உள்ளூரிலேயே சுற்றிக்கொண்டு, எப்படிச்செல்வதென்று பாதிவழியிலேயே நின்று பாதை கேட்ட ஆள் நான்.
இன்று காலையில் படுபயங்கர வாகன நெரிசல்.
எப்படி எங்கே நுழைந்தாலும் நெரிசல் நெரிசல் நெரிசல்தான்.
பத்து நிமிடத்தில் அலுவலகம் செல்கிற நான், இன்று காலை முக்கால் மணி நேரம் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே மாட்டிக்கொண்டேன்.
பல வாகனங்கள் ஒன்றாக வரிசையாக எதோ ஒரு சாலைக்குள் நுழைவதைப்பார்த்த நானும், அவர்களின் பின்னால் நுழந்துவிட்டேன். நெடுதூரம் கார்கள் வரிசையாக சென்று நாளாபக்கமும் பிரியவே, நான் நடுரோட்டில் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு எங்கே செல்வதென்று எனக்குப் புலப்படவில்லை. அப்போது நான் எந்த இடத்தில் உள்ளேன்.! என் அலுவலகத்திற்கு எப்படிப்போவது.? என்றும் எனக்கே விளங்கவில்லை.
இது என்ன சாலை? எங்கே விளம்பரப்பலகை? என தேடவும் ஆரம்பித்தேன்.
சரி போவோம். எங்கேயாவது சயின்போர்ட் தெரிந்தால் அதன்படி செல்லலாமே, என்று மனம்போனபோக்கில் என் காரும் போனது.
ஒன்றும் புலப்படவில்லை. தூரத்துல் ஒரு பெரிய தண்ணி டாங்கி தென்படவே, அது என்ன தண்ணீ டாங்கி என்று கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்த்தேன்.
`பூச்சோங் பெர்மாய் தண்ணீர் தொட்டி’ என்று மலாய் மொழியில் எழுதியிருந்தது.

அங்கேயே ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, தம்பிக்கு அழைத்தேன். (கணவருக்கு வேண்டாம்- திட்டுவார்)
“டேய், நான் இங்கே பெர்மாய் தண்ணீ டாங்கி முன்னே நிற்கிறேன். எப்படி என் அலுவலகத்திற்குச்செல்வது?”
“அங்கே ஏன் போனே?”
“சரியான ஜேம்டா.. எங்கே போனாலும் நகரமுடியல..”
“இன்னிக்கு எல்லா இடத்திலேயும் ஜேம்தான். கூச்சாய்லாமாவில் பயங்கர கார்விபத்தாம்.! நீ ஏன் பெர்மாயில் போய் மாட்டிக்கிட்ட.? அங்கே இன்னும் அதிகமான ஜேம் ஆச்சே.”
“இல்லியே..கார்களே இல்லை.. நான் மட்டும்தான் இருக்கேன்.”
“அப்படியா, இன்னும் கொஞ்சதூரம் போ அப்புறம் தெரியும்.!! அப்படியே நேரா போ... ஒரு ஷாப்பிங் complex வரும்.. அதைத்தாண்டி நேரா போ, நீ போர இடம் வந்திடும்.. அதுக்கப்புறம் உனக்கே தெரியும் எப்படிப்போகவேண்டுமென்று.. ஒகேவா?”
“ஹம்ம்ம், ஒகே.”
காரை செலுத்தினேன். கொஞ்சதூரம் சென்றவுடன் அங்கேயும் பயங்கர நெரிசல். கார்கள் நகரவேயில்லை. நத்தைபோல் ஊர்ந்தன. பெட்ரோல் எல்லாம் தீர்ந்துபோய் அதுவேறு சிக்னல் காட்டிக்கொண்டிருந்தது.
தம்பி சொன்ன ஷாப்ப்ங்க கம்லெஃக்ஸ் வந்தது. அவன் `நேராக போ’ என்றான் ஆனால் பல கார்கள் வலது பக்கம் சென்று கொண்டிருந்தன. அதைப்பார்த்தவுடன் நானும் வலது பக்கம் செல்லத்துவங்கிவிட்டேன். கொஞ்சதூரம் சென்றவுடன் மீண்டும் குழப்பம். பாதை புரிபடவில்லை... எப்படி?
அழைத்தேன் தம்பியை. எடுத்தான். விவரத்தைச்சொன்னேன்.
“ஏய்ய்ய்ய்ய்... (எரிச்சலுடன்) நான் உன்ன எந்த ரோட்டை எடுக்கச்சொன்னேன், எங்கே போனே நீ யீயீயீ? திரும்பு திரும்பு.. யூ டெர்ன் எடுத்து மீண்டும் அந்த ரவுண்டபோர்ட்டுக்கே வா. நான் சொன்னபாதையிலேயே போ.. காலையிலே உயிரை வாங்கிக்கிட்டு..!” முனகியபடி தொலைபேசியை வைத்தான்.
திரும்பி வந்து, அந்த சாலைவழியாக நுழைந்து, ஒன்பதுமுப்பதுக்குத்தான் ஆபிஸ் வந்தேன்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
புதிய தேவதையைவிட பழகிய பிசாசே மேல்.
பழகிய பிசாசு.... யாரைச் சொல்றீங்க! :)
பதிலளிநீக்குசாலையைச் சொன்னேன் வெங்கட்.. :)))) நன்றி சார். வணக்கம்
பதிலளிநீக்குநெரிசலான நகர்ப்புற வீதிகளில் நம் எல்லாருக்கும் ஏற்படும் ஒரு சம்பவத்தை கலை நயத்துடன் நகைச்சுவையுடன் சொல்லோவியமாகப் படைத்துள்ள ஸ்ரீ விஜயாவுக்கு பாராட்டுகள்.....................டாக்டர் ஜி.ஜான்சன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபுதிய தேவதையைவிட பழகிய பிசாசே மேல்.
ஹா... ஹா...
அதான் நேர போகச் சொல்லியிருகார்ல அப்புறம் மறுபடியும்... பட்டாலும் நாம எல்லாம் திருந்த மாட்டோங்கிறது சரிதானோ...
பதிலளிநீக்குஹா..ஹா.. பட்ட கஷ்டத்தை சுவைபட சொல்லியிருக்கீங்க...
//புதிய தேவதையைவிட பழகிய பிசாசே மேல். //
இதைவிட வேறென்னா உதாரணம் சொல்ல முடியும்..? சூப்பர்