மண்மணம் கமழ்கின்ற எழுத்தே படைப்பாளி கொடுக்கின்ற சிறந்த எழுத்தாகப்பார்க்கப் படுகிறதாம்.!!
தமிழ்நாட்டில் வட்டாரவழக்கு மொழியினை தமது கதையினில் நுழைத்து மண்மணம் கமழ படைத்து வெற்றி வாகை சூடிவிடுகிறார்கள்.
எங்களின் சூழல்? மண்மணம், முன்பு வாழ்ந்த எஸ்டேட் வாழ்க்கைதான். அது இப்போது இல்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக எஸ்டேட் சூழலை நுழைத்து மண்மணம் கமழ கதை எழுதுகிறேன் என்று கற்பனைப் புனைவுகளை படைக்கின்றார்களே. சரியா?
வட்டாரவழக்கு என்கிறபோது நாங்கள் மலாய் ஆங்கில மொழியினை பேச்சுவழக்கில் கலந்துபேசுவதான ஒரு நிலையில் கதைதனை வடித்தால், அக்கதை தேர்வாகமலேயே போய்விடலாம் - காரணம் இங்கே தமிழ் மொழியில் கலப்பு என்பது அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
அதற்காக - மலேசியாவில் இருக்கின்ற நாங்கள் தமிழ்நாட்டு சூழலை கற்பனை செய்து வைத்துக்கொண்டு, மண்மணம் கமழ கதை எழுதினால் அது பதினாறு வயதினிலே என்கிற சினிமா சூழலை கண்முன் நிழலாட வைத்துவிடுமே. அந்தத் தோரணையில் வந்த கதைகளை நான் படித்ததுண்டு.
நாட்டின் தற்போதைய மண்மணமாகப்பட்டது - தினசரி நடக்கின்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வே.
அதை நம் கதைகளில் நாம் வடிக்கின்றபோது, அது பலநாடுகளில் அன்றாடம் நடக்கின்ற பொது நிகழ்வாகிப்போகிறது. அங்கே மண்மணம் தெரிய வாய்ப்பில்லை.

ஆக, மண்மணம் கமழ்கின்ற கதைகள்தான் சிறந்த கதை என்கிற கருத்து புலம்பெயர்ந்து வாழ்கிற உலக தமிழர்களுக்கு பொருந்துமா?
பலநாடுகளின் மண்மணம் - நாகரீகம் வளர்ந்துவிட்ட நிலையில் எல்லாமும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பட்சத்தில்.. மண்மண கதைகளை இன்னமும் எதிர்ப்பார்ப்பது சரியா?
மண்மணம் கமழும் கதைகள் ஒரு ஈர்ப்பு இருக்கும்....
பதிலளிநீக்குஇருக்கலாம், இருப்பினும் பலவேளைகளில்- மாடு, எருமை, கோழி, ஆடு, சாணி, புழுக்கை, மண்புழு, மண்வெட்டி, கத்தரிக்காய் என நீளும் ஒரு வெங்காயமும் இருக்காது.
நீக்குநன்றி குமார்.. மீண்டும் வருக.
பதிலளிநீக்கு//எங்களின் சூழல்? //
உங்கள் கருத்து சரிதான் சகோ.. மண்மணம் என்பது கிராமிய நடையில் அவர்களின் பேச்சு நடையில் இருக்கவேண்டும் என்கிற எழுதாத விதியுள்ளது. மண்மணம் என்பது ஒரு இனத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தாலேபோதும். மலாய் கலாச்சாரத்தைப் பற்றி எழுதினால் அதுவும் மண்மணம்தான்.
நல்ல விளக்கம் சகோ. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
நீக்குஅன்புள்ள விஜயா, அவர் ( கல்கி ஆசிரியர் ) பேசும்போது நான் அங்குதான் இருந்தேன். அவர், மண்ணும் ஊரும், மண் சார்ந்த கதைகள், மண்ணோடு சேர்ந்த வாழ்க்கை என்ற சொற்றொடர்கள் பயன்படுத்தி, சிறப்புக் கதையை எவ்வாறு தேர்வு செய்தார் என்பதை விளக்கினார். மண் மணம் , மண் வாசனை என்பதெல்லாம் என்பதெல்லாம் அந்த வட்டார வழுக்குகளையும் இயல்புகளையும் பிரதிபலிப்பதாகக் கருதப்பட்டது. கருதவும் படுகிறது. இது தமிழ் நாட்டுக்குப் பொருந்தும். இங்கு அதற்காக மறைந்துபோன தோட்டப்புறம்தான் மண்வாசனை என்பது தேவையில்லாத ஒன்றாகும். இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் தமிழர்களின் நிலை என்ன என்பது பற்றி எழுதுவதும் மண் வாசனையே என்பதே எனது கருத்து. மற்ற மக்களின் மத்தியில் நமது நிலை என்ன , நாம் பெற்றுள்ள உரிமைகள், பெறாமல் போன உரிமைகள், நமது மொழி, பள்ளிகள், கலைகள், கலாச்சாரம் காக்கப்படுகின்றனவா அல்லது அழிந்து வருகின்றனவா என்பவை அனைத்துமே இங்குள்ள மண் வாசனைதான்.....டாக்டர் ஜி.ஜான்சன்.
பதிலளிநீக்கு