வியாழன், ஆகஸ்ட் 08, 2013

புரியவில்லை

ஒரு சம்பவம் சொல்கிறேன்...

என் தோழியும் அவளின் தோழியும் வெளியே சென்றுள்ளனர். இவளின் ஐந்து வயது மகனையும் அழைத்துக்கொண்டு. மகன் (குண்டுப்பையன்) பிடிவாத குணம் கொண்டவன். மற்றவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்பவன்..

வழிநெடூக மகன் இருவரிடமும் வம்பு பண்ணிக்கொண்டே வந்துள்ளான். `அதுவேண்டும் இதுவேண்டும்’ என்று. அதை அவர்கள் வாங்கிக்கொடுக்காதபோது, மற்றவர்முன்னிலையில் அழுது கத்திப்புரண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றான்.

அவ்வேளையில் அவனுக்கு யாரேனும் எதாவது தொந்தரவு செய்தால், அவன் உடனே அவர்களைத் தாக்கத்துவங்கிவிடுவான்.. குண்டாக இருப்பதால் அடி இடி மாதிரி விழும். என் தோழி கூட பலநாள் அவனிடம் அடிவாங்கியுள்ளாள்.

இவனைச் சமாளிப்பதற்காக, கூட வந்திருந்த அவளின் தோழி அவனுக்கு ஒரு சாக்லட் வாங்கித்தந்துள்ளார். சாக்லட்’ஐ விரைவாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சாக்லட் வேண்டுமென்று கேட்க, சாக்லட் வாங்கித்தந்த தோழி அவனை திட்டியுள்ளார்.

`என்ன நீ இப்படி தொந்தரவு செய்யும் பையனாக இருக்கின்றாய்.? நல்லபடி இருந்தால், ஆண்டி மீண்டும் உனக்கு சாக்லட் வாங்கித்தருவேன்.’, என்றதும், அவனுக்குக் கோபம் வர, பொதுவில் பலர் முன்னிலையில் தோழியை பலங்கொண்டு தாக்கத்துவங்கிவிட்டான். தாயிற்கும் அடி உதை. இதை சற்றும் எதிர்ப்பாராத தாயும் தோழியும் அரண்டுபோய் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துவந்துள்ளனர்.

வரும் வழியில் வாங்கியப்பொருட்களை ஒவ்வொன்றாக காருக்குள் அங்கேயும் இங்கேயும் விட்டெரிந்து தொடர்ந்து ரகளை செய்து காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டே, போராடி வீடு வந்து சேர்ந்துள்ளார்கள்.

ஏன் இப்படி சில குழந்தைகள்.? என்ன பிரச்சனையாக இருக்கும்? தாயும் தகப்பனும் அற்புத மனிதர்கள்...

8 கருத்துகள்:

  1. ஹி..ஹி..இந்தப் பிரச்சனை எனக்கும் இருந்தது சகோ....நிறைய வீட்டிலும் இருக்கிறது. இதை பெற்றோர்கள் கண்டுகொள்ளாததற்கு முக்கிய காரணம் ' பையன் கொஞ்சம் துரு..துரு ' னு இருக்கிறான் என்கிற நெனைப்பு. ஆனால் அதுவே பிறகு பிடிவாத குணமாக மாறிவிடுகிறது.

    என் மகனுக்கு இரண்டரை வயது. ஒன்றரை வயதிலிருந்து செம வால்... கோபம் வந்தால் எதுவும் கண்ணுக்கு தெரியாது.. சமீபத்தில் வலுக்கட்டாயமாக Pre-nursery சேர்த்து விட்டேன்.. மற்ற பசங்களோடு பழகியதால் தற்போது ஓரளவு அடங்கிவிட்டான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டரை வயது பரவாயில்லை.. ஐந்து ஆறு வயது பையன் கோரமாக ஆக்ரோஷமாக பார்த்துக்கொண்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பிறரை அடிக்கின்ற பழக்கமெல்லாம் கொஞ்சம் too much. something wrong bro.

      நீக்கு
  2. ஆரம்பத்திலேயே கண்டித்து வளர்க்க வேண்டும்... கூடுதல் செல்லமே பிள்ளைகள் கெடுவதற்குக் காரணம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே ஒரு மகன். பதினைந்து வருடங்கள் கழித்து, டெஸ்ட் ட்யூப் மூலமாக பிறந்தவன் - செல்லம்தான் காரணமாக இருக்குமென்று நானும் நினைக்கிறேன்....

      நீக்கு
  3. ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டால் பிறகு பிரச்சனை தான். இங்கே தில்லியிலும் ஒரு நண்பரது மகன் இப்படித்தான்..... எனக்கு முன்னாடியே நண்பர் அடி வாங்குவதைப் பார்த்து இருக்கிறேன்! :(

    பதிலளிநீக்கு
  4. அதிகம் கண்டித்து வளர்க்கப்படுகிற பிள்ளைகளும்,அதிகம் கண்டிக்கப்படாத பிள்ளைகளும் மிகவும் தறிகெட்டுப்பொவதாய் சொல்வார்கள்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய சிக்கல்தான் குழந்தை வளர்ப்பு. இப்படி என்றாலும் தப்பு. அப்படியென்றாலும் தப்பு.

      நீக்கு