நீ வராத நாட்களில்
பொழுதுபோகவில்லை
இருப்பினும் நீ
பொழுதுபோக்கிற்காக அல்ல....
%%%%%%
குறட்டை
ஒரு மாஸ்டர் பெட்ரூம்’ஐயே
தனதாக்கிக்கொள்கிறது
%%%%%%%
எனக்கு `மிக நல்லவள்’
என்கிற பெயர் எடுக்க ஆசை.
சிலர் -சரியாகத்தான் சொல்கிறார்கள் -
சிலர் பொய் சொல்கிறார்கள்
%%%%%%%%
ஊடலும் போர் அடிக்கிறது
ஆகவே, ஊடல் கொண்டு
நிறுத்திக்கொள்கிறேன்
%%%%%%%%
மனமுழுக்கக் காதல்
உனக்காக அல்ல
எனக்காக
%%%%%%%
நானே நுழைந்து
நானே புகுந்து
நானே தொலைந்து
நானே தேடுகிறேன்
என்னை
%%%%%%%
எல்லோரும் அப்படித்தான்
சொல்கிற நாமும்
அப்படித்தான்..
%%%%%%%%
டிரஸ் போட்டுட்டு
ஒரு சிரிப்பு
தலைவாரிவிட்டு
ஒரு சிரிப்பு
பொட்டுவைத்துவிட்டு
ஒரு சிரிப்பு
பௌடர் போட்டுவிட்டு
ஒரு சிரிப்பு
பர்ஃப்யூம் போட்டுவிட்டும்
சிரிப்புதான்...
காலை மாலை
கண்ணாடி என்ன நினைக்கும்?
ஒரு சிரிப்பு
தலைவாரிவிட்டு
ஒரு சிரிப்பு
பொட்டுவைத்துவிட்டு
ஒரு சிரிப்பு
பௌடர் போட்டுவிட்டு
ஒரு சிரிப்பு
பர்ஃப்யூம் போட்டுவிட்டும்
சிரிப்புதான்...
காலை மாலை
கண்ணாடி என்ன நினைக்கும்?
%%%%%%%
rasanai..
பதிலளிநீக்குகண்ணாடி நினைத்தது மிகவும் பிடித்தது...!
பதிலளிநீக்குகுறட்டை
பதிலளிநீக்குஒரு மாஸ்டர் பெட்ரூம்’ஐயே
தனதாக்கிக்கொள்கிறது
ஹா... ஹா...
கவிதைகள் அருமை.
நல்ல கவிதைகள்..... ரசித்தேன்....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு'மனம் முழுக்கக் காதல் ' கவிதையில் பிரதிபலிக்கிறது...சூப்பர்..