வியாழன், செப்டம்பர் 19, 2013

அதிர்ச்சியில் உரைந்தேன்

காலையிலே பத்திரிகையில் வந்த ஒரு கொடூரமான செய்தியினைப் படித்துவிட்டு இரத்தமே உரைந்துபோனது எனக்கு.

ஏழுவயது மகன் மற்றும் ஐந்துவயது மகளோடு நாற்பது ஐம்பது வயது மதிக்கதக்க தம்பதிகள் (அக்குழந்தைகளின் பெற்றோர்கள்) என நான்கு பேரும் தற்கொலை முயற்சியில் சாக முயன்று, நிலவரம் கொலைக்குற்றமாகி அத்தம்பதிகளை போலிஸ் பிடித்துச்சென்றுள்ளது.

செய்தி இதுதான்.

11 ஆம் தேதி செப்டம்பர் - தற்கொலை முயற்சி, முதல் முறையாக மாஸ்டர் பெட்ரூம்மின் உள்ளே கரியடுப்பினை மூட்டி, அதன் புகையில் குடும்பமே ஒன்றாகச் செத்துவிடலாம் என்று திட்டம் தீட்டி, அதே போல் செய்து, இரவு படுக்கச்சென்றுள்ளனர். மறுநாள் காலையில் அப்புகை அவர்களை ஒன்றும் செய்யாமல் இருக்கவே, அனைவருக்கும் எந்த பாதிப்புகளும் இல்லாமல் சாதாரணமாகவே துயில் எழுத்துள்ளனர்.

12 ஆம் தேதி செப்டம்பர் - இரண்டாவது முறையாக அதே முறையிலான தற்கொலை முயற்சியினை மீண்டும் செய்துள்ளனர் அத்தம்பதிகள். விடிந்ததும் எழுந்து பார்க்கையில், அனைவரும் உயிருடன் இருக்க,  ஐந்து வயது மகள் மட்டும் மரணமுற்றிருக்கின்றாள்.

13 ஆம் தேதி செப்டம்பர் - இறந்த அக்குழந்தையை தூக்கிக்கொண்டு, அருகில் இருக்கின்ற கிள்ளான் ஆற்றில் குத்தித்து தற்கொலை செய்ய மூன்றாவது முறையாக முயன்று, அதுவும் சரியாக அமையாததால்,
செய்வதறியாமல் அக்குழந்தையை ஐந்து நாட்கள் வீட்டிலேயே கிடத்தி வீட்டைப்பூட்டிக்கொண்டு அனைவரும் உள்ளேயே இருந்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒருவாரகாலமாக அக்குழந்தை பாலார் பள்ளிக்கு வராமல் இருந்தததால், விவரமறிய, அப்பாலர்பள்ளி ஆசிரியை அவர்களின் வீடு தேடி வந்து அழைப்புமணியை அழுத்தியுள்ளார். கதவைத்திறந்த ஏழுவயது சிறுவன், அக்குழந்தையின் அண்ணன்.. `என் தங்கை இறந்துவிட்டாள்’ என்று சொல்லி ஆசிரியரைப்பார்த்து கண்ணீர் வடித்துள்ளான்.
அதிர்ச்சியில் உரைந்தபோன ஆசிரியை, உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தையின் உடல் கட்டிலில்...

போலிஸில் புகார் செய்து, பெற்றோர்களைப்  பிடித்துக்கொடுத்துள்ளார்  ஆசிரியை.

இன்றைய சீன நாளிதழில்களில் இதுதான் பரபரப்பை ஏற்படுத்திய முதன்மை தலைப்புச்செய்தி.

தற்கொலை முயற்சிக்குக் காரணம் - வேலையில்லாமல் திண்டாடிய குடும்பத்தலைவனுக்கு அதிகமான கடன் தொல்லை.
 

11 கருத்துகள்:

  1. அடப் பாவமே... என்ன ஒரு கோழைத்தனம்... மிகவும் வருத்தப்பட வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. ஒன்றும் அறியா குழந்தை இறந்தது பாவம்...

    பதிலளிநீக்கு
  3. சீன அரசிடம் தூக்கு தண்டனை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. (அவர்களை தண்டிக்க வேண்டி அல்ல..)

    பதிலளிநீக்கு

  4. அடக்கொடுமையே... மலேசியாவிலேயா சகோ...? மலாய் குடும்பமா ..தமிழ் குடும்பமா..?

    பதிலளிநீக்கு

  5. //வேலையில்லாமல் திண்டாடிய குடும்பத்தலைவனுக்கு அதிகமான கடன் தொல்லை. //

    இது போன்ற செய்தி முன்பு சிங்கபூரிலும் நடந்து இருக்கிறது. எல்லாமே கடன் பற்று அட்டைதான் காரணம் என நினைக்கிறேன்... சரியான விழிப்புணர்வு இல்லாதது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்...

    பதிலளிநீக்கு