வியாழன், ஜனவரி 24, 2013

மணி என்ன?

"மணி என்ன?"
"காலை ஆறு.."
"ஓ.. இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் .. குளிக்கலாம்."

"மணி என்ன?"
"காலை ஒன்பது.."
"என்ன இப்போதான் ஒன்பதா? பசியாறி ரொம்ப நேரமானதுபோல் இருக்கே..!! "

"மணி என்ன?"
"ஒன்பதரை..!"
"என்ன எப்போவோ..ஒன்பதுன்ன..!! இப்பதான் ஒன்பதரையா? ப்ப்ச்ச்.."

"மணி என்ன?"
"பத்து..."
"கொஞ்ச நேரம் வெளியே உட்காரவா?.."

"மணி என்ன?"
"பத்து பத்து.."
"தூக்கம் வருது, உள்ளே போய் படுக்கவா?"

"மணி என்ன?"
"உங்களுக்குப் பசிக்குதா? சமையல் ஆச்சு. சோறு ஊட்டவா?.."
"வேணா இன்னும் மணியாகல..."

"மணி என்ன?"
"ஐய்யோ கடவுளே.. என்ன இது, ஓயாம..!!?"

"என்னை அனுப்பிடு, என்னால் உனக்குத்தொல்லை. மணி கேட்டா கூட தப்பா போகுது இந்த வீட்டில்...!!"

வயதானால்... மணி கேட்க அவ்வளவு ஆசையா? நான் என்ன செய்ய... !!

6 கருத்துகள்:

  1. ஹா... ஹா....

    கவிதை ரொம்ப சூப்பர்...

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் எதற்கு நேரம் தெரியவேண்டும்? முதியவர்களுக்கு நேரமே நகராது என்பதால் மணி கேட்டுக்கேட்டு 'நகர்த்துகிறார்கள்' பாவம்.அது நகர்வதை கொஞ்சம் அனுபவிக்கிறார்கள் அவ்வளவுதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமையில் நேரம் கூட நரகமாகிறது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பொழுது நல்லபடி போகலாம்,படிக்கலாம் எழுதலாம் பாடலாம். எங்களின் உறவுக்கார பாட்டி ஒருவர், பகவத்கீதையில் இறுதிக்காலத்தைக் கழித்தார். சத்தமாகப்படிப்பார், எல்லோருக்கும் விளங்கும். பார்க்க ஆசையாய் இருக்கும். சிலர் நல்ல காலத்திலேயே ஓயாமல் வெட்டிக்கதை பேசி நேரத்தைப்போக்குவார்கள். நகரமுடியாமல் உட்கார்ந்தவுடன், தொடர்ந்து கதைகள் பேசுவதற்கு ஆள் தேவைப்படுகிறது. நமக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அதான் பிரச்சனை. தொடர்ந்து வாருங்கள் சார். நன்றி.

      நீக்கு
  3. நல்ல கதை அக்கா. எனது தாத்தாவோ நடமாடும் நூல் நிலையமாக இருந்தார். உங்கள் கதை மாந்தர்களைப் போலவும் ஆட்கள் இருக்கிறார்கள். எனது வலைப் பதிவினையும் கொஞ்சம் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. முதியவர்களின் வலியை எளிமையாக பதிவு செய்தது அழகு..!

    பதிலளிநீக்கு