புழு நெளியும் ரவையில்
புதிய உப்புமாவா?
வண்டு மொய்க்கும் அரிசியில்
ஆத்தாவுக்கு கூழ்..?
காம்புகள் காய்ந்த
கனிகள் என்ன
பறி(ழ)க்கப்படாததோ?
நுணி உடையா
வெண்டை
பிஞ்சாகுமா?
தேன் தீர்ந்த மலரில்
இன்னும் என்ன இருக்கு
உதிரும் இதழ்களைத்தவிர..!?
புகைப்போட்ட கனியின்
சுவையும் ருசியும்
நம்(பிக்)கையில் இல்லை
செவுல் கறுத்த செத்த மீன்
கடல் நீரை
முத்தமிட்டு நாளாகியிருக்கலாம்..
களையிழந்த கண்களையாவது
பதுக்கி வை
ஒளியற்ற ரகசியங்களை
வெளியே சொல்கின்றன..
புதிய உப்புமாவா?
வண்டு மொய்க்கும் அரிசியில்
ஆத்தாவுக்கு கூழ்..?
காம்புகள் காய்ந்த
கனிகள் என்ன
பறி(ழ)க்கப்படாததோ?
நுணி உடையா
வெண்டை
பிஞ்சாகுமா?
தேன் தீர்ந்த மலரில்
இன்னும் என்ன இருக்கு
உதிரும் இதழ்களைத்தவிர..!?
புகைப்போட்ட கனியின்
சுவையும் ருசியும்
நம்(பிக்)கையில் இல்லை
செவுல் கறுத்த செத்த மீன்
கடல் நீரை
முத்தமிட்டு நாளாகியிருக்கலாம்..
களையிழந்த கண்களையாவது
பதுக்கி வை
ஒளியற்ற ரகசியங்களை
வெளியே சொல்கின்றன..
நல்ல கவிதை....
பதிலளிநீக்குவாசிப்பிற்கும் வருகைக்கும் நன்றி சார்.
நீக்குநன்றி சே.குமார்
பதிலளிநீக்குஅருமையாக முடித்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குநன்றி...
நன்றி திண்டுக்கல் தனபாலன்
நீக்குகலக்கிடீங்க
பதிலளிநீக்குநன்றி அரசு..முத்தரசு.
நீக்கு'வெறுத்தொதுக்காமல்
பதிலளிநீக்குகண்களால்
அல்ல முடிந்தது!'.
வணக்கம், என்ன சொல்றீங்க சார்? நன்றி
நீக்கு