வியாழன், ஜூன் 04, 2015

குடும்பத்தலைவன்கள்

சமைப்பதற்கு இஷ்டம்
சட்டிபானை கழுவவேண்டுமே..!?
கடைக்குச்செல்ல விருப்பம்
சாமான்களை கார்வரை தூக்கிவரவேண்டுமே.!?
மார்க்கெட் செல்ல பிடிக்கும்
வாங்கியவற்றை தூய்மைப்படுத்தி வைக்கவேண்டுமே..!?
துணிமணிகள் துவைக்கலாம்..
மடித்துவைக்கவேண்டுமே..!?
செடிவளர்க்க ஆசை
தினமும் பாதுகாக்கவேண்டுமே..!?
வளர்ப்புப்பிராணிமேல் பிரியம்
நமக்கே தலைசாய்க்கும் வரை வேலை..!?
வேலைக்குச்சென்றும்..
இதெல்லாம் நம்வேலை
உதவிக்கு வரவில்லை
கால் ஆட்டி
வாலையும் ஆட்டுகிறார்கள்..
சில குடும்பத்தவளைகள்..

2 கருத்துகள்:

  1. //உதவிக்கு வரவில்லை
    கால் ஆட்டி
    வாலையும் ஆட்டுகிறார்கள்..
    சில குடும்பத்தவளைகள்.. //

    ஹா..ஹா... இந்த உதவிகூட செய்யவில்லை என்றால் அவர்கள் எல்லாம் குடும்பத்தவளைகள் தான்.

    ஆனால்' நம்ம ' வீட்ல இந்த வேலைகள் எல்லாம் அடியேன் செய்வதால் இது எனக்கான கவிதை போல் உள்ளது :-)

    பதிலளிநீக்கு
  2. தலைவன் தவளையா மாறிட்டானோ!

    பதிலளிநீக்கு