திங்கள், அக்டோபர் 01, 2012

கவர்ந்த குட்டிக்கதை - படித்ததில் பிடித்தது

தலைப்பு : உலகத்திலேயே மிகவும் வேகமானது எது???
உலகப் பிரசித்திப்பெற்ற நிறுவனம் ஒன்றில் மிகவும் கௌரவமிக்க வேலை ஒன்று
காலியாக இருந்தது.  பலர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் சிலரை ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்கு நேரடி பேட்டிக்கு
வரும்படி அழைத்திருந்தது அந்த நிறுவனம்.

அவர்களில் நால்வர் மிகச்சிறந்தவர்களாகக் காணப்பட்டனர்.  நால்வரும்,
பல்கலைக்கழகப் பட்டதாரிகள்அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில்
அந்த நிறுவன அதிபருக்குக் குழப்பம்.

"
போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்கிறோம், பிரிதொரு நாளில் இறுதிப் பேட்டிக்கு வாருங்கள்" என்று கூறி அந்த நால்வரையும் அனுப்பி வைத்தார்.
வேறொரு தேதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டிக்கு அந்த நால்வரும் வந்தனர்.
அவர்களுடன் இரவு உணவில் கலந்துகொண்ட நிறுவன அதிபர், "நீங்கள் நால்வரும் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள்; முடிந்தால் உங்கள் அனைவரையுமே வேலைக்கு அமர்த்திக்கொள்ள ஆவலாக உள்ளேன்.  ஆனால், உங்கள் தகுதிக்குரிய வேறு வேலைகள் காலியில்லைஆகவே, இந்த கௌரவமிக்கப் பதவிக்கு உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாளை காலையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன்.  அதில் யார் சிறந்த பதிலைக் கூறுகிறீர்களோ, அவருக்கே அந்த வேலை" என்று கூறிச்சென்றார்.
மறுநாள் காலை பேட்டி ஆரம்பமானது.
முதல் நபரிடம், "உலகிலேயே மிகவும் வேகமானது எது?" என்று கேட்டார் அதிபர்.

"
நொடிப்பொழுதில் வந்துபோகும் சிந்தனை" என்றார்.
இரண்டாமவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் அதிபர்.

"
இமைகளை மூடித்திறப்பது" என்றார் அவர்.
மூன்றாவது நபரிடமும் அதே கேள்வி.

"
மின்சாரம்தான் உலகிலேயே வேகமானதுஇங்கிருந்து விசையைத் தட்டினால் அந்த நொடியில் பல மைல்களுக்கு அப்பால் உள்ள விளக்கு எரிகிறது" என்றார்.

"
ஓ நல்ல பதில்" பாராட்டினார் அதிபர். இப்பொழுது நான்காவது நபர்.

"
வயிற்றுப் போக்கு, அதாவது பேதி" என்றார் பீதியுடன்.
பதில் கேட்டு முகம் சுளித்த அதிபர், "எப்படி?" என்றார்.

"
நேற்று இரவு உணவுக்குப்பின் அறையில் படுத்திருந்தேன்என் வாழ்நாளில் என்றுமே ஏற்படாத வயிற்றுக் கலக்கல் ஏற்பட்டதுகழிவறைக்குப்போக நான் 'சிந்திப்பதற்குள்'...
'
இமைகளை மூடித்திறப்பதற்குள்'... 'விளக்கின் விசையைத் தட்டுவதற்குள்'... ... சோரி... அங்கேயே பேதியாகிவிட்டது!"
அந்த நான்காவது நபர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.


                        ***
முற்றும்***
 எழுதியவர் : பாலகோபாலன் நம்பியார்.


4 கருத்துகள்:

  1. இயல்பு நடையில் அழகிய கதை பகிர்வு விஜி....

    நேர்முகத்தேர்வு நிமிடங்களில் நடந்து வேலை கிடைத்துவிட்டால் கிடைத்த வேலையில் ஒரு திருப்தி இருக்காது என்றும்... வேலைக்கு அமர்த்தியப்பின் அவருடைய குணாதிசயங்கள் மாறினால் வேலைக்கு பிரச்சனை என்பதாலும்.... வேலைக்கு இண்டர்வ்யூ எடுத்தவர்களை தங்கவைத்து அதுவும் மிக வசதியாக....

    கடைசி நாள் கேட்ட கேள்விக்கு எல்லோரும் தனக்கு தோன்றிய பதில்கள் கூறினாலும்... இயல்பாய் எதார்த்தமாய் அமைந்த பதிலுக்கே முன்னுரிமை தரப்பட்டு செலக்டும் ஆயாச்சு பீதி கிளப்பின நபரே....

    அருமையான கதை பகிர்வுப்பா.. அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழி. வருக புதிய நட்பே. இந்த கதைக்குச்சொந்தக்காரரிடம் உங்களின் புகழ்மாலையை சமர்ப்பித்து விட்டேன். அவருக்கும் மகிழ்ச்சியே. மலேசிய மண்ணின் ஓர் அற்புத படைப்பாளி இவர். பாலகோபாலன் நம்பியார். எனக்கு இவரிடம் பிடித்தது, பரந்த வாசிப்பனுபவமே. எல்லா மொழியிலும் வாசிப்பனுபவம் மிக்க ஓர் உன்னத படைப்பாளி.
    நன்றி தோழி மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
  3. உண்மையை சொன்னதால் அவருக்கு வேலை...

    நல்ல கதை... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. பாலகோபாலன் நம்பியார்10/03/2012

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை விஜி; இப்படி மிதமான நகைச்சுவையுடன் கூடிய எனது ஒரு குட்டிக்கதைக்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டீர்களே!!! மேலும் 'மஞ்சுபாஷிணி' அவர்களிடம் ஒரு புகழ்ச்சி வேறு. ஐயகோ! (நீங்களும் நிறையவே படிப்பவர்தானே விஜி! எழுதுவதைவிட பலமொழிகளில் வந்த, வந்துகொண்டிருக்கும் நூல்களைப்படிப்பதில் உள்ள சுகமே தனி அல்லவா?)

    பதிலளிநீக்கு