மலேசியாவில் குண்டர்கும்பல் நிருவகிப்பில் தமிழர்கள் முதல் நிலை என்கிற செய்தி நாடுதழுவிய நிலையில் தீப்போல் பரவி வருகிறது.
சொந்த வீட்டைப் புதுப்பிப்பதற்குக் கூட அவர்களுக்கு பணம் செல்லுத்தவேண்டிய துர்பாக்கியம் என்று சொல்கிறார்கள்.
இரவுவிடுதி, தனிநபர் காவல், கார் இழுப்பது, மதுபாணக்கடை, வட்டிமுதலைகளில் எடுபிடிகள், போலிஸ்காரர்களின் அடியாட்கள் என பட்டியல் நீள்கிறது.
`கைகளை’ நன்கு பயன்படுத்திக்கொண்டு இப்போது போட்டுதள்ளுகிறார்கள். எங்குபார்த்தாலும் தமிழர்கள் குண்டர் கும்பல் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுகிறார்கள் இல்லையேல் சுட்டுத்தள்ளுகிறார்கள்.
நேற்றுவேலை முடிந்து வீடுதிரும்பிய நம்ம பையன் ஒருவனின் வேனை மடக்கி விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் போலிஸ்காரர்கள். சாலையில் பார்த்தேன்.
கைகளில் பச்சை குத்தி அந்த பச்சை துரதிஷ்டவசமாக போலிஸ் தேடுகிற குண்டர்கும்பலின் சின்னமாக இருந்துவிட்டால், நீங்கள் உள்ளே வைக்கப்படுவீர்கள் இல்லையே சுட்டுத்தள்ளப்படுவீர்கள். கவனம்.!
கவலையாகத்தான் இருக்கிறது. அலுவலகத்தில் தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி பேசிக்கொள்கிறபோது மனது வேதனைப்படுகிறது.
முகமூடிபோட்டுக்கொண்டு பல நாசவேலைகளைச் செய்தவர்கள் எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற ஒரு நிலை உருவாகிவிட்டது.
தமிழர்களே தமிழர்களைப் பழித்துச் சொல்லுகையில் இன்னும் அதிக கோபம் வருகிறது எனக்கு.
இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு தமிழர் மற்றொரு தமிழரை மலாய்க்காரகளின் மத்தியில் பழித்துக்கூறியதைக் கண்டு மனம் வெதும்பி, அவனை `நல்லா’ கேட்டேன்.
கஷ்டப்பட்டு உழைக்கின்றார்கள். உடல் கிண்ணென்று பலசாலிபோல் இருப்பான்கள். வீரன்போல் மீசையை முறுக்குவார்கள். அவர்களின் உழைப்பின் வேகம் உடம்பில் தெரியும். அவர்கள் எல்லோரும் குண்டர் கும்பலில் உள்ளவர்களாம். வாய்கூசாமல் சொல்கிறார்கள்.
இந்த நிலை யாரால்? குண்டர்கும்பலில் தமிழர்கள் அதிகம் ஈடுபடுவது எதனால்? ஏன் இந்த நிலை? என்ன இல்லை இங்கே? இப்படியெல்லாம் ஊடங்களில் கேட்டுவிட்டு, கேள்விகளோடு நிற்கிறது செய்தி..
ஐம்பத்தாறு ஆண்டுகள் சுதந்திரம் அடைந்துவிட்ட மலேசியாவில் நாங்கள்..
(தமிழர்கள்)

எது எப்படியோ சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழர்களின் உழைப்பால் உயர்ந்த நாடு மலோசியா
பதிலளிநீக்குமலேசியாவின் சுதந்திரதின வாழ்த்துக்கள் மலேசிய நாட்டு மக்கள் அனைவருக்கும்
பதிலளிநீக்கு