புதன், ஜூலை 24, 2013

இ(ம்)சை அரசர்கள்

இப்போதுவருகிற சில பாடல்களின் மியூஸிக்கில் - போலிஸ் சைரன், அம்புலன்ஸ் அலறல், தீயணைப்பு வண்டியின் சத்தம், கார் வேகமாக ப்ரெக் வைக்கப்படும்போது கேட்கின்ற சத்தம், கார்கள் மோதுகிற சத்தம், ஹாரன் சத்தம்.. போன்ற சத்தங்கள் ஒலிப்பதைப்போல் பாடல்களின் இடையே இசையாகப் புகுத்தியிருப்பார்கள்.

காரில் செல்லுகையில் இதுபோன்ற சத்தங்கள் வருகிறபோது மனம் திடுக்கென்று தடுமாறி சாலையில் கவனம் செல்லாமல் கண்கள் அங்கேயும் இங்கேயும் அலைமோதத் துவங்கிவிடுகிறது.

வானொலியில் ஒலிக்கின்ற பாடல்கள் நின்றவுடன் தான் புரியும் அது பாடலின் இடையே வந்த இ(ம்)சை என்று. இது வாகனமோட்டிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை இ(ம்)சை அரசர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

இங்கே லோகல் மியூஸிக் சேனல் அனைத்திலும் இந்த இரைச்சல்கள் அவ்வப்போது தலைகாட்டத் துவங்கியுள்ளன.

இதனாலேயே இப்போதெல்லாம் வாகனமோட்டும்போது பெரும்பாலும் வானொலியை நான் கேட்பதில்லை.சீடி தான் - நல்ல பழைய பழைய பாடல்களைக்கேட்டுக்கொண்டே ..... என் வண்டி ஓடும்.

ஆல்வேஸ் லவ் யூ, எம்.எஸ்.வி

10 கருத்துகள்:

  1. அதற்குள் பதிவா..பலே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தனயைத்தூண்டியவரே தாங்கள்தானே. எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன், முகநூலில் நீங்கள் போட்ட பதிவைப் படித்தவுடன் பொறி தட்டிவிடவே, பதிவேற்றியும் விட்டேன். நன்றி மது.

      நீக்கு
  2. எம்.எஸ்.வி, இளையராஜாவின் பழைய ராகங்கள் என்றும் இனியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சே.குமார். தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு.

      நீக்கு
  3. எம்.எஸ்.வி. - இளையராஜா - என பல பழைய பாடல்களில் இருக்கும் இனிமை எப்போதும் ரசிக்க வைக்கும். இன்றைய பாடல்களின் இரைச்சல் பிடிப்பதில்லை பலருக்கும்..... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. இரைச்சலே இசையாக தற்போதைய பாடலகள்.

      நீக்கு
  4. வணக்கம் !
    தங்களுடைய தளத்தை இன்றய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
    வைத்துள்ளேன் .இங்கு உங்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன் .
    http://blogintamil.blogspot.ch/2013/07/4.html

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா7/26/2013

    வணக்கம்
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் வருவது முதல் தடவை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரூபன். நன்றி. தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

      நீக்கு