செவ்வாய், அக்டோபர் 29, 2013

பட்டாசு தடை


 காலையில் வெடிக்காதே;
வேலையத்தவன் வெடிக்கிறான் பாரு
என்பார்கள்..

மதியம் வெடிக்காதே;
கைக்குழந்தைகள் உறங்கும்
தொந்தரவு

மாலையில் வெடிக்காதே;
வேலை முடிந்து ஓய்வெடுப்பவர்களுக்குத்
தொல்லை..

இரவில் வெடிக்காதே;
ஆட்கள் உறங்குகின்றார்கள்

பட்டாசுகளை வாங்கிக்கொடுத்த
தந்தை போடும் கட்டளை இது..!

வெடி வெடிப்பவர்களுக்கு
அபராதம்
அரசாங்கம் ஏற்கனவே போட்டுவிட்டது
தடை உத்தரவு

எதையும் வெடிக்காமல்
வெடிகளைப்  பத்திரமாக வைத்துக்கொண்டு
ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றான்
பையன்

தீபாவளிக்காக..

3 கருத்துகள்:

  1. பாவம் தான்...

    இதற்கு ஏன் வாங்கித்தர வேண்டும்...?

    பதிலளிநீக்கு
  2. ஒரு சிறுவனின் உணர்வு..வெகு இயல்பாக...! அருமை

    மலேசியாவில் வெடி வெடிப்பதற்கு அனுமதி உண்டா சகோ...? சிங்கப்பூரில் வெறும் மத்தாப்பு , பூத்திரி மட்டும்தான்.

    பதிலளிநீக்கு