வியாழன், ஆகஸ்ட் 16, 2012

மனிதவெடிகுண்டு..

பேசும் போது
வார்த்தைகளை
விழுங்கிவிடுகின்றேன்

எழுதும்போதும்
சொற்களின் இடையே
சூறாவளிதான்

உணர்வுகளை
மறைத்து மறைத்து
பழகிப்போச்சு

உள்ளே காத்திருக்கின்றது
தனலாய்
ஒரு எரிமலை

6 கருத்துகள்:

 1. அனைவருக்குள்ளும்
  உங்களுக்குச் சொல்லத் தெரிந்திருக்கிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐய்யா. உங்களின் வருகையே பேருவகை.

   நீக்கு
 2. //உனது மனதில் வருவது எதுவாயினும் எழுது, நேர்மையுடன்//

  //உணர்வுகளை மறைத்து மறைத்து பழகிப்போச்சு //

  தலைப்பில் உள்ள வரிகள் உங்களுக்கில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளே காத்திருக்கின்றது
   தனலாய்
   ஒரு எரிமலை// உள்ளே என்பது மனதுதானே.! அது வெடிக்கும் நேர்மையாய்.
   நன்றிங்க.. :)

   நீக்கு