செவ்வாய், மார்ச் 05, 2013

மண்ணே உரமாக..

செடிகளுக்கு உரமிட்டேன்.

`என்ன செய்கிறாய் அக்கா, காலையிலேயே?’ கேட்டாள் வேலைக்காரி.

`உரமிடுகிறேன்..’

`அப்படியென்றால்?’

` பலவித கழிவுகளால் செய்யப்பட்ட பொருள் இது. சந்தையில் விற்பார்கள். ஒரு பாக்கெட் மூன்று ரிங்கிட் விதம்.. செடிகளுக்குப் போட்டால், செடிகள் செழிப்பாக வளரும்..’

`ஓ... எங்க ஊரில் (இந்தோனீசியாவில் ஒரு குக்கிராமம்) இப்படியெல்லாம் செய்யாமலேயே, செடிகள் செழிப்பாக வளரும்.’

9 கருத்துகள்:

  1. செடிகள் செழிப்பாக வளர உரம் இட்டேயாக வேண்டும் என்கிற அவசியத்தை இன்று நாம் உண்டாக்கி வெச்சிருக்கோம். அந்தப் பணிப்பெண் சொன்னதோட உட்கருத்து நினைச்சதும் சிரிப்பு வந்துடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கணேஷ்.. உங்களின் புரிதல் மன அறுதல். பிரபல பதிவர் நீங்கள் என் தளத்தையும் எட்டிப்பார்த்தது பின்னூட்டமிட்டமைக்கு மகிழ்ச்சி.

      நீக்கு
    2. //ஆறுதல்// எழுத்துப்பிழை..

      நீக்கு
  2. இயற்கையிலே கிடைத்த பொருட்கள் போய், செயற்கை உரம் இட்டு செடி வளர்க்கிறோம்! கொடுமை தான்....

    பதிலளிநீக்கு
  3. மண்ணே உரமாக.. மனமே மொழியாக ..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

  4. அந்த இந்தோனேசியப் பெண் சொன்னது இங்கும் நடந்தால்
    எவ்வளவு அழகாக இருக்கும்...
    கேரளாவில்..
    ஒரு பழக்கம் இருக்கிறது...
    வீட்டில் வரும் காய்கறிக் கழிவுகளை
    ஒரு தொட்டியில் கொட்டி
    மண்புழுவை அதில் போட்டு மட்க வைக்கிறார்கள்..
    அதன் பின் மட்கியதை எடுத்து தாவரங்களுக்கு இடுகிறார்கள்..
    மண்புழுக்களும் விற்கிறார்கள்...

    பதிலளிநீக்கு