்தாளரும் கூட, கேள்விக் கேட்கிறார் இப்படி...!

*இந்த கதை இப்படி ஒரு குற்றச்சாற்றிற்குப் பலியாகுமென்று நான் நினைக்கவேயில்லை.

*இதை குறை கூறிய வாசகர்களின் கருத்து அபத்தமானது.

*ஒரு கருவைக்கொண்டு எத்தனை சினிமா பாடல்கள் வருகின்றன! அவற்றையெல்லாம் தழுவல் என்று சொன்னால், சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

*ஆதாரமற்ற நிலையில் விசாரிக்காமல் தீர்ப்பு கூறுவது நியாயத்திற்கும் தர்மத்திற்கும் ஏற்புடையதல்ல.

*மேலும் அக்கதையை எழுதியவர் சாமனியமானவர் அல்ல. அவர் ஒரு முனைவர், குறிப்பாக மலாய் மொழி இலக்கியத்துறையில் பி.எச்.டி பட்டதாரி. இரண்டு மொழிகள், மலாய் மற்றும் தமிழ் சிறுகதைகளை ஆய்வு செய்பவர். அவர் நிறைய போட்டிகளில் பரிசும் பெற்றவர். ஆக அவரின் சிறுகதை தழுவல் என்பது நியாயமற்ற குற்றச்சாட்டு.

*அவர் எழுதிய அக்கதை முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. காரின் எண்களும் நிஜமே.

*ஒரு கதையை ஒரே கோணத்தில் விமர்சிப்பவர்கள் பலர். ஆனால் படைப்பாளிகள் அப்படியல்ல. ஒரு கருவில் பலதரப்பட்ட கதைகளை உருவாக்கும் வல்லமை பெற்றவர்கள்.

*ஆக, அவரின் கதை தழுவலாக இருக்கவே முடியாது...!

மலேசியாவில் இலக்கியம் வளருமா? `பிரபல’ முத்திரை குத்தப்பட்ட எழுத்தாளர்கள்/இலக்கியவாதிகள் செய்யும் கூத்துகளால்?

Kumaresan Asak 
வாழ்க்கையின் தழுவல்தான் இலக்கியம். வாழ்க்கையின் ஒரு கூறாகவும் இலக்கியம் இருக்கிறது. ஆகவே, வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து ஒரு படைப்பு உருவாவதைப் போல ஒரு இலக்கியப் படைப்பின் தாக்கத்திலிருந்தும் இன்னொரு படைப்பு உருவாக முடியும். ஆனால் அது அப்படிப்
பட்ட தாக்கத்தின் விளைவாக இருக்க வேண்டுமேயன்றி அப்படியே சுட்டு, பெயர்களையும் நிகழிடத்தையும் மட்டும் மாற்றி, சில சொல்லாடல்களை செருகி, தனது சொந்தச் சரக்காகத் தருவது மோசடி. நீங்கள் குறிப்பிடுகிற கதை எப்படிப்பட்டது? படித்ததன் தாக்கத்தில் வந்ததா? படித்ததைத் தூக்கிக்கொண்டு வந்ததா?  (தீக்கதிர் -  குமரேசன் அசக்)

 

அவருக்கு நான் கொடுத்த பதில்.


நன்றி சார் கருத்திட்டமைக்கு. ஒரு பக்க கதையை அவர் பாணியில் மிக அழகாக மற்றி இறுதியில் அப்படியே காப்பி. அந்த கதையில் பெண் குழந்தை.இந்த கதையில் ஆண் குழந்தை. அதான் வித்தியாசம். கதையைக் கொண்டு சென்ற விதம் அற்புதம். பாரட்டலாம். மொழி முனைவராச்சே எழுத்துக்கலைக்குச் சொல்லவா வேண்டும்.! 






4 கருத்துகள்:

  1. இதுதான் இன்று பல படைப்புகள் பேசப்படாமைக்கா ன வருத்தமான காரணம்....என்ன செய்ய சொந்தமே!!இதுவும் ஒரு வகை இருண்ட காலமே!வாழ்த்துக்கள் பதிவிற்காய்.சந்திப்போம்.

    எனக்கொரு பதில்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிசயா. இலக்கியவாதி போராளிபோல், வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக இருக்கவேண்டும், ஆனால் இங்கே பூசிமொழுகல் ஜாஸ்தி.

      நீக்கு
  2. விஜி உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு.ஒரூ மாதிரி சிந்தனை சிலருக்கு வர வாய்ப்புண்டு.சிவாஜி இறந்தவுடன் ,திரை திலகமிழந்து விட்டது என்று நான் எழுதினேன்.டிவி பேட்டியில் அதையே அபுதுல் ரஹ்மான் சொன்னார். பாடகர் எஸ்.பி.பாலாவும் அதே வார்த்தையைப் பயன் படுத்தினார். இப்படி பல முறை நடந்திருக்கிறது. அவசரப்படுதல் ஒரு வகை அறிவீனம்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சார். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

      நீக்கு