இன்று, குடும்ப சகிதம் முறுக்கு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். நான் அடுப்படியில்.. மகளும் அவரும் பிழிவார்கள். மகன் அடுப்படியில் வெந்துக்கொண்டிருக்கும் என்னிடம் தட்டில் பேப்பரில் பிழிந்து அடுக்கியுள்ளவைகளைக் கொண்டுவந்து கொடுப்பார், பல வருடங்களாக இதுதான் ரூட்டின்.
மாவு முடியும் தருவாயில், கடைசி மாவில் அவனின் பெயரைப் பிழிந்து எழுதி, அதைப் பொரிச்சு கொடுக்கச்சொல்லி அடம் பிடிப்பான். இது வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு..
அவர்களின் வேலையை விரைவாக முடித்து, எல்லாவற்றையும் பிழிந்து கொடுத்துவிட்டு, டி.வி முன் சென்று சாய்ந்துக்கொண்டார்கள் மூவரும். நான் அடுப்படியில் இன்னமும்..... பொரித்துக்கொண்டே வரும்போது, பிழிந்து வைத்திருந்த மாவுகளின் வரிசையில் இந்த வருடமும் SU இருக்கு. அவனின் பெயரில் முதல் எழுத்து. வயது பதினெட்டு...இன்னமுமா?
எத்தனை வருடமானால் பாசமும்
பதிலளிநீக்குஅன்பும் குறைந்தா போகும் ?
சிறிய பதிவாயினும் என்னுள்ளும்
இதுபோன்ற சிறுச்சிறு அன்னியோன்ய நினைவுகளை
கிளறிச் சென்ற சீரிய பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சார்... தொடர் ஆதரவிற்கு மகிழ்ச்சியே.
நீக்குRamani annavin karuththu unmai. Padhivu sinnadhaaga irundhaalum karuththu aalamaanadhu. Vaalththukkal ullame. Pls visit my site: http://newsigaram.blogspot.com
பதிலளிநீக்குநன்றி பாரதி. நிச்சயமாக சென்று காண்கிறேன்.
நீக்கு